பொருளுரைப்பர் - புல்முகராய் - புல்லைக் கவ்விய வாயையுடையவராய் என்றுங் கொள்ளலாம்; புற்கௌவுதல் - தோல்விக்கு அறிகுறி. (57) 13.- மூன்றுகவிகள்- துருபதன் முதலியோரை வென்று துரோணன் மாற்றார்பலரை மடிவித்தலைக் கூறும். மறைவாய்வெஞ்சிலைமுனிவன்வரூதினிதன்னிலையழிந்து குறைவாவந்தமைகண்டுகோதண்டமெதிர்வாங்கித் துறைவாய்வெங்கனல்போலுந்துருபதன்கைச்சிலைதுணியப் பிறைவாய்வெங்கணைதொடுத்துப்பிறைமுடியோனெனச்சென்றான் |
(இ-ள்.) மறை வாய் - வேதங்களையோதிய வாயையும், வெம் சிலை- கொடிய வில்லையுமுடைய, முனிவன் - துரோணன், வரூதினி - (தனது) சேனை, தன் நிலை அழிந்து - தனக்குஉரிய உறுதிநிலை கெட்டு, குறைவு ஆ வந்தமை - குறைவாக வந்ததனை, கண்டு - பார்த்து, கோதண்டம் எதிர் வாங்கி - வில்லை எதிரிலே வளைத்து, துறை வாய் வெம் கனல் போலும் - வேள்வித்துறைவாய்ந்த வெவ்விய அக்கினி போன்ற [மிகக்கொடிய], துருபதன் - துருபதராசகுமாரனான திட்டத்துய்மனது, கை சிலை - கையிலுள்ள வில், துணிய- துண்டாகும்படி, பிறை வாய் வெம் கணை தொடுத்து - பிறைச்சந்திரன்போன்ற [வளைவான] நுனியையுடைய கொடிய அம்பைத் தொடுத்துக்கொண்டு, பிறை முடியோன் என - இளஞ்சந்திரனையணிந்த சடைமுடியையுடைய சிவபிரான்போல, சென்றான் - (உக்கிரமாக எதிர்த்துச்) சென்றான் ; (எ-று.) குறைவா வருதல் - சென்றபொழுதினுந் தொகை குறைவாக மீளுதலும், அவமானமுண்டாகப் பின்னிடுதலும். துறை - வேதவிதியொழுக்கம். கனலுவமையும், சிவனுவமையும், எதிர்க்கும் பொருளைத் தவறாது அழித்தற்கு என்க. துருபதபுத்திரனை 'துருபுதன்' என்றார், தருமபுத்திரனை 'தருமன்' என்றாற்போல. (58) 14. | சத்தியகேதுவின்சாபஞ்சரமொன்றாலிரண்டாக்கிச் சித்திரவெஞ்சிலையாண்மைச்சிகண்டியையுஞ்சிலையறுத்திட் டுத்தமோசாமுதலாவுள்ளகொடுந்திறல்வேந்தர் தத்தமுயிருடன்போகத்தானையெலாமடிவித்தான். |
(இ-ள்.) (சென்ற துரோணன்),- சத்தியகேதுவின் - சத்தியகேதுவென்னும் பாஞ்சாலராசனது, சாபம் - வில்லை, சரம் ஒன்றால் - ஓரம்பினால், இரண்டு ஆக்கி -துணித்து, சித்திரம்- அழகிய, வெம் கொடிய, சிலை- வில்லின் திறத்தில், ஆண்மை -பராக்கிரமத்தையுடைய, சிகண்டியையும்-, சிலை அறுத்திட்டு - வில்லையறுத்து,உத்தமோசா முதல் ஆ உள்ள - உத்தமோசா என்னும் அரசன் முதலாகவுள்ள,கொடு திறல் வேந்தர் - கொடிய வலிமையையுடைய அரசர்கள், தம் தம் உயிருடன்போக - தங்கள் தங்களது உயிரோடு புறங்கொடுத்துப் போகும்படி, தானை எலாம் -(பாண்டவ) சேனையை யெல்லாம், மடிவித்தான் - அழியச்செய்தான்; ( எ -று.) |