செற்றான் - அழித்தான்; (எ - று.)-குரங்குகொள் கோதை - உலகநவிற்சியணி. இக்கவி-முதற்சீரும் ஏழாஞ்சீரும் மாச்சீர்களும், மற்றையைந்தும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடிநான்குகொண்ட எழுசீராசிரியவிருத்தம். (602) வேறு. 206.-கடோற்கசன் பலவகைமாயை செய்தல். சண்டமா ருதமா யெழுந்திடு மொருகாற் சலதியா யெழுந்திடு மொருகாற் கொண்டலா யுதகம் பொழிந்திடு மொருகாற் குன்றமா யுயர்ந்திடு மொருகான் மண்டுபா வகனா யெரிந்திடு மொருகால் வல்லிரு ளாய்வரு மொருகாற் பண்டுதான் வல்ல மாயைகள் பலவும் பயிற்றினன் மாருதி பயந்தோன். |
(இ-ள்.) மாருதி பயந்தோன் - வாயுகுமாரனான வீமன் பெற்ற மகனாகிய கடோற்கசன், ஒரு கால் - ஒரு முறை, சண்டமாருதம் ஆய்-பெருங்காற்று வடிவமாய்,எழுந்திடும் - மேல்வீசுவான், ஒரு கால்-, சலதி ஆய் - கடல்வடிவமாய், எழுந்திடும்- பொங்குவான்; ஒருகால்-, கொண்டல் ஆய்-காளமேகவடிவமாய், உதகம்பொழிந்திடும் - நீர்மழைபொழிவான்; ஒருகால்-, குன்றம் ஆய் - மலைவடிவமாய்,உயர்ந்திடும் - உயர்ந்துகாணப்படுவான்; ஒருகால்-, மண்டு பாகவன் ஆய்-மூண்டெழுகிற நெருப்பின்வடிவமாய், எரிந்திடும் - எரிந்து தோன்றுவான்; ஒருகால்-,வல் இருள் ஆய் வரும் - வலிய (அழித்தற்கரிய) இருளாய் அடர்ந்துவருவான்; (இவ்வாறு),பண்டு தான் வல்ல மாயைகள் பலஉம் பயிற்றினன் - முன்னந்தான்தேர்ந்துள்ள பலவகைமாயைகளையுஞ் செய்திட்டான்; (எ - று.) இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவுமுள்ள பதினைந்துகவிகள் இரண்டு நான்கு ஏழாஞ் சீர்கள் மாச்சீர்களும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள். (603) 207.-கவிக்கூற்று; அப்பொழுது உண்டான இரத்தப்பெருக்குமிகுதி. இம்பர்வாளரக்கனிணத்தொடுபிணந்தின்றிடங்கொள்வாய் கொடுமடுத்திலனேற், றும்பிமாபரிமாவீரரென்றிவர்மெய் துணித்தலிற்சொரிந்த செஞ்சோரி, யம்புராசிகளிலண்டகோளகையி லடங்குமோவண்டமும்பிளந்திட், டும்பர்வாரியையுங்கலக்குமேமிகவு முண்மைநாமுரைசெயும் பொழுதே. |
(இ-ள்.) நாம் உண்மை உரைசெயும் பொழுது - நாம் மெய்யாகக் கூறுமளவில்,-இம்பர் - இப்போர்க்களத்தில், வாள் அரக்கன்-கொடிய அரக்கனான கடோற்கசன், நிணத்தொடு பிணம் தின்று - கொழுப்புக்களுடனே பிணங்களைப்புசித்து, இடம் கொள் வாய்கொடு மடுத்திலன்ஏல் - பரந்தவாயினால் (குருதியைக்) குடித்திடானாயின், தும்பிமா பரிமா வீரர் என்ற இவர்மெய் துணித்தலின் சொரிந்த செம் சோரி-யானை குதிரை வீரர்என்ற |