பக்கம் எண் :

பதினைந்தாம் போர்ச்சருக்கம்375

     (இ-ள்.) என்முன் என்முன் என்று-எனக்குமுன்னே (போர்செய்யவேண்டும்)
எனக்குமுன்னே (போர்செய்யவேண்டும்) என்று,  மன்னர் யார்உம் இகலஏ -
பகையரசர்கள்யாவரும் மாறு பட்டுநின்ற வளவிலே, முன் முன் நின்று
ஒவ்வொருவரெதிரிலும் நின்று , யாவரோடுஉம்-அவர்களெல்லாரோடும், மூரி வில்
வணக்கினான்-வலிய வில்லை வளைத்துப் பொருதான்; (யாவனெனில்),- 'வில்முன்
எண்ண வில்உம் இல்லை - (இவனது காண்டீவ)   வில்லின்முன்  (ஒருபொருளாக)
மதிக்கப்படுதற்கு வேறோரு வில்லும் இல்லை; வெம் சமத்து-கொடிய போரில்,
இவன்தன் முன் எண்ண - இவனெதிரில் நன்குமதிக்கப்படுதற்கு, மற்றுவீரர்இல்லை
-வேறொரு வீரரும் இல்லை’,என - என்றுசொல்லும்படி, வரும் -
(சிறப்புடையவனாய்) வருகிற, தனஞ்சயன்-அருச்சுனன்; (எ - று.) பி-ம்: நவிலவே..

     இனி, 'வில்முன் எண்ண வில்லும் இல்லை' என்பதற்கு - இவனது வில்லுக்கு
மேலாக முதலில்வைத்து விரல்மடக்கி யெண்ணுதற்கு வேறொரு வில்லு மில்லை
யென்று உரைப்பினும் அமையும்; 'இவன்றன்முனெண்ண வீரரில்லை,'என்பதற்கும்
இங்ஙனமே கொள்க. முன் முன் இன்றி யாவரோடும் எனப் பிரித்து, (அவர்களை
ஒருபொருளாக மதித்தில னாதலால் அவர்கள்விருப்பின்படி) ஒவ்வொருவர்முன்புந்
தனித்தனி போர்புரியாமல் ஏக காலத்தில் அனைவரோடும் வில்லைவளைத்துப்
போர்செய்தான் என்றுமாம்.                                       (622)

6.-துரோணனது போர்த்திறம்.

ஈரிரண்டுமுகமும்வந்தெதிர்ந்தவீரர்சேனைக
ளீரிரண்டும்வேறுவேறுபட்டுவென்னிடப்புடைத்
தீரிரண்டொர்தொடையில்வாளியேவியேவியிகல்செய்தா
னீரிரண்டுமையிரண்டுமானவிஞ்சையெய்தினான்.

     (இ-ள்.) ஈர் இரண்டும்உம் ஐ இரண்டுஉம் ஆன வீஞ்சை எய்தினான் -
பதினான்குவகையான வித்தைகளை யடைந்துள்ளவனாகிய துரோணன்,-ஈரிரண்டு
முகம்உம் வந்து எதிர்ந்த-நான்கு பக்கங்களிலும் வந்து எதிரிட்ட, வீரர் சேனைகள்
ஈரிரண்டுஉம்- பாண்டவரது சேனைகள் நான்கும். வேறு வேறுபட்டு வென் இட-
சின்னபின்னமாகிய புறங்கொடுக்கும்படி, புடைத்து-மோதி, ஓர் தொடையில்
ஈரிரண்டுவாளி ஏவி ஏவி-தொடுக்குந்தரமொவ் வொன்றிலும் நந்நான்கு
பாணங்களைச் செலுத்தி,இகல் செய்தான்-போர் செய்தான்; (எ - று.)

     இச்செய்யுளின் இறுதியடியிற் குறிக்கப்பட்டவன் துரோணனென்பது
மேற்கூறியது கொண்டு உணரப்படும். பதினான்குவித்தைகள் - வேதம்
நான்கு.
சிஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற
வேதாந்தங்கள்ஆறு, மீமாம்சை தர்க்கம் புராணம் தர்மசாஸ்திரம் என்ற
உபாங்கம்
நான்கு என இவை, ஈண்டு, வாரணா