பக்கம் எண் :

378பாரதம்துரோண பருவம்

திரங்களினாலும், மலைதலால்-(துரோணன்) போர்செய்ததனால்,-அன்பு மிக்கஉம்
தந்தைஉம் தாய்உம் ஆகி-மிக்க அன்புள்ள தந்தையும் தாயும் போன்று,
மண்புரந்த-இராச்சியத்தை யாண்ட, தருமன்-யுதிஷ்டிரன், விட்ட-செலுத்தின,
தானை-சேனை,-ஆயும்நூல் முனிக்கு-தேர்ந்தெடுத்த (சிறந்த) சாஸ்திரங்களில்
வல்ல (அந்தத்)துரோணாசாரியனுக்கு, உடைந்தது-தோற்று நிலைகுலைந்தது;
(எ - று.)                                                   (628)

வேறு.

12.-அச்சமயத்தில் முனிவர்பலர் துரோணனிடம் வருதல்.

குருவுமக் குருகு லேசன் கொற்றவெஞ் சேனை தானும்
பொருகளங் கொண்டு வானை புனைந்தவ னின்ற போதில்
ஒருவரை யொருவ ரொவ்வா வும்பர்மா முனிவர் யாருந்
துருவனு முவமை சாலாத் துரோணணை வந்து சூழ்ந்தார்.

     (இ-ள்.) குருஉம் - துரோணாசாரியனும், அ குருகுல ஈசன் கொற்றம் வெம்
சேனைதான்உம் - குருகுலத்துக்குத்தலைவனான துரியோதனனது வெற்றியையுடைய
கொடிய அச்சேனையும், பொரு களம் கொண்டு-போர்
செய்யுங்களத்தைவெற்றிகொண்டு, வாகை புனைந்து அவண் நின்ற போதில்-
(அவ்வெற்றிக்கு அறிகுறியாக) வாகைப்பூமாலையைத்தரித்து அப்போர்க்களத்து
நின்றபொழுதில்,-ஒருவரை ஒருவர் ஒவ்வா-ஒருத்தர்க்கு மற்றொருத்தரை உவமை
சொல்லக்கூடாத (ஒப்பில்லாத), மா உம்பர் முனிவர் யார்உம் - சிறந்த
தேவவிருடிகள்பலரும், துருவன்உம் உவமை சாலா துரோணனை-துருவனும்
உவமையாகப்பொருந்தாத (மிக்க சிறப்பையுடைய) அந்தத் துரோணாசாரியனை,
வந்து சூழ்ந்தார் -(இம்மண்ணுலகில்) வந்து சூழ்ந்தார்கள்; (எ - று.)

     இவர்கள் சூஷ்மரூபங்கொண்டு வந்தன ரென்று முதனூலால் அறிக.
துருவன்
-சுவாயம்புவமனுவின்மகனான உத்தாநபாதனுக்குச் சுநீதியென்னும்
மூத்தமனைவியினிடம் பிறந்த குமாரன்; இவன், தன்மாற்றாந்தாயான சுருசியாலும்
அவளுக்கு வசப்பட்ட தன் தந்தையாலும் இளமையிலே உபேக்ஷிக்கப்பட்டு
நகரத்தைவிட்டு நீங்கி வனம்புகுந்து சப்தருஷிகளிடம் மந்திரோபதேசம் பெற்று
ஸ்ரீமகாவிஷ்ணுவை இடைவிடாது தியானித்து, அப்பெருமானருளால்,
மூன்றுலோகங்களுக்கும் மேற்பட்டதும் சகல கிரகநக்ஷததிரங்களுக்கும்
ஆதாரமானதும் அவர்களுடைய ஸ்தாநங்கட்கெல்லாம் அதியுந்நதமுமான
திவ்வியபதவியை யடைந்து வாழ்கின்ற னென்பது, வரலாறு. அப்படிப்பட்ட
துருவனும் உபமானமாகக் கூறுதற்கேற்காத மேம்பாடுள்ளவன் என்று
துரோணனைச்சிறப்பித்துக்கூறினார், நிலவுலகமுழுவதும் ஆளும் அரசர்களான
கௌரவபாண்டவராதியோர்க்குக் குருவாய்ச் சிறந்த துரோணனது நிலைமை -
உலகத்தவரனைவரது நிலைமையினும் மேம்படுதலும், துருவன் கிரகநஷத்ரங்களைச்
செலுத்துந் திறத்