பக்கம் எண் :

பதினைந்தாம் போர்ச்சருக்கம்399

தருமபுத்திரனுடனே, சேனை-(அவனுடைய) சேனையும், பாசறை அடைந்த பின்-
படைவீட்டை யடைந்த பின்பு,-அடல் மன்னர் மன்னன் எனும் மன்னன்-
வலிமையையுடைய இராசாராசனென்று பெயர் பெற்ற துரியோதனராசன், மருள்
பரந்த தனி நெஞ்சன் ஆகி-(துரோணவதத்தால்) மயக்கமிக்க தனித்த
மனமுடையவனாய், உருள் பரந்த ரததுரக குஞ்சர பதாதியோடு-சக்கரங்களால்
விரைந்துசெல்லுகின்ற தேர்களும் குதிரைகளும் யானைகளும் காலாள்களுமாகிய
சதுரங்கசேனையுடனே, கடிதுஓடினான் - விரைவாக ஓடிப்போனான்;(எ - று.)பி-ம்:
மைந்தனடு-பரந்திரத்.                                          (663)

47,48,- இரண்டுகவிகள் ஒருதொடர்: துரியோதனன் சஞ்சயனைத்
தந்தையிடம் அனுப்புதலைத் தெரிவிக்கும்.

தனதுபாசறையிலானவக்குரிசில்சஞ்சயன்றனையழைத்துநீ
நினதுகாதலுயிரனையவெந்தைதனைநிசிதனிற்கடிதினெய்தியே
புனைதுழாய்மவுலிவிரகினான்முரசுயர்த்தபூபனுரைபொய்த்ததும்
எனதுவாழ்வுவலிவென்றிதேசுறுதியாவுமாமுனியிறந்ததும்.

தனஞ்சயன்றலைதுணிக்கநின்றவரிசாபகோபமுதிர்சாயகத்
தினஞ்செய்நாதனருள்செல்லமாதலைசேனைநாதனினியாவதும்
இனஞ்செய்வண்டுமுரறாமார்பனொடியம்பிமேனிகழ்வயாவையு
மனஞ்செய்திவ்விரவுபுலருமுன்கடிதின்வருகவென்றனன்வணங்கியே.

     (இ-ள்.) (47) தனது பாசறையில் ஆன - தன்னுடைய படை வீட்டிற் சேர்ந்த
அ குரிசில்-அந்தத்துரியோதனராசன்,-சஞ்சயன்தனை அழைத்து - சஞ்சயமுனிவனை
வரவழைத்து,-(48) வணங்கி - நமஸ்கரித்து,-(அவனைநோக்கி),-(47) 'நீ-,-நினது காதல்
உயிர் அனைய எந்தைதனை-உன்னுடைய அன்புக்கிடமான உயிரையொத்த
(பிராணசினேகிதனான) என் தந்தையை, நிசிதனில்-இவ்விரவிலே, கடிதின் எய்தி -
விரைவாய் அடைந்து,-புனை துழாய் மவுலி - தரித்த துளசிமாலையையுடைய
முடியையுடையவனான கண்ணனது, விரகினால் தந்திரத்தால், முரசு உயர்த்த பூபன்
உரைபொய்த்ததுஉம் - முரசக்கொடியை உயர வெடுத்த யுதிட்டிரராசன்
பொய்பேசியதையும்,-எனது வாழ்வு வலி வென்றி தேசு உறுதி யாஉம் ஆம் முனி-
என்னுடைசெல்வ வாழ்க்கையும் வலிமையும் வெற்றியும் ஒளியும் தைரியமும் ஆகிய
எல்லாவற்றி னுருவமுமாயிருந்த துரோணன், இறந்ததுஉம்-இறந்ததையும்,-(48)
தனஞ்சயன் தலை துணிக்க நின்ற - அருச்சுனனது தலைதுணித்தற்குத்
துணிந்துநின்ற, வரி சாபம் கோபம் முதிர் சாயகம் - கட்டமைந்த வில்லையும் கறு
மிக்க நாகாஸ்திரத்தையுமுடைய, தினம் செய் நாதன் அருள் செல்வம் மா மதலை -
பகலைச்செய்கின்ற தலைவனான சூரியன் பெற்ற சிறந்த செல்வப் பிள்ளையாகிய
கர்ணன், இனி சேனைநாதன் ஆவதுஉம் - இனி மேல்(எனக்குச்)
சேனைத்தலைவனாவதையும்,-இனம் செய் வண்டு