யுடைய தருமபுத்திரன், வார் அற வய மா ஓட்டி வயங்கு தேர் கடவி சென்று- (குதிரைகளைக் கட்டிய) தோற்கயிறு அறுபடும்படி வலிய குதிரைகளை விசையாகத்தூண்டி விளங்குகிற (தனது) தேரை நடத்திக்கொண்டு போய், நாவின்- (தனது) நாவினால், பிழை அற பேசுவான் - தவறு இல்லையாகச் சொல்பவனானான்;(எ - று.)-அதனை, அடுத்த கவியிற்காண்க. அசுவத்தாமா இறந்தா னென்று தான் கூறுவதை முழுப்பொய்யாகவன்றிச் சிலேடைவகையாற் சமத்காரமாக அக்கருத்து நிகழக் கூறுதலால் 'பிழையறப் பேசுவான்' என்றார் அத்தன்மையை, அடுத்த கவிவிற் காண்க. (643) 27.- தருமன் பிழையறக் கூறும் வகை. அத்தனேயடுவல்லாண்மையச்சுவத்தாமாவென்னு மத்தவாரணத்துக்கையோமாருதிசிங்கமானா னெத்தனைகோடிச்சேனையிக்களத்திறந்ததிந்த வித்தகன்மலைந்துசெற்றவிரகையென்சொல்வதென்றான். |
(இ-ள்.) 'அத்தனே-தலைவனே! அடு வல் ஆண்மை-(பகையை) அழிக்குங் கொடியவலிமையையுடைய, அச்சுவத்தாமா என்னும்-அசுவத்தாமாவென்கிற, மத்தவாரணத்துக்கு-மதங்கொண்ட யானைக்கு, மாருதி-வீமசேனன், சிங்கம் ஆனான்-சிங்கம்போலாயினான்; ஐயோ! எத்தனை கோடிசேனை - எத்தனைகோடிக்கணக்கான சேனை, இ களத்து இறந்தது-இந்தப்போர்க்களத்திலே (அசுவத்தாமனால்) இறந்திட்டது; இந்த வித்தகன்-இந்தச்சதுரப்பாடுடையவன் (வீமன்), மலைந்து செற்ற-(அவ்வசுவத்தாமவைப்) பொருதுஅழித்த, விரகை - தந்திரத்தை, என் சொல்வது-என்னவென்று சொல்லமுடிவது" என்றான்-என்று (துரோணனைநோக்கிச்) சொன்னான், (தருமன்); (எ -று.) அசுவத்தாமா வென்ற யானையை வீமன் சிங்கம்போல அழித்தான் என்றும், அசுவத்தாமாவாகிய யானையை வீமனாகிய சிங்கம் அழித்திட்டது என்றும் கவர்பொருள்படக் கூறிய நய மறிக. பி-ம்: அத்தனேயெனும் வல்லாண்மை.(644) 28.-அதுகேட்டுத் துரோணன் படைக்கலம் கைவிட்டுநிற்றல். தீதிலானுரைத்தமாற்றஞ்செவிப்படுமளவினெஞ்சிற் கோதிலானெடுத்தவில்லுங்கொடியவெங்கணையும்வீழ்த்திப் போதிலானிறந்தான்போலும்புதல்வனென்றினைதலின்றி யேதிலான்போலநின்றான்யார்கணும்பந்தமில்லான். |
(இ-ள்.) தீதுஇலான் -குற்றமற்றவனான தருமன், உரைத்த- சொன்ன, மாற்றம்- வார்த்தை, செவி படும் அளவில்-காதிற்பட்ட வளவிலே,-நெஞ்சில் கோது இலான்- மனத்திற் குற்றமில்லாதவனான துரோணன்,-எடுத்த வில்உம் கொடிய வெம் கணைஉம் வீழ்த்தி-(தான்)கையிலேந்தியுள்ள வில்லையும் மிகக்கொடிய அம்பு |