பக்கம் எண் :

374பாரதம்துரோண பருவம்

3.-கண்ணன் அருச்சுனன் முதலியோருடன் போர்க்களஞ்சேர்தல்.

நாலுசாபநிலையும்வல்லநரனும்வீமனகுலனு
நாலுபாகமானசேனைநாதனுஞ்சிரங்களா
நாலுகூறுசெய்துதானுநரனுமுந்தநடவினா
னாலுவேதமுடிவினுக்குமாதியானநாரணன்.

     (இ-ள்.) நாலு வேதம்முடிவினுக்குஉம் ஆதி ஆன நாரணன்-நான்கு
வேதங்களின் தேர்ந்தகொள்கைகட்கெல்லாம்  விஷயமான முதற்கடவுளாகிய
திருமாலின் திருவவதாரமான கண்ணபிரான்,- சாபம் நாலு நிலைஉம் வல்ல-
வில்வளைத்துஅம்பு  தொடுப்பார்க்கு உரிய நான்குவகை நிலைகளுந்தேர்ந்த,
நரன்உம் -  அருச்சுனனும், வீமன் - வீமனும், நகுலனும்-, நாலுபாகம் ஆன
சேனைநாதன்உம்-தேர்  யானை குதிரை காலாளென்று நான்கு பகுதியாகிய
சேனைக்குத் தலைவனான திட்டத்துய்மனும், சிரங்கள்  ஆ -தலைகளாக
(தலைமையாக), நாலு கூறு செய்து - (தம்பக்கத்துச் சேனையை) நான்கு பங்காகப்
பிரித்து, தான்உம் நரன்உம் முந்த நடவினான் - (அவற்றைத்) தானும்
அருச்சுனனுமாக முற்படச்செலுத்தினான்; (எ - று.)-பி-ம்; வீமநகுலரும்.    (620)

4.-வாலவீமனும் சோமதத்தனும் அருச்சுனனால் அழிதல்.

வாலவீமனென்றுபார்மதித்தவாண்மைமன்னனுஞ்
சூலபாசபரணிதன்னொடொத்தசோமதத்தனு
மாலகாலமெனவுருத்தடர்த்தபோரின்முந்துறக்
காலனூரிலேகினார்கிரீடியேவுகணைகளால்.

     (இ-ள்.) வாலவீமன் என்று -  வாலவீமனென்று பெயர் சொல்லப்பட்டு,
பார்மதித்த - நிலவுலகத்தாராற் கொண்டாடப்பட்ட, ஆண்மை -
பராக்கிரமத்தையுடைய,மன்னன்உம்-அரசனும்,-சூலபாசபாணிதன்னொடு ஒத்த -
சூலாயுதத்தையும்பாசமென்னு மாயுதத்தையும் கையிலுடைய யமனோடு சமனான,
சோமதத்தன்உம்-சோமதத்தனென்ற அரசனும், - ஆலகாலம் என உருத்து
அடர்ந்த போரில்-ஆலாகலவிஷம் போலக் கோபித்து நெருக்கிச்செய்த போரிலே,
முந்துற-முற்பட,கிரீடி ஏவு கணைகளால்-அருச்சுனன் செலுத்திய அம்புகளினால்,
காலன் ஊரில்ஏகினார்-யமலோகத்திற் சேர்ந்தார்கள்; (எ - று.) - வாண்மை எனப்
பிரிப்பின்-ஆயுதத் திறமை யென்க. பாசம் - கயிற்று வடிவமான ஆயுதம்,
சோமதத்தன் -பூரிசிரவாவின் தந்தை.                               (621)

5.-அருச்சுனனது போர்த்திறம்.

என்முனென்முனென்றுமன்னர்யாகும்யாருமிகலவே
முன்முனின்றியாவரோடுமூரிவில்வணக்கினான்
வின்முனெண்ணவில்லுமில்லைவெஞ்சமத்துமற்றிவன்
றன்முனெண்ணவீரரில்லையெனவருந்தனஞ்சயன்.