ஸ்ரீமந்நாராயணனே யல்லாமல், வானநாடர் முதல்வர் - தேவர் கட்குத் தலைவராகவுள்ளவர், யார் - யாவர் (உளர்)? (எவருமில்லையென்றபடி); (எ - று.) சித் அசித் ஈஸ்வரன் என்ற மூன்றுவகைக் தத்துவங்களைக் கொண்ட சித்தாந்தத்தை உள்ளபடி யுணர்ந்தவரும், நான்கு வேதங்களின் பொருளில் வல்லவரும், ஸ்ரீவைஷ்ணவ விசிஷ்டாத்வை தமார்க்கப் பிரவர்த்தனத்துக்குப் பிரதானஆசாரியராகவுள்ளவரும், திருக்குருகூரென்கிற திருநகரில் திருவவதரித்த பிரபந்நஜநகூடஸ்தருமான நம்மாழ்வாரால் மனத்திலே கொண்டு தியானிக்கப்படுகிற பரமபதநாதனான திருமாலே தேவர்க்கெல்லாந் தலைவனும் முந்தினவனுமான னென்பதாம். சித்-ஆத்மா. அசித்-ஜடம். ஈசன்-முழுதற்கடவுள்-ஸ்ரீவைஷ்ணவ விசிஷ்டாத்வைத சித்தாந்தத்துக்கு உரிய இந்த மூன்று தத்துவங்களின் தன்மையை, தத்வத்ரயம், ஸ்ரீவிஷ்ணுபுராணம் முதலிய நூல்களிற் பரக்கக் காண்க. ருக் யஜு ஸ் ஸாமம் அதர்வணம் என்ற நான்கு வேதங்களின் தேர்ந்தபொருளையும் முறையே திருவிருத்தம் திருவாசிரியம் திருவாய்மொழி பெரியதிருவந்தாதி யென்ற நான்கு திவ்வியப் பிரபந்தங்களாகத் திருவாய்மலர்ந்தருளியமை தோன்ற, 'சதுர்மறைப்புரோகிதன்' என்றார். புரோகிதன் - வை திககாரியங்களை முன்னிருந்துநடத்துபவன். இதுமுதற் பதினொரு கவிகள் - கீழச்சருக்கத்தின் 12-ஆங் கவிபோன்ற எழுசிராசிரியவிருத்தங்கள். (618) 2.-இருதிறத்தவரும் போர்க்கு எழுதல். எடுத்ததீபவொளியுமேனையிருளுமேகவேழுமாத் தொடுத்ததேரருக்கர்சோதிதொழுதுதங்கடொழில்கழித் தெடுத்தகோபமூளநின்றிரண்டுசேனையரசருங் கடுத்துளங்கறுத்துவெய்யகண்சிவந்துகடுகினார். |
(இ-ள்.) எடுத்த தீபம் ஒளிஉம் - ஏற்றியவிளக்குகளின் பிரகாசமும், ஏனை இருள்உம்-(அதற்கு) மாறான இருளும் ஏக-நீங்கிச்செல்ல (சூரியனுதிக்க),-இரண்டு சேனைஅரசர்உம்-இருதிறத்துச்சேனை அரசர்களும்,-ஏழு மா தொடுத்த தேர் அருக்கர்சோதி தொழுது-ஏழுகுதிரைகள் பூட்டிய தேரையுடைய சூரியபகவானது ஒளியைவணங்கி, தங்கள் தொழில் கழித்து-(மற்றும் உதயகாலத்தில்) தாங்கள் கடமையாகச்செய்தற்கு உரிய கருமங்களைச் செய்துமுடித்து, எடுத்த கோபம் மூள நின்று-மிக்ககோபம் பற்றி யெழ நின்று, உளம் கடுத்து கறுத்து - மனம் மாறுபட்டுச் சினந்து, வெய்ய கண் சிவந்து-(அதனாற்) கொடியகண்கள் செந்நிறமடையப்பெற்று, கடுகினார்-(போர்க்கு) விரைந்துசென்றார்கள்; உளங் கறுத்து, கண் சிவந்து - முரண்தொடை, ஏனை யிருள் - விளக்கொளி செல்லாத இடங்களில் தங்கிய இருள் - எடுத்ததீபவொளியு மேனை யிருளுமேக - உடனவிற்சியணி. (619) |