மனிதர்களுடனே எதிர்த்தற்கும் வீரமுள்ளவனாயினானில்லை; (அங்ஙனமன்றி), மருத்சுதன் உதவு இராக்கதன் ஒருத்தன்உம் - வாயுகுமாரனான வீமன் பெற்ற அரக்கனாகிய கடோற்கசனொருத்தன்மாத்திரம், உரத்துடன் - வலிமையுடன் ஏற்று எதிர் துரத்தலின் - எதிர்த்து எதிரிலே தொடர்தலால், எனை பலருடன்உம் இவன் மரித்தனன் - மிகப்பல அரக்கரோடும் இவ்வலாயுதன் இறந்தான், எனா - என்று பலர் சுரர்உம் - தேவர்கள்பலரும், துதித்து - புகழ்ந்து, வாழ்த்தி - (கடோற்கசனை) ஆசிர்வதித்து, அதிசயித்தனர் - வியந்தார்கள்; (எ - று.) சிவபிரானது கைலாசிரியைப் பெயர்த்தெடுத்துப் புகழ்கொண்டும் பலவரங்கள்பெற்றும் இராமலட்சுமணர்களாகிய இரண்டு மனிதர்களுடனே எதிர்த்து வெல்லுதற்குத் திறமையற்றவனாயொழிந்த ராக்ஷஸராஜனான இராவணனினும் இக்கடோற்கசனாகிய அரக்கன் தனியேபொருது அரக்கரநேகரைத் தொலைத்து அவர்கட்குத் தலைவனான அலாயுதனையுங் கொன்றதனால் மேம்பட்டவ னென்று வியந்து கொண்டாடின ரென்க. பலபராக்கிரமங்களிற்சிறந்த ராக்ஷஸசிரேஷ்டரான இராவணனுக்கும் கடோற்கசனுக்கும் வேறுபாடு தோன்றக் கூறினது. வேற்றுமையணி.'வனத்திடை திரியுநாள் சிலமனித்தரொடெதிர்க்கவும் வயிரியாய்த்திலன்' என்றது-இராமலட்சுமணர் வனவாசஞ்செய்கையில் மாரீசனுடன் வந்த இராவணன்அவர்களைப்பொருது வென்று சீதையைக் கவர்ந்து செல்லமாட்டாமல் வஞ்சனையாகத்தொழில்செய்தமைபற்றியென்க. ஆய்த்திலன் என்ற எதிர்மறைமுற்றில், து - சாரியை. பி-ம்: புரக்குலம். (601) வேறு. 205.-கடோற்கசன் பலவுருவங்கொண்டு பொருதல். அன்று கங்குலிற் பலபதி னாயிர மரக்கரோ டலாயுதன் றன்னைக், கொன்று வெம்பணிக் கொடியவன் சேனையைக் குரங்குகொள் கோதைபோற் கலக்கி, யொன்று பத்துநூ றாயிரங் கோடியா முருவு கொண்டவுளிதேர் களிறாள், சென்றி மைப்பொழு தளவையில் யாவருந் தென்புலம் படருமாசெற்றான். |
(இ-ள்.) (கடோற்கசன்),- அன்றுகங்குலில்-அன்றைநாளிரவிலே, பல பதினாயிரம்அரக்கரோடு அலாயுதன்தன்னை-அநேகம் பதினாயிரக்கணக்கான இராக்தர்களுடனேஅலாயுதனையும், கொன்று-, வெம் பணி கொடியவன் சேனையை -கொடியபாம்புக்கொடியையுடையவனான துரியோதனனது சேனையை, குரங்கு கொள்கோதை போல் கலக்கி - குரங்கு கைக்கொண்ட பூமாலையைப்போல நிலைகலங்கச்செய்து,-ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடி ஆம் உருவு கொண்டு- மிகப்பலவான வடிவங்கொண்டு,- சென்று-எதிர்த்துப்போய், இவுளி தேர் களிறு ஆள் - சதுரங்க சேனைகளும், யாவர்உம் - (அச்சேனைவீரர்) பலரும், இமைபொழுது அளவையில்-ஒருமாத்திரைப்பொழுதளவிலுள்ளே, தென் புலம் படரும்ஆ - தென்திசையிலுள்ள தான யமலோகத்துச் சேரும்படி, |