னன் சென்றானென்று பெருந்தேவனார் பாரதத்தால் தெரிகிறது. துருபதராசபுத்திரனும் அதிரதனுமாகிய ஸத்தியஜித்து என்பவனைத் தருமனைக் காக்குமாறு அருச்சுனன் சொல்லிச் சென்றதாக வியாசபாரதம் கூறும். கோதண்டமென்னும் இராமன் வில்லின் பெயர், சிறப்பினால் அருச்சுனன்வில்லைக் குறித்தது; இனி, இச்சிறப்புப்பெயர், பொதுப்பெயராக, வில்லென்றமாத்திரமாகவும் வழங்கிய தென்னலாம். (52) 8.- அருச்சுனன் சஞ்சத்தகரோடு கடும்போர் செய்தல். தூளியேயண்டமுறத்தூர்த்துமுதலகல்விசும்பை வாளியேதூர்க்கும்வகைமலைவாங்குசிலைவாங்கி யாளியேறனையானுமவனிபருங்கவந்தமுடன் கூளியேநடமாடக்கொடுஞ்சமரம்விளைக்குங்கால். |
இதுவும் மேற்கவியும் - குளகம். (இ -ள்.)ஆளிஏறு அனையான்உம் - ஆண்சிங்கத்தை யொத்த அருச்சுனனும், அவனிபர்உம் -(திரிகர்த்தன் முதலிய) அரசர்களும், - முதல் - முதலில், தூளிஏ - (தமது வாகனங்களால் மேலெழுப்பப் பட்ட) புழுதியே, அண்டம் உற - உலகவுருண்டை முழுவதும் செல்லும்படி, தூர்த்து - நிறைத்து, (அதன் பின்பு), அகல் விசும்பை - பரந்த ஆகாயத்தை, வாளிஏ - (தமது) அம்புகளே, தூர்க்கும் வகை - நிறைக்கும்படி, மலை வாங்கு சிலை வாங்கி - மலையொத்த (தம்தம்) வில்லை வளைத்து, கவந்தமுடன் கூளிஏ நடம் ஆட - தலையற்ற உடற்குறைகளும் பேய்களுமே கூத்தாடும் படி, கொடு சமரம் விளைக்கும் கால் - (ஒருவரோடொருவர்) கொடிய போரைச் செய்யும்பொழுது,- (எ-று.) -" சிலையின் குருவந்தான்" என அடுத்த கவியோடு முடியும். மலை யென்பதற்கு - (யாவருங்கண்டு) மலையத்தக்கதென்று காரணமுரைப்பர்; மலைதல் - அஞ்சுதல். இங்கே, மலையென்றது, பரமசிவனுக்கு வில்லான மகாமேருவை, பேய்கள் - அங்கு பிணந்தின்ன வந்தவை. கூளி- பெருங்கழுகுமாம். இவை கூத்தாடுதற்குக் காரணம், அங்கே தமக்கு மிகுதியாக இரை கிடைத்தலால். அதிசயோக்தியலங்காரம். (53) 9.- துரோணன் சயத்திரதன்முதலானார்பலர்சூழத் தேர்மேல் வருதல். கொடித்தலைவேற்சயத்திரதன்சவுபலன்குண்டலன்முதலா முடித்தலைவாளடனிருபர்முப்பதினாயிரர்சூழ விடித்தலைமாமுரசியம்பவிபதுரகப்படைசூழக் கொடித்தலைமான்றடந்தேரான்குனிசிலையின்குருவந்தான். |
(இ-ள்.) கொடிது அலை வேல் - கொடியதாய்ச் சுழல்கிற வேலாயுதத்தையுடைய, சயத்திரதன் - சயத்திரதனும், சவுபலன் - சகுனியும், குண்டலன் - குண்டலனும், முதல் ஆ- முதலாக, முடிதலை - கிரீடமணிந்த தலையையும், வாள் - ஆயுதங்களையும், அடல்- வலிமையையுமுடைய, நிருபர் முப்பத்தினாயிரர் - முப்பதினாயிரம் அரசர்கள், சூழ - சூழ்ந்து வரவும், இடி தலை -இடிபோன்ற முழக்கத்தைத் தம்மிடத்திலுடைய, மா முரசு - பெரிய பேரிகைகள்,இயம்ப |