மின்னிறுத்துநெடுவாளி விசயனையுங்குமரனையு முன்னிறுத்திநடுநின்றான்முரசநிறுத்தியகொடியோன் |
(இ-ள்.) முரசம்- பேரிகையின் வடிவத்தை, நிறுத்திய - எழுதிப்பதித்த, கொடியோன் - துவசத்தையுடைய தருமன்,- மாருதியை - வீமனை, பின் நிறுத்தி - (தனது) பின்புறத்திலே நிற்கச் செய்து, போர் அணியில் - பெரிய அணிவகுப்பிலே, (ஆங்காங்கு), பல வகை ஆம் மன் நிறுத்தி - பலவகைப்பட்ட அரசர்களை நிற்கச் செய்து, இரு பால்உம் - இரண்டு பக்கங்களிலும், மருத்துவர் மைந்தரை நிறுத்தி - அசுவிநீதேவர்களின் குமாரர்களான நகுலசகதேவர்களை நிற்கச்செய்து, மின் நிறுத்தும் - ஒளியை (த்தன்னிடம்) நிலைநிறுத்திய [நீங்காமற்கொண்ட], நெடு வாளி -நீண்ட அம்புகளையுடைய, விசயனைஉம் குமரனைஉம் -அருச்சுனனையும் (அவன்)மகனான அபிமனையும், முன் நிறுத்தி-, நடு நின்றான் - (தான்) நடுவில் நின்றான்;(எ-று.) (49) 5.- துரியோதனன்பக்கத்துச்சேனை கருடவியூகமாக வகுக்கப்படுதல் இப்பான்மற்றிவர்நிற்பவிரவுரைத்தமொழிப்படியே தப்பாமற்றிகத்தகுலத்தலைவனுஞ்சஞ்சத்தகருந் துப்பார்வெஞ்சிலைத்தடக்கைத்துரோணன்முதலனைவோரும் அப்பால்வந்தணிகருடவியூகம்வகுத்தணிந்தாரே. |
(இ -ள்.) இ பால் - இவ்விடத்து, இவர் - இவர்கள், நிற்ப - (இவ்வாறு) நிற்க, அ பால் - எதிர்ப்பக்கத்தில், இரவு உரைத்த மொழி படிஏ - இராத்திரி சொன்ன வார்த்தையின்படியே, தப்பாமல் - தவறாமல், திகத்தகுலம் தலைவன்உம்- திரிகர்த்ததேசத்து அரசர்கூட்டத்துக்குத் தலைவனான சுசர்மாவும், சஞ்சத்ததகர்உம் - ஸம்சப்தகர்களும், கதுப்புஆர் - வலிமைநிறைந்த, வெம்சிலை - கொடிய வில்லை யேந்திய, தட கை - பெரியகைகளையுடைய, துரோணன் முதல் அனைவோர்உம் - துரோணன் முதலிய எல்லாவீரர்களும், வந்து-, அணி கருட வியூகம் வகுத்து அணிந்தார் - சேனையை அழகிய கருடவியூகமாக அணிவகுத்துநின்றார்கள்; (எ -று.) கருட வியூகம் - கருடன்வடிவமாகச் செய்யும் படைவகுப்பு ; இதுவும் கீழ்ச்சருக்கத்தில் கூறிய சகடவியூகமும், போகமென்னும் வியூகத்தின் பேதங்களிற் சேர்ந்தன. முதனூலிலும் கருடவியூகம் வகுத்தாகவே யுள்ளது. மற்று- அசை; வினைமாற்றுமாம். பி-ம்; மகரவியூகம். (50) 6.- திரிகர்த்தபதி முதலியோர் அருச்சுனனை யறைகூவிப்பொருதல். காரணிபோற்பொருப்பணிபோற்காற்றணிபோற்களிற்றணியுந் தேரணியும்பரியணியுந் திரிகத்தகுலபதியும் நாரணகோபாலரெனுநராதிபரும்வாள்விசயன் காரணமாவறைகூவிக்கடுங்கொடுங்கார்முகம்வளைத்தார். |
(இ -ள்.) கார் அணி போல் - மேகங்களின் வரிசை போன்ற, களிறு அணிஉம் - யானைகளின் வரிசையும், பொருப்பு அணிபோல் - மலைகளின் வரிசைபோன்ற, தேர் அணிஉம்- தேர்களின் வரிசையும், |