பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்369

பொருள்வைப்பணி. மற்றைப் பாண்டவரதுபெருமைக்கும் வலிமைக்கும்
அருச்சுனன்முக்கியகாரணமென்பதுபற்றி அவன்பிழைக்கப்பெற்றதனை, மற்றவர்
'பெருமையும்வலியும் நல்வினைப்பயத்தாற்பெற்றனம்' என்று பாராட்டினர். (611)

215.-துரோணன் பலஅரசரோடு விராடனையும் துருபதனையும்
தலைதுணித்தல்.

இராவணன்படுபோர்க்களமெனக்கிடந்தவிந்தவெங்களத்திடைமீண்டு
மராவுயர்துவசனாணையால்வரிவில்லாரியனனீகினியுடன்போய்
விராடனும்யாகசேனனுமுதலாம்வேந்தரோடெதிர்ந்தமர்லமலைந்து
தராதிபர்பலரோடவ்விருவரையுஞ்சரங்களாற்சிரங்களைத்தடிந்தான்.

     (இ-ள்.) இராவணன் படு போர் களம் என கிடந்த - இராவணன்
இறந்துவிழுந்த யுத்தகளம்போலிருந்த (மிகப்பலஅரக்கர்இறந்துவிழப்பெற்ற), இந்த
வெம் களத்திடை - இந்தக்கொடிய போர்க்களத்திலே, மீண்டும்-, அரா உயர்
துவசன்ஆணையால் -  பாம்புவடிவத்தை உயரநிறுத்திய கொடியையுடையவனான
துரியோதனனது கட்டளையினால், வரி வில் ஆரியன் - கட்டமைந்த வில்
வித்தையில்தேர்ந்த ஆசாரியனான துரோணன், அனீகினியுடன் போய்-
சேனையுடனேசென்று,விராடன்உம் யாகசேனன் உம்முதல் ஆம் வேந்தரோடு
எதிர்ந்து அமர்மலைந்து - விராடனும் துருபதனும் முதலான அரசர்களுடனே
எதிர்த்துப்போர்செய்து, தராதிபர் பலரோடு அ  இருவரைஉம் - பல
அரசர்களுடனே அந்தஇரண்டுபேரையும், சரங்களால் சிரங்களை தடிந்தான் -
அம்புகளினால் தலைகளைத்துணித்தான்; (எ - று.)                  (612)

216.-திட்டத்துய்மன் 'மறுநாள் துரோணனைக் கொல்வேன்' எனல்.

துருபதன்மடிந்தவெல்லையிற்றிட்டத்துய்மனும்வெகுண்டுளஞ்
                                        சுடப்போ
யிருபதமரசர்முடிகமழ்முனியையேன்றுவஞ்சினமெடுத்துரைத்தான்
பொருபகைமுனையிலெந்தையையென்முன்பொன்றுவித்
                                 தனையுனைநாளை
நிருபர்தமெதிரேதின்மகன்காண நீடுயிரகற்றுவனென்னறே.

     (இ-ள்.) துருபதன் மடிந்த எல்லையில் - துருபதராசன் இறந்தவளவிலே,-
திட்டத்துய்மன்உம் - (அவன்மகனான)த்ருஷ்டத்யும்நனும்,-வெகுண்டு-கோபித்து,
உளம் சுட-மனந்தபிக்க, போய்-சென்று,-இருபதம் அரசர் முடிகமழ் முனியை
ஏன்று-இரண்டுபாதங்களிலும் அரசர்களது முடியில் மணம் வீசப்பெற்ற
துரோணாசாரியனையெதிர்த்து,-'பொரு பகை முனையின்-போர் செய்கிற
பகைவர்களுடைய முன்னிலையிலே, எந்தையை - எமது தந்தையான துருபதனை,
என் முன் - எனதுஎதிரிலே, பொன்று வித்தனை -  அழித்தாய்; (ஆதலால்),
உனை - உன்னை, நாளை-  நாளைக்கு, நிருபர்தம் எதிரே-அரசர்கள்
முன்னிலையிலே, நின்மகன் காண-உனது புத்திரனான அகவத்தாமன் பார்க்க
(அவனெதிரிலே), நீடு உயிர் அகற்றுவன்- நெடுநாள் வாழுந்தன்மையதான உயிரை
ஒழிப்பேன்,'என்று-,வஞ்சினம் எடுத்துஉரைத்தான் - சபதவார்த்தைகளை
யெடுத்துச்சொன்னான்; (எ - று.)