சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட எண்சீராசிரியவிருத்தங்கள் (651) 35.-அசுவத்தாமன் எதிர்ப்பக்கத்தவரனைவரையுங் கொல்வேனென்று தொடங்குதல். இப்புதல்வன்றிருத்தாதைபாடுநோக்கியிவ்வகையேயிரங்கு தலுமிராசராச, னப்புதல்வன்றன்னையெடுத்தாற்றித்தேற்றியம்புயக்கணருவி துடைத்தளிசெய்காலை, யெப்புதல்வருடனும்விறற்குந்திமைந்தரியாவரையுஞ்சென்னி துணித்தியாகசேனன், மெய்ப்புதல்வன்றனையுமறமலைவனென்னாவில்வளைத்தான் சொல்வளையாவேதநாவான். |
(இ-ள்.) இ புதல்வன் துரோணபுத்திரனான இந்த அசுவத்தாமன், திரு தாதைபாடு நோக்கி-(தனது) மேலான தந்தையின் அழிவைக்குறித்து, இ வகைஏ இரங்குதலும் - இவ்வாறே சோகித்தவளவிலே,-இராசராசன்-அரசர்க்கரசனான துரியோதனன், அ புதல்வன் தன்னை - அந்தத்துரோணபுத்திரனை, எடுத்து-, ஆற்றி - ஆறுதல்கூறி, தேற்றி - சமாதானப்படுத்தி, அம்புயம் கண் அருவி துடைத்து - தாமரைமலர்போன்ற அவன்கண்களினின்று இடையறாதுபெருகும் நீர்ப்பெருக்கைத் துடைத்து, அளி செய் காலை-அன்பு காட்டியபொழுது,-சொல் வளையா வேதம் நாவான்-சொல்தவறாத வேதம்வல்லநாக்கையுடையவனான அசுவத்தாமன்,-எ புதல்வருடன்உம் - இராசகுமாரரெல்லாருடனே, விறல் குந்தி மைந்தர் யாவரைஉம் - வெற்றியையுடைய குந்தி புத்திர ரெல்லாரையும் (பாண்டவரைவரையும்), சென்னி துணித்து-தலையறுத்து, யாகசேனன் மெய் புதல்வன்தனைஉம் அற மலைவன்-துருபதனது சிறந்த புத்திரனான திட்டத்துய்மனையும் உயிர்நீங்கக் கொல்வேன்,' என்னா-என்று சபதஞ்செய்து, வில்வளைத்தான்; (எ-று.)- 'சொல்வளையா'என்பதற்கு-எவராலும் இகழ்ந்து சொல்லுதற்குக்கூடாத என்றும் உரைக்கலாம். பி - ம்: தனைச்சேர. (652) 36.- கண்ணன் கட்டளையால் அனைவரும் படைக்கலமும் வாகனமும் ஒழிதல். பாகசாதனன்மதலைதெய்வப்பாகன்பாகடருநெடும்பனைக்கைப் பகட்டின்மேலோன். மேகமேனியன்விரைவிற்றல்கள்சேனைவேந்தையெலாஞ் சென்றெய்திவில் வாள்வேலும், வாகனாதியுமகற்றிநின்மினென்ன மாருதிமைந்தனை யொழிந்தோர்மண்ணின்மீது. யோகஞானியராகியனைத்துளோருமொருவரைப்போனிராயுதரா யொடுங்கிநின்றார். |
(இ-ள்.) மேகம் மேனியன்-மேகமபோலாக்கரிய திருமேனியையுடையவனும், பாகசாதனன் மதலை தெய்வம் பாகன் - இந்திரனுடைய குமாரனான அருச்சுனனது தெய்வத்தன்மையுள்ள தேர்ப்பாகனுமாகிய கண்ணன், பாகு அடரும் நெடும் பனை கைபகட்டின் மேலான்-பாகனைக்கொல்லுந் தன்மையதும் நீண்ட பனைமரம்போன்ற துதிக்கையையுடையதுமான ஓர் ஆண்யானையின் |