பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்361

203.-கடோற்கசன் அரக்கர்களுடன் அலாயுதனை அழித்தல்.

சிலைப்படையயிற்படைதெளியும்வாட்படைதிறற்பலபடைக்
                              கலவலிமைகாட்டியும்,
வலப்படவளைத்துமல்வலிமைகாட்டியும் வயத்தொடுசயப்
                               புயவலிமைகாட்டியு,
முலைப்படுகனற்சினமுதிர்கடோற்கசனுடற்றியவரக்
                        கரையொருவர்போற் பொரு,
தலப்படையரக்கனதுயிரைமாய்த்தனனடற்றொடையடைசி
                                     வீழ்த்தியே.

     (இ-ள்.)     உலை படு கனல் - உலைக்களத்திற்பற்றி யெழுகிற
நெருப்புப்போல, சினம் முதிர் - கோபம் மிக்க, கடோற்கசன்-,- சிலை படை -
வில்லாகிய ஆயுதமும், அயில் படை - வேலாயுதமும், தெளியும் வாள் படை-
தேர்ந்தெடுத்த வாளாயுதமும், திறல் பல படைக்கலம் - வலிமையையுடைய மற்றும்
பல ஆயுதங்களும் என்பவற்றின், வலிமை - பலத்தை, காட்டிஉம் -
உபயோகித்தும்,-வலம் பட வளைத்து - பலம் பொருந்த (ப் பகைவரை)க் கட்டி,
மல் வலிமைகாட்டிஉம் - மற்போரின் வலிமையை உபயோகித்தும்,- வயத்தொடு
சயம் புயம்வலிமை காட்டிஉம் - பலத்தோடு வெற்றியைக்கொண்ட தோள்களின்
திறமையை உபயோகித்தும், - உடற்றிய அரக்கரை - (தன்னோடு) போராடிய
இராக்கதர்களை,ஒருவர்போல் பொருது - ஒருத்தரை (யெதிர்த்தாற்) போலவே
(பலரையும்) எதிர்த்துப்போர்செய்து (அழித்து),- (பின்பு), அடல் தொடைகளின்
தொடை அடைசி வீழ்த்தி -வலிமையையுடைய (தனது) தொடைகளால் (எதிரியின்)
தொடைகளை நெருக்கி(அவனை)க் கீழே தள்ளி, அலம் படை அரக்கனது
உயிரைமாய்த்தனன் -அலாயுதனென்னும் அவ்வரக்கனது உயிரை யொழித்தான்;

     'தொடைகளின் தொடை அடைசி வீழ்த்தி'- (தனது) அம்புகளினால்
(பகைவருடைய) அம்புகளை விலக்கித் தள்ளி யென்றும், வரிசைகளாக அம்புகளைச்
செலுத்தி(ப் பகைவரை) வீழ்த்தி யென்றுமாம். படைக்கலவலிமைகாட்டியும்,
மல்வலிமைகாட்டியும் புயவலிமைகாட்டியும், பொருது, வீழ்த்தி மாய்த்தனன்
என்க.                                                       (600)

204.-தேவர்கள் பலரும் கடோற்கசனைப் புகழ்தல்.

புரத்தினை யெரித்தவர் கயிலை மாக்கிரி புயத்தினி
                  லெடுத்திசை புனைபராக்ரமன்,
வரத்தினில் வனத்திடை திரியு நாட்சில மனித்தரொ
                டெதிர்க்கவும்வயிரி யாய்த்தில,
னுரத்துடன் மருச்சுத னுதவு ராக்கத னொருத்தனு
               மெனைப்பல ருடனு மேற்றெதிர்,
துரத்தலின் மரித்தன னிவனெ னாப்பலர்துதித்ததி
                 சயித்தனர் சுரரும் வாழ்த்தியே.

     (இ-ள்.) புரத்தினை எரித்தவர் - திரிபுரத்தை எரித்தழித்தவரான சிவபிரானது,
கயிலை மா கிரி - பெரிய கைலாசபருவதத்தை, புயத்தினில் எடுத்து - (தனது)
கைகளினால் நிலை பெயர்த்து, இசை புனை - கீர்த்திபெற்ற, பராக்ரமன் -
பராக்கிரமசாலியான இராவணன், வரத்தினில் - பலவரங்களைப்பெற்றிருந்தும்,
வனத்திடைதிரியும் நாள் சில மனித்தரொடு எதிர்க்கஉம் வயிரி ஆய்த்திலன் -
காட்டிற்சஞ்சரித்தகாலத்தில் இரண்டு