பக்கம் எண் :

380பாரதம்துரோண பருவம்

என்னும் இவையே யல்லாமல், முனி வரர்க்கு - சிறந்தஇருடி கட்க, உறுதி
உண்டுஓ- நன்மைதருவது வேறுஉண்டோ? துன்னலர் செகுக்கும் போர்உம் -
பகைவர்களையழிக்கின்ற போரும், நிறைதரு வலிஉம் - நிறைந்தபலமும், வாழ்வுஉம்
- செல்வவாழ்க்கையும், நிருபர்தம் இயற்கை அன்றுஓ - அரசர்கட்கு உரிய
இயல்பன்றோ? (எ -று.)

     அந்தணனாகிய நீ அரசர்க்குரியபோரையும் வலிமையையுஞ்
செல்வவாழ்க்கையையுங் கைவிட்டு, முனிவரர்க்குஉரியவேதசாஸ்திரங்கள்
முதலியவற்றைக் கைக்கொள்வாயாக என்றபடி.                        (631)

15.தொடுகணைவில்லும்வாளுந்துரகமுங்களிறுந்தேரும்
விடுகவெஞ்சினமும்வேண்டாவிண்ணுலகெய்தல்வேண்டுங்
கடுகநின்னிதயந்தன்னிற்கலக்கமற்றுணர்வினொன்று
படுகவென்றுரிமைதோன்றப்பகர்ந்தனர்பவமிலாதார்.

     (இ-ள்.) தொடு கணை வில்உம் - தொடுக்கின்ற அம்புகளையுடைய
வில்லையும், வாள்உம் - வாளையும், துரகம்உம் - குதிரையையும், களிறுஉம் -
யானையையும், தேர்உம் - தேரையும், வெம் சினம்உம் - கொடிய கோபத்தையும்,
விடுக - விட்டிடுவாயாக: வேண்டா- (இவை) வேண்டுவதில்லை: விண்  உலகு
எய்தல் வேண்டும் - மேலுகத்தை யடைதல்வேண்டும்: (ஆதலால்) கடுக -
விரைவாகநின் இதயந்தன்னில் கலக்கம் அற்று - உனது மனத்திலுள்ள சஞ்சலம்
ஒழிந்து,உணர்வின் ஒன்று படுக - ஒப்பற்ற பரதத்வஞானத்தில் ஒன்றுபட்டு
நிற்பாயாக, என்று-, உரிமை தோன்ற - (தமக்கு அவனிடமுள்ள) உரிய அம்பு
வெளியாகுமாறு,பகர்ந்தனர் - சொன்னார்கள்; பவம் இலாதார் -
பிறப்பில்லாதவரான அம்முனிவர்கள்;(எ -று.)

     உரிமைதோன்ற - ஸ்வாதந்திரியமாக வென்க; அவனுக்கு உரியகடமை
அவனுக்குப் புலனாகுமாறு என்றலு மொன்று.                         (632)

16.-அப்போது துரோணன் கடும்போரொழிந்து
பொறுமை மேற்கொளல்.

ஆனபோதாசானெஞ்சிலருமறையந்தத்துள்ள
ஞானமும்பிறந்துபோரிலாசையுநடத்தலின்றித்
தூநலந்திகழுஞ்சோதிச்சோமியமடைந்துநின்றான்
யானமும்விமானமல்லாலிரதமேல்விருப்பிலாதான்.

     (இ-ள்.) ஆன போது - இங்ஙனம் முனிவர்கள் உபதேசித்த பொழுது,
ஆசான்- துரோணாசாரியன்,- அரு மறை அந்தத்து உள்ள ஞானம்உம் நெஞ்சில்
பிறந்து -(அறிதற்கு) அரிய வேதாந்தத்தி லமைந்துள்ள தத்துவஞானமும் மனத்தில்
தோன்றப்பெற்று, போரில் ஆசைஉம் நடத்தல் இன்றி - போர்செய்தலில்
விருப்பமும்செல்லுதலில்லாமல், யானம்உம் விமானம் அல்லால் இரதம்மேல்
விருப்பு இலாதான் -வாகனங்களுள்ளும் (வானத்திற் சஞ்சரிப்பதான)
விமானத்தின்மேலே (விருப்பஞ்)செல்வது அல்