(கருநிறமுடைய)கடோற்கசனானவன்,-'எனை தரு மருத்சுதன்- என்னைப்பெற்ற தந்தையும் வாயுகுமாரனுமான வீமசேனன், எரிதலை அரக்கனொடு எதிரி ஆய் - நெருப்புப்போன்ற தலைமயிரை (செம்பட்ட மயிரை)யுடைய இவ்விராக்கதனுடனே சமமாய்நின்று எதிர்த்து, சமர் முனைதல்-போரை முயன்றுசெய்தல், கீழ்தொழில்- இழிவான செயலாம்; (ஆதலால்),. உரத்துடன் மலைத்து இவன் உயிரை - மாட்டுவன்-வலிமையோடு (நான்) எதிர்த்துப்பொருது இவனுயிரைமாள்விப்பேன்,' என- என்று சொல்லி, உருத்து - கோபங்கொண்டு, உறுதி தோற்ற - (தனது) பேரூக்கம்புலப்படும்படி, உடற்றினன் - (அலாயுதனுடன்) எதிர்த்துப் பொருபவனானான்; (எ - று.) அசுவத்தாமன் பரத்துவாசமுனிவனது புத்திரனானதுரோணனுடைய மகனாதலால், 'பரத்துவசனுக்குறவுரிய கோத்திரி' என்றார், உறவு உரிய என்ற பிரித்து-உறவினால் உரிமைபெற்ற என்றலு மொன்று. பரத்துவசன் = பரத்வாஜன்; வடசொல்.கோத்திரி-குலத்திற்பிறந்தவன்-அஸ்வம் தாம என்ற வடசொற்கள் - முறையேகுதிரையென்றும் ஒளி யென்றும் பொருள் படுதலால், அகவத்தாம னென்ற பெயரை'பரிச்சுடருடைப்பெயர்' என்றார்; இது, லக்ஷிதலக்ஷணை தலை,மயிர்க்கு-இலக்கணை. பி-ம்: உறுதிபோற்றவே. (597) 201.- அலாயுதனும் கடோற்கசனும் ஆரவாரித்தல். இடிக்குரலெனத்தலையுரகர்சாய்த்தனரெதிர்க்குரலெழுப்பின குலசிலோச்சயம் வெடித்ததுமுகட்டுயர்கடகமேற்றலைவிபத்தெனவிபத்திரள் வெருவுதாக்கின துடித்தனரியக்கரொடமரர்தைத்தியர்துணுக்கெனவிமைத்தனர் திசைகள்காப்பன ரடிக்கடிபடித்துகள்பரவைதூர்த்தனவரக்கனுமரக்கனும மரிலார்க்கவே. |
(இ-ள்.) அரக்கன்உம் அரக்கன்உம் - இராக்கதராகிய அலாயுதனும் கடோற்கசனும், அமரில் - போரில், ஆர்க்க - ஆரவாரஞ்செய்ததனால்,-உரகர்- (கீழுலகத்துள்ள) சர்ப்பஜாதியார், இடி குரல்என - (அம்முழக்கத்தை) இடியோசையென்றுகருதி, தலை சாய்த்தனர்-அஞ்சியொடுங்கி(த் தமது) முடிசாய்த்து மூர்ச்சித்தார்கள்; குல சிலோச்சயம் - குலபருவதங்கள், எதிர் குரல் எழுப்பின - (அவ்வொலிக்கு) எதிரொலியை உண்டாக்கின; முகடு உயர் கடகம் மேல் தலை - மேலிடம் உயரப்பெற்ற அண்டகடாகத்தினது மேலிடம், வெடித்தது - பிளவுபட்டது;இபம் திரள் - (திக்கு) யானைகளின் கூட்டம், விபத்து என - ஆபத்துநேர்வதென்று எண்ணி, வெருவு தாக்கின - அச்சமிகப்பெற்றன; இயக்கரொடுஅமரர் தைத்தியர் - யக்ஷர்களும் தேவர்களும் அசுரர்களும், துணுக்கென -திடுக்கிட்டு, துடித்தனர் - (உள்ளமும் உடலும்) பதைத்தார்கள்; திசைகள் காப்பவர் -திக்பாலகர்கள், இமைத்தனர் - (அச்சத்தால் தமது இமையாக்கண்களை)இமைத்தார்கள்; படி துகள்-பூமியிலுள்ள புழுதிகள், அடிக்கடி-, பரவைதூர்த்தன-(அதிர்ச்சிமிகுதியால் நிலத்தினின்று - எழும்பிக்) கடலிற்படிந்து அதனை நிறைத்தன;(எ - று.) |