பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்37

காற்று அணிபோல் - காற்றின் வரிசைபோன்ற, பரி அணிஉம்-
குதிரைகளின்வரிசையும், திரிகத்த குல பதிஉம் - திரிகர்த்தர் கூட்டத்து அரசனும்,
நாரண கோபாலர் எனும் - நாராயணகோபாலரென்கிற, நர அதிபர்உம் -
அரசர்களும், வாள் விசயன் காரணம் ஆ - ஆயுதப் பயிற்சியில்வல்ல அருச்சுனன்
விஷயமாக, அறைகூவி -போர்செய்ய அழைத்துக்கொண்டு, கடு கொடு கார்முகம்
வளைத்தார் - மிகக் கொடுமையான (தம்) வில்லை வளைத்து வந்தார்கள் ;
( எ -று.)

     விசயன்காரணமா அறைகூவி- அருச்சுனனைத் தம்முடன் போருக்கு வலிய
அழைத்து என்றபடி. ' காரணிபோற்பொருப்பணி போற் காற்றணிபோல்' என்ற
உபமானங்கள், முறையே ' களிற்றணியுந் தேரணியும் பரியணியும்' என்ற
உபமேயங்களோடு இயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள். அணிகளும்,
பதியும், அதிபரும் வளைத்தார் - திணைவிரவி யெண்ணிச் சிறப்பினால் உயர்திணை
முடிபுஏற்றது; [நன். பொது. 27.] நாராயண கோபாலர் - கண்ணனுக்குப்
பதினாறாயிரம் கோபஸ்திரீகளிடம் பிறந்தவர்கள். கீழ்த் துரியோதனன் கண்ணனைப்
படைத்துணையழைக்கப் போனபோது அவனால் துரியோதனுக்குத் துணையாகக்
கொடுக்கப்பட்டனர் இவரென அறிக. நாராயணன் - திருமால், கோபாலர்-
இடைச்சாதியார்; இவ்விருவர்சம்பந்தமு முள்ளதனால், நாராயணகோபாலரென்று
இவர்க்குப் பெயர். நாராணன் - நாராயணன் : சிருஷ்டிப் பொருள்களுக்கெல்லாம்
இருப்பிடமானவ னென்றும், பிரளயப் பெருங்கடலை
இருப்பிடமாகவுடையவனென்றும் பொருள்படும். கோபாலர் - பசுக்களைக்
காப்பவர.்                                                   (51)

7.- தருமனைக் காக்க ஏற்பாடுசெய்து விடைபெற்றுக்கொண்டு
சென்று அருச்சுனன் அறைகூவினார்மேல் அம்புமழை பொழிதல்.

ஆர்த்துவருமவர்நிலைகண்டரசனைநீரிமைப்பொழுது
காத்திடுமினெனநின்றகாவலரோடுரைசெய்து
கோத்தருமன்பணித்ததற்பின்கோதண்டமுறவாங்கிப்
பார்த்தனுமன்றவரெதிர்போய்ப்பலவாளிமழைபொழிந்தான்.

     (இ -ள்.) ஆர்த்து வரும் - (இப்படி போருக்கு அழைத்து) ஆரவாரித்துவருகிற,
அவர் - அவர்களது, நிலை - உறுதிநிலையை, கண்டு - பார்த்து, பார்த்தன்உம் -
அருச்சுனனும், அரசனை நீர் இமைபொழுது காத்திடுமின் என - ' யுதிட்டிரராசனை
நீங்கள் ஒருமாத்திரைப்போது பாதுகாத்திருங்கள்' என்று, நின்ற காவலரோடு
உரைசெய்து - (அங்கு) நின்ற (தன்பக்கத்து) அரசர்களுடனே சொல்லி,- கோ
தருமன் பணித்ததன்பின் - அத்தருமராசன் கட்டனையிட்டபின், கோதண்டம் உற
வாங்கி - (காண்டீவமென்னும் தன்) வில்லை நன்றாகவளைத்து, அன்று -
அப்பொழுது, அவர் எதிர்போய் - அவர்களெதிரிற்சென்று, பல வாளி மழை -
அநேக அம்புமழையை, பொழிந்தான்-; (எ-று.)

      வீமன் விராடன் துருபதன் பாண்டியன் நகுலசகதேவர் திட்டத்துய்மன்
திட்டகேது முதலியசோமகர் சிருஞ்சயர் கடோற்கசன் என்னும் இவர்களின் வசத்தில்
தருமபுத்திரனை ஒப்பித்து அருச்சு