பக்கம் எண் :

பதினைந்தாம் போர்ச்சருக்கம்377

9.-மற்றும்பலர் மற்றும்பலரோடு எதிர்த்தல்.

முனிவன்மைந்தனிந்திரன்றன்மைந்தனோடுமுடுகினான்
றினகரன்றன்மதலைகாலின்மைந்தனோடுசீறினான்
றனுவின்விஞ்சுதென்னனோடுசகுனிபோர்தொடங்கினா
னினியகண்டமுஞ்சிதைக்குமிறுதிகாலமென்னவே.

     (இ-ள்.) 'இனி-இப்பொழுது, அகண்டம்உம் சிதைக்கும் இறுதி காலம் -
உலகமுழுவதையும் அழிக்கின்ற கற்பராந்தகாலம்,' என்ன - என்று (யாவரும்)
எண்ணும்படி,-முனிவன் மைந்தன் - துரோணபுத்திரனான அகவத்தாமன், இந்திரன்
தன் மைந்தனோடு-அருச்சுனனுடன், முடுகினான்-விரைந்து பொருதான்; தினகரன்
தன் மதலை - கர்ணன், காலின் மைந்தனோடு - வாயுபுத்திரனான வீமனுடன்,
சீறினான் - கோபித்துப் பொருதான்; தனுவின் விஞ்சு தென்னனோடு -
வில்தொழிலிலேமிக்க (சித்திரவாகன) பாண்டியனுடன், சகுனி போர்தொடங்கினான்-;
(எ -று)-'இறுதிக்காலம்' என வலிமிகாதது, செய்யுளோசைநயத்தின் பொருட்டு,
பி-ம்:
செறுக்கும்.                                             (626)

10.-கௌரவசேனை வெல்லுதல்.

எந்தவெந்தமன்னர்தம்மிலிருவராகியமர்செய்தா
ரந்தவந்தவீரர்செய்தவண்மைசொல்லுமளவதோ
முந்தமுந்தவென்றுவென்றுமோகரித்ததெவ்வர்தாம்
வந்தவந்தவழிமடங்கநின்றதவ்வரூதினி.

     (இ-ள்.) எந்த எந்த மன்னர் - எந்தெந்த அரசர்கள், தம்மில் இருவர்
ஆகிஅமர் செய்தார்-(கீழ்க் கூறியபடி) தமக்குள் இரண்டிரண்டு பேராய்ப்
போர்செய்தார்களோ, அந்த அந்த வீரர் - அந்தந்த வீரர்கள், செய்த-,ஆண்மை-
பராக்கிரமச்செயல், சொல்லும் அளவதுஓ-சொல்லுந் தரமுள்ளதோ? (அன்றென்றபடி);
முந்த முந்த வென்று வென்று மோகரித்த தெவ்வர்-முன்னே முன்னே
(பலநாட்களில்) மிகுதியாகச் சயித்து ஆரவாரித்த பகைவர்களாகிய
பாண்டவசேனையார், தாம் வந்த வந்த வழி மடங்க-தாம் தாம் வந்த வந்த வழியே
மீண்டு புறமிட, அ வரூதினி-அந்தக்கௌரவசேனை, நின்றது- (வெற்றிகொண்டு)
நின்றது;(எ - று.)                                               (627)

11.-பாண்டவசேனைதோற்றல்.

தேயு வாளி வருணன் வாளி தேவர் வாலி திண்மைகூர்
வாயு வாளி முதல னைத்து வாளி யாலு மலைதலா
லாயு நூன்கு னிக்கு டைந்த தன்பு மிக்க தந்தையுந்
தாயு மாகி மண்பு ராத தருமன் விட்ட தானையே.

     (இ-ள்.) தேயு வாளி-ஆக்நேயாஸ்திரமும், வருணன் வாளி -
வாருணாஸ்திரமும், திண்மை கூர் வாயு வாளி-வலிமைமிக்க வாயவ்யாஸ்திரமும்,
தேவர் வாளி-(மற்றும்பல) தேவர்களின் அஸ்திரமும், முதல்-முதலான, அனைத்து
வாளியால்உம்-எல்லா அஸ்