சாபாநுக்கிரகச் சொற்களையுடையாயெனினுமாம்; புகழையுடையாய் என்றலு மொன்று. (650) வேறு. 34. | கற்கொண்டு கன்மழைமுன் றடுத்த கண்ணன் கற்கறித்துப் பன்முறித்துத் கழறத் தானு. முற்கொண்ட விரதமறத் தியாருங்கேட்பமுரசுயர்த்தோன் பொய்சொன்னான் முடிவி லந்தச். சொற்கொண்டுவெறுங்கையனா மளவிற்றிட்டத்துய்மனென நின்றகுருத் துரோகி கொன்றான், விற்கொண்டு பொரநினைந்தா லிவனே யல்ல விண்ணவர்க்கு மெந்தைதனைவெல்ல லாமோ. |
(இ-ள்.) கல் கொண்டு - (கோவர்த்தன) மலையைக்கொண்டு, கல்மழை முன்தடுத்த - கல்மழையை முன்பு தடுத்த, கண்ணன்-, கல்கறித்து பல் முறித்து- கல்லைக்கடித்தாற்போலப் பற்களைக் கடித்துக்கொண்டு, கழற-சொல்லவே, முரசு உயர்த்தோன் தான்உம்-முரசக்கொடியை உயர நிறுத்தியவனான தருமபுத்திரனும், முன் கொண்ட விரதம் மறந்து - பழமையாக (த்தான்) கொண்டுள்ள (சத்தியமேபேசுதலாகிய)விரதத்தைத் தவறி, யார்உம் கேட்ப- எல்லாருங்கேட்கும்படி(வெளிப்படையாக), பொய் சொன்னான்; முடிவில்-முடிவிலே (அதன்பின்பு என்றபடி), அந்த சொல் கொண்டு வெறுங்கையன் ஆம் அளவில் - அந்தவார்த்தையை உண்மையாகக்கொண்டு (என்தந்தை படைக்கலமொழிந்து) வறுங்கையனாகுமளவில், திட்டத்துய்மன் என நின்ற குருத்துரோகி - த்ருஷ்டத்யும்நனென்று பெயர்கூறப்பட்டுநின்ற குருத்துரோகியானவன், கொன்றான்- (அவனைக்) கொன்றிட்டான்; (இங்ஙனமன்றி), வில்கொண்டு பொர நினைந்தால்- (என்தந்தை) வில்லைக் கையிற்கொண்டு போர்செய்ய எண்ணினால், இவன்ஏ அல்ல -இந்தத்திட்டத்துய்மனே யல்லன்: விண்ணவர்க்குஉம் - தேவர்கட்கும், எந்தைதனைவெல்லல் ஆம்ஓ - என் தந்தையை வெல்லுதல் இயலுமோ? (இயலா தென்றபடி);(எ - று.)-என்று அசுவத்தாமன் புலம்பினான். கற்கொண்டுகன்மழைதடுத்த, கண்ணன்-'கன் மாரியாகையாலே, கல்லையெடுத்து ரக்ஷித்தான்; நீர் மாரியாகில், கடலை யெடுத்து ரஷிக்குங்காணும் என்று பட்டர் அருளிச்செய்வர்; இத்தால், இன்னத்தைக்கொண்டு இன்னகார்யஞ் செய்யக்கடவோ மென்னும் நியதி யில்லை; ஸர்வசக்த னென்கை' என்ற வியாக்கியாநவாக்கியம் இங்கு அறியத்தக்கது,' 'கற்கொண்டு' என்றது - அந்தமலைமுழுவதையும்ஒருகல்லை யெடுத்தாற்போல அநாயஸமாக எளிதில் எடுத்தமை தோன்றுதற்கு.வற்புறுத்தித் தருமனைப் பொய் கூறச் சொல்லினனென்பது, 'கற்கறித்துப் பன்முறித்துக்கழற' என்பதனால் விளங்கும். 'கற்கறித்துப் பன் முறித்து'-தொகையுவமையணி.குருவைக் கொன்றதனால், திட்டத்துய்மன் 'குருத்துரோகி' எனப்பட்டான்- பி-ம்: காத்தகள்வன்கட்டுரைத்த மொழிப்படியே கருதார்போரின். இதுமுதல் எட்டுக்கவிகள்-பெரும்பாலும் ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ்சீர்கள் காய்ச்சீர்களும், மற்றைநான்கும் மாச் |