இகன்றபோர்முனையினாளையிவ்வடிவே லெறிந்து நானிமையவர்க்கிறைவன் மகன்றனுருயிர்கொன்றுனதுவெண்குடைக்கீழ்வைப்பனிவ் வையகமென்றான். |
(இ-ள்.) புகன்றபோது-(இங்ஙனம் துரியோதனன்) சொன்ன பொழுது,- அருக்கன்புதல்வன்உம் - சூரியகுமாரனான கர்ணனும்,-(அத்துரியோதனனை நோக்கி),-'இதுமாயம் போர்-(அரக்கனான கடோற்கசன் செய்யும்) இப்போர் மாயையினாற்செய்யும்போராம்; கங்குல்-(அரக்கர்க்குவலிமை மிகுங்காலமான) இராப்பொழுது, இப்பொழுதுஏஅகன்றிடும் - விரைவிலே நீங்கும்; அகன்றால் - நீங்கிவிட்டால், (உடனே), இவன்உயிர் பிறிது ஓர் அம்பினால் அகற்றுவித்திடல் ஆம் - இவனுடையஉயிரைவேறோரம்பினால் (எளிதில்) ஒழியச்செய்திடலாம்; நாளை - நாளைக்கு, இகன்றபோர் முனையில் - எதிர்த்துச்செய்யும் போரிடத்திலே, நான்-,இ வடி வேல் எறிந்து-கூரிய இந்த வேலாயுதத்தை வீசி, இமையவர்க்கு இறைவன்மகன்தன் ஆர்உயிர்கொன்று-தேவேந்திரனது புத்திரனான அருச்சுனனது அழித்தற்கரிய உயிரையழித்து,இவையகம் உனது வெள் குடை கீழ் வைப்பன்-இந் நிலவுலகமுழுவதையும்உன்னுடைய புகழுள்ள ஆளுகையின் கீழ் (த் தடையற) வைப்பேன்,' என்றான்-என்றுசொன்னான்; அருச்சுனனைக் கொல்வதற் கென்று வைத்திருக்கிற வேலைக் கொண்டு இவ்வரக்கனைக் கொல்லேனென்று மறுத்தனனென்க. இந்தவேல் கடோற்கசனைத் தவறாமற்கொல்ல வல்லதென்று சொல்லி இந்திரன்கொடுத்தாகக் கிருட்டிணன் தூதுசருக்கத்தில் வந்துள்ளது; அங்கு, "வெலற்கருந்திறல்விசயன்மேலொழித்துநீ..... கடோற்கசக்காளை தன்னுயிரே,யிலக்குவந்தெதிர்மலைந்தபோது இதற்கு"எனக் குறிப்பிட்டு இந்திரன் சொற்றதாகவே யுள்ளது. அங்ஙனிருந்தும், கர்ணன் அருச்சுனனை இலக்காக்கொண்டு பேசுவது அதற்கு முரணேயாகும். இனி, 'விசயனையொழித்துநீ' என்று கூறியதாலேயே, அவனையும் இவ்வேல் தவறாது கொல்லும் எனக் கொண்டு கூறினானுமாம். இது, மேல் கண்ணன் கூறுவதற்கும் பொருந்தும். கடோற்கசனது மாயப்போர் பகலில் அங்ஙனஞ்செல்லாதெனக் கொண்டு'கங்குலகன்றால் இவனுயிர் அகற்று வித்திடலாம்' என்றான். (606) 210.-துரியோதனன்வற்புறுத்தக் கர்ணன்கடோற்கசன்மீது வேலெறிதல். என்றலுமரசன்யாமுமெம்படையு மிரவிடைப்பிழைக்க நீயிவனைக் கொன்றுபோர்பொருதுசிலைவிசயனையுங்கொல்லுதியென மனங்கொதித்துக் கன்றலுமவ்வேலக்கணத்தவன்மேற்காலவெஞ்சூல மொத்தெறிந்தான் தென்றலுநிலவுரிகரெனத்தன்னைச்சேர்ந்தவரிளைப் பெலாந்தீர்ப்பான். |
(இ-ள்.) என்றலும் - என்று (கர்ணன்) சொன்னவுடனே, அரசன் - துரியோதனன்,- 'யாம்உம் எம் படைஉம் இரவிடை பிழைக்க-நாமும் நமது சேனையும் இவ்விரவிலே தப்பிப்பிழைத்திடுமாறு, நீ இவனை கொன்று, - நீ(அவ்வேலினால்) இவ்வரக்கனை (இப்பொழுது) கொன்று போர் பொருது சிலை விசயனைஉம் கொல்லுதி - (பின்பு) போர்செய்து வில்லில்வல்ல அருச்சுனனை |