பக்கம் எண் :

394பாரதம்துரோண பருவம்

யத் தலைமேல்வைத்தன ரென்க. மாற்றரிய மறை-வேறு எந்த
மந்திராஸ்திரபலத்தினாலுந்தடுக்க முடியாத பேராற்றலையுடைய மந்திர; மென்றபடி.
                                                            (654)

38.- நாராயணாஸ்திரம் அனைவரையும் நீங்கி வீமன்மேற் செல்லுதல்.

பாருவித்திசையுருயண்டகூடம் பாதலத்தினுடனுருவிப்பரந்துசீறி
யோரொருவருடலின்மிசைமயிர்க்காறோறுமோரொருவெங்கணையாய்
                                     வந்துற்றகாலை
நேரொருவர்மலையாமற்றருமன்சேனைநிருபரொலாநிராயுதராய்
                                  நிற்றல்கண்டுலோ
போருருவமுனிமைந்தன்றொடுத்தவாளிபொருபடைகொண்மாருதி
                                    மேற்போனதா.

     (இ-ள்.) முனி மைந்தன் - துரோணபுத்திரனான அசுவத்தாமன், போர்
உருவ-போரிலே (பகைவர்மேல்) ஊடுருவிச்செல்லும்படி, தொடுத்த-பிரயோகித்த,
வாளி-அந்த நாராயணாஸ்திரமானது, பார் உருவி-பூமியைத்துளைத்தும், திசை
உருவி -திக்குகளைத் துளைத்தும், பாதலத்தினுடன் அண்டகூடம் உருவி-
பாதாளலோகத்துடனே, அண்டகோளத்தின்முகட்டையும் துளைத்தும், பரந்து-பரவி,
சீறி-கோபங்கொண்டு, ஓர் ஒருவர் உடலின்மிசை மயிர்க்கால் தோறுஉம் ஓர் ஒரு
வெம் கணை ஆய்-ஒவ்வொருவரது உடம்பிலுள்ளமயிர்க்காலொவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு கொடிய அம்பாய்ப் பெருகி, வந்து உற்றகாலை-வந்து அடுத்தபொழுது,-தருமன்சேனை நிருபர் எலாம்-யுதிட்டிரனதுசேனையிலுள்ள அரசர்களெல்லாரும்,
நேர் ஒருவர் மலையாமல்-எதிரில் ஒருவரும்போர் செய்யாமல், நிராயுதர் ஆய்
நிற்றல்-(கையிற்) படையெடாதவராய்வணங்கிநிற்பதை, கண்டு-பார்த்து,
(அந்தத்தெய்வஅஸ்திரம்), பொரு படை கொள்மாருதி மேல் போனது-போர்க்குரிய
ஆயுதத்தை யேந்தியுள்ள வீமசேனன்மேற்சென்றிட்டது; (எ - று.)-ஆல்-ஈற்றசை.
ஓ-வியப்பிடைச்சொல்; தவறாமலழிக்கவல்லநாராயணாஸ்திரத்துக்கு அவரனைவருந்
தப்பியுய்ய, அது வீமன்மேல் மாத்திரம்சென்றமையா லாகிய வியப்புப்பற்றி வந்தது.

     அந்தச்சிறந்த அஸ்திரத்துக்கு, படையெடாதவர்மேற் புக்குத் தொழில்
செய்யாமைஇயல்பென்க. போர் உருவம் முனிமைந்தன்-போரிற்
பெருமிதத்தோற்றமுடைய அசுவத்தாமன்; யுத்தமே ஒருருவங்கொண்டுவந்தாற்
போன்ற துரோணன துகுமாரனான அசுவத்தாம னென்றலுமாம்.          (655)

39.-வீமன் அந்த அஸ்திரத்தை யெதிர்த்தல்.

காற்றின்மதலையுந்தனதுதடந்தேருந்திக்கண்சிவந்துமனங்கருகிக்
                                கால்வில்வாங்கிக்,
கூற்றமெனவெதிர்சென்றுமுனிவன்மைந்தன்கொடுங்கணையை
                          மதியாமற்கடுங்கணாளன்,
வேற்றுருவங்கொடுகனலிமுதலாவுள்ளவிண்ணவர்தம்பகழிகளாய்
                                மேன்மேல்வந்த,
மாற்றரியபகழிகளையொன்றுயொன்றுக்கொன்று
                  மாறானபகழிகளான் மாற்றினானே.

     (இ-ள்.) (பின்பு) காற்றின் மதலைஉம்-வாயுபுத்திரனான வீமனும், தனது தட
தேர்உந்தி-தன்னுடைய பெரிய தேரைச் செலுத்தி, கண் சிவந்து மனம் கருகி-
(கோபத்தாற்)கண்கள் சிவந்து மனம், வெதும்பி, வில்கால் வாங்கி-தநுர்த்தண்டத்தை
வளைத்து,