கூற்றம் என எதிர் சென்று-யமன்போல எதிரிலே சென்று, முனிவன் மைந்தன் கொடுங்க கணையை மதியாமல்-துரோணபுத்திரனான அசுவத்தாமனது கொடிய அந்த அஸ்திரத்தை லக்ஷ்யஞ்செய்யாமல், கடுங்கண் ஆளன்-அஞ்சாத வலிமையுடையவனாய், வேறு உருமம் கொடு கனலி முதல் ஆ உள்ள விண்ணவர்தம் பகழிகள் ஆய்மேல் மேல் வந்த மாற்று அரிய பகழிகளை - வெவ்வேறுவடிவங்கொண்டு அக்கினி முதலாகவுள்ள தேவர்களது அஸ்திரங்களாய்ப் பரிணமித்து மேன்மேல் வந்த விலக்குதற்கரிய அம்புகளை, ஓன்றுக்கு ஒன்று மாறு ஆன பகழிகளால் - (அவற்றில்) ஒவ்வொன்றுக்கும் பகையான எதிரம்புகளினால், மாற்றினான் - விலக்கினான்; (எ - று.)-மாற்றுதல்-தடுத்தல். (656) 40.-நாராயணாஸ்திரம்வீமனாற்பலவாறு தடுக்கப்படுதல். மூச்சினாலடியுண்டுங்கடுங்கட்கோபமுதுகனலாலெரியுண்டு முனைகொள்வாளி யோச்சினாலொடியுண்டுங்குனித்தவிற்காலுதையினாலுதையுண்டு நெடுநாணோசை வீச்சினாலறையுண்டுங்கடகவாகுவெற்பினாலிடியுண்டும் வெகுளிகூரும் பேச்சினால்வெருவுண்டும்படாததுண்டோபேரனிலன்மகனாலப் பெருமன்வாளி. |
(இ-ள்.) மூச்சினால்-(வீமசேனனது) மூச்சுக்காற்றினால், அடியுண்டுஉம்- அடிபட்டும்,-கடுங் கண் கோபம் முது கனலால் - பயங்கரமான அவன்கண்களினின்று வெளிப்பட்ட முதிர்த்த கோபாக்கினியினால், எரியுண்டுஉம் -எரிபட்டும்,-முனை கொள் வாளி ஓச்சினால் - கூர்மையைக் கொண்ட அம்பின்பிரயோகத்தால், ஒடியுண்டுஉம்-ஒடிபட்டும்,-குனிந்த வில்கால் உதையினால்-வளைத்தவிற்கழுந்தின் மோதுதலால், உதையுண்டுஉம்-தாக்கப் பட்டும்,- நெடு நாண் ஓசைவீச்சினால்-நீண்ட நாணியின்ஓசையினது வேகத்தால், அறையுண்டுஉம்-அடிபட்டும்,-கடகம் வாகு வெற்பினால்- கடகமென்னும் வளையை யணிந்ததோள்களாகியமலைகளினால், இடியுண்டுஉம்-இடிக்கப்பட்டும்,-வெகுளி கூரும் பேச்சினால்-கோபம் மிக்க வீரவார்த்தையால், வெருவுண்டுஉம்- அச்சங்கொண்டும்,- பேர் அனிலன்மகனால் - பெரிய வாயுபுத்திரனான அவ்வீமனால், அ பெருமன் வாளி - அந்தநாரயணாஸ்திரம், படாதது உண்டுஓ - படாதபாடு உண்டோ? (எ -று.)-இங்ஙன் அந்த அஸ்திரம்பட்டது திருமாலின் அருளினாலென்க.(657) 41.- கண்ணன் வீமனையும் அந்த அஸ்திரத்துக்குத் தப்புவித்தல். தாள்வலியா லெனைப்பலபல் வினைசெய் தாலுந் தப்பவொணா விதிபோலத் தடந்தோள் வீமன், றோள்வலியால் விலக்கவுமத் தொடைபோய்வாசத் தொடை மிடைமார் பகமணுகச் சுராரி தோள்கள், வாள்வலியா லரிந்தபிரான் கையில்வில்லும் வாளியும்வா கனுமுமுடன் மாற்று வித்தா, னாள்வலியார்தமைச்சிலராற்கொல்லலாமோ நாரணன்சா யகமிகவு நாணிற் றன்றே. |
(இ-ள்.) தாள் வலியால் - முயற்சியின் வலிமையினால், எனைபல பல்வினை செய்தால்உம்-எத்துணைப் பலபலவாகிய தொழில்களை எதிராகச்செய்தாலும், தப்ப ஒணா - தப்பமுடியாத, விதி |