முரல் தாமம் மார்பனொடு - திரளாகச்சேர்கின்ற வண்டுகள் மொய்த்தொலிக்கப் பெற்றமாலையைத்தரித்த மார்பையுடையவனான அத்தந்தையுடனே, இயம்பி - சொல்லி,-மேல் நிகழ்வயாவைஉம் மனம் செய்து - இனி நடக்கவேண்டியவையெல்லாவற்றையும் ஆலோசித்துக்கொண்டு,-இ இரவு புலரும் முன்கடிதின் வருக - இவ்விராத்திரி கழிந்து விடிவதற்கு முன்னமே விரைவில் மீண்டுவருவாயாக', என்றனன் - என்றுசொன்னான்; 49.-சஞ்சயன் திருதராட்டிரனிடஞ் சென்று மீளுதல். அந்தவந்தணனுமந்தனோடிவையனைத்துமோதியபினந்தனுஞ் சிந்தைநொந்தழுதிரங்கியாவும்வினைசெய்திரங்குவதுதீ தெனா மந்தணம்பெருகவெண்ணிமீளவிடவந்துநள்ளிருளின்மைந்தனுக் குந்தைந்தவுரையிதுவெனப்புரையிலுரைபுரோகிதனுமுரைசெய்தான். |
(இ-ள்.)அந்த அந்தணன்உம் - அந்தச்சஞ்சயமுனிவனும், அந்தனோடு-(பிறவிக்) குருடனான திருதராட்டிரனுடன், இவை அனைத்து உம் ஓதியபின் - (சென்று) இவையெல்லாவற்றையுஞ் சொன்னபின்பு,-அந்தன்உம்-திருதராட்டிரனும், சிந்தைநொந்துஅழுது இரங்கி-மனம்வருந்திப் புலம்பிச்சோகித்து, வினை யாஉம் செய்துஇரங்குவது தீது எனா-தொழில்களை யெல்லாஞ் செய்து விட்டு(ப் பின்பு) அநுதபிப்பது தீயது என்று கருதி, பெருக மந்தணம் எண்ணி-, மிகுதியாக மந்திராலோசனை செய்து, மீள விட-(அச்சஞ்யனைத்) திரும்ப அனுப்ப,- புரோகிதன்உம் - புரோகிதனான அச்சஞ்சயமுனிவனும், நள் இருளில்- நடுராத்திரியிலேயே, வந்து - மீண்டுவந்து, மைந்தனுக்கு-திருதராட்டிரபுத்திரனான துரியோதனனுக்கு, உந்தை தந்த உரை இது என புரை இல் உரை உரை செய்தான் -உன்தந்தை சொல்லியனுப்பிய வார்த்தை இது வென்று குற்றமில்லாத (சில)வார்த்தைகளைச்சொன்னான்;(எ - று.) ஒருகாரியத்தைச் செய்யத்தொடங்குமுன் அதைப்பற்றித் தீரவிசாரிக்க வேண்டுமேயன்றிச் செய்தபின்பு அதைக்குறித்துக் கழிவிரக்கமாக வருந்துவது தகுதியற்றதுஎன்பது, இரண்டாமடியின் கருத்து; "என்றென்றிரங்குவசெய்யற்க செய்வானேன்,மற்றன்னசெய்யாமை நன்று" என்பது, திருக்குறள், பி-ம்: புரோகிதனுமோதினான். (666) 50.- மறுநாட் சூரியோதய வருணனை. புதல்வ னானதிற லங்கர் பூபனிருள் புலவு முன்பொரு படைக்குமா முதல்வ னாமெனக கிழ்ந்து வாளிரவி முந்து தேர்கட வியுந்தினான் அதல மாதியுல கேழு மாளுடைய வரவின் மாமணி யனைத்தும்வந் துதய மால்வரையி னுச்சி யுற்றதுகொ லென்ன மேதினி யுரைக்கவே. |
(இ-ள்.) 'இருள் புலரும் முன் - இருட்பொழுது கழிந்து விடிவதற்கு முன்னமே (விடிந்தவளவிலே யென்றபடி) புதல்வன் |