இவர்களது உடம்பைத் துணித்தலாற் பெருகிய சிவந்த இரத்தம், அம்புராசிகளில் அண்டகோளகையில் அடங்கும்ஓ-கடல்களிலும் அண்டகோளம் முழுவதிலும் அடங்குமோ? (அடங்காமல்), அண்டம்உம் பிளந்திட்டு- அண்டகோளத்தையும்உடைத்துக்கொண்டு, உம்பர் வாரியைஉம் மிகஉம் கலக்கும்ஏ -வெளியிலுள்ள பெரும்புறக்கடலையும் மிகுதியாகச்சேர்ந்து கலங்கச்செய்யுமே;(எ - று.) கடோங்றகசன் தான் கொன்ற பிராணிகளின் உடலை உணவாகத்தின்று அவற்றின் இரத்தத்தை நீராகப்பருகின னென்ற உண்மையை இங்ஙனம் வெளியிட்டபடி. 'தும்பிமா பரிமா வீரர் என்ற இவர்மெய்'- இருதிணையுங் கலந்து சிறப்பினால் உயர்திணை முடிபைப்பெற்ற திணைவழுவமைதி, பி- ம்: அரக்கர் பிணத்தொடுநிணந். (604) 208,-கடோற்கசனை வேலினாற்கொல்லும்படி துரியோதனன் கர்ணனோடுகூறல். கட்செவியெழுதுங்கொடியுடைக்கொடியோன்கன்னனைக்கடைக் கணித்தருளி, விட்சுரபதிவந்தன்றுனக்களித்த வேலினால்வீமன்மாமகனை, யுட்செறிசினமும்வலிமையுமுயிரு முடனழிந்தும்பரூர்புகுதப், புட்செறிதொடையாய்கொல்கெனவிரைவிற் புகைந்துநராப் பொறியெழப்புகன்றான். |
(இ-ள்,) கட்செவி எழுதும் கொடி உடை கொடியோன் - பாம்பின் வடிவமெழுதப்பெற்ற துவசத்தையுடைய துஷ்டனான துரியோதனன்,-கன்னனை கடைக்கணித்தருளி-கர்ணனை அன்போடு பார்த்து,-'புள் செறிதொடையாய் - வண்டுகளடர்ந்த மாலையையுடையவனே! விண் சுரபதி - சுவர்க்கத்தில் வாழ்கிற தேவேந்திரன், அன்று - அந்நாளில் (முன்பொருசமயத்தில்), வந்து,-உனக்கு-, அளித்த- கொடுத்தருளின, வேலினால்-, வீமன் மா மகனை - வீமனது சிறந்தபுத்திரனானஇந்தக்டோற்கசனை, உள் செறி சினம்உம் வலிமைஉம் உயிர்உம் உடன் அழிந்துஉம்பர் ஊர் புகுத - மனத்தில் நிறைந்த கோபமும் தேக பலமும் உயிரும் ஒருசேரஒழியப்பெற்றுத் தேவர்களதுவீரசுவர்க்கத்துச் சேரும்படி, கொல்க-கொல்வாயாக,'என-என்று, விரைவின்-விரைவாக, நா புகைந்து பொறி எழ புகன்றான் - நாக்குப்புகைகொண்டு தீப்பொறியெழும்படி கூறினான்; (எ - று.) பாண்டவர்க்குத் தூதுசென்றபொழுது கண்ணன் ஏவியபடி இந்திரன் அந்தணவடிவங்கொண்டு சென்று கர்ணனை இரந்து அவனதுகவசகுண்டலங்களைப் பெற்றவுடன் சிறந்ததொருவேற் படையை அவனுக்குக் கைம்மாறாகத் தந்தனனென அறிக. புள் - இங்கே, வண்டு. (605) 209.-அதற்குக் கர்ணன் உடன்படாமை. புகன்றபோதருக்கன்புதல்வனுமாயப் போரிதுகங்குலிப்பொழுதே யகன்றிடுமகன்றாலிலவனுயிர்பிறிதோரம்பினாலகற்றுவித்திடலாம் |
|