பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்43

தழும்பை யுண்டாக்குகிற, வெம் - கொடிய, சிலீமுகம்உம் - அம்புகளையும்,
வணக்கு- வளைத்தற்குரிய, கொடு - கொடிய, சராசனம்உம்- வில்லையும், எடுத்து
-எடுத்துக்கொண்டு, எழுந்து - புறப்பட்டு, நடுதகைவு இன்றி - இடையிலே
தடையில்லாமல், ஒர் ஓர் நொடியில்- ஒவ்வொரு மாத்திரைப்பொழுதிலே,
அடுத்தனர்- (ஒருவரையொருவர்) நெருங்கினார்கள்; ( எ -று.)

     ஆறிப்போவதான புண்ணை யுண்டாக்குவதென்பதனினும், ஆறாதுகிடக்கும்
வடுவை யுண்டாக்கு மென்பது சிறப்பாதலால், 'வடுத்தரு சிலீமுகம்' என்றார்.
'கதுவுசினம்' என்றும், 'எழுப்ப வெழுந்தோர் நொடியில்' என்றும்,
'நடுத்தகைவின்வானவரு நடுக் குறுவெம்போர் முனையில்' என்றும் வழங்குகிற
பாடம், சந்தவமைதிக்கு வழுவாம், இனி, அடுத்த பாடல்முதல்தான் விருத்தம்
வேறுபடுகின்றதென்று கொள்வார்க்கு, இந்தப்பாடங்கள் ஏற்கும். பி - ம்:
எழுப்பவெழுந்த தோர் நொடியில்.

     இதுமுதல் பத்துக் கவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும்
கருவிளச்சீர்களும், இரண்டாஞ்சீரும் ஐந்தாஞ்சீரும் தேமாச்சீர்களும், மூன்றாஞ்சீரும்
ஆறாஞ்சீரும் கூவிளங்காய்சீர்களுமாக வந்த அறுசீராசிரியச்சந்தவிருத்தங்கள்.
'
தனத்தன தந்த தான தன தனத்தன தந்த தானதன' என்பது, இவற்றிற்குச்
சந்தக்குழிப்பாம்.                                                  (61)

17.- இருதிறத்துச்சேனைகளும் தம்மில் பொருதல்.

அதிர்த்தனசங்கசாலமுதலனைத்துவிதங்கொள்காகளமும்
உதிர்த்தனவண்டகோளமுறவொலித்துடுவின்குழாமுழுதும்
விதிர்த்தெனசெங்கைவாளொடயில்விழித்தனகண்கடீயுமிழ
வெதிர்த்தனதங்கள்சேனைகளுமெதிர்ப்படுமைந்தர்போர்பொரவே.

     (இ-ள்.) (அப்போர்க்களத்தில்), சங்க சாலம் முதல் - சங்குகளின்
கூட்டம்முதலாக, அனைத்து விதம் கொள் - மிகப்பலவகைகளைக் கொண்ட,
காகளம்உம் - வாத்தியங்கள்யாவும், அதிர்த்தன-முழங்கினவாய்,  அண்டகோளம்
உற - உலகவுருண்டைமுழுவதிலும், ஒலித்து - சப்தித்து, உடுவின்குழாம் முழுதுஉம்
- நக்ஷத்திரக் கூட்டம் முழுவதையும், உதிர்த்தன - (அதிர்ச்சியால்) உதிரச்செய்தன;
செம் கை -(வீரர்களது) சிவந்த கைகள், வாளொடு அயில்- வாளையும் வேலையும்,
விதிர்த்தன - வேகமான அசைத்தன; கண்கள் - (அவ்வீரர்கள்) கண்கள், தீ உமிழ -
நெருப்பைச் சொரியும்படி, விழித்தன - (கோபத்தோடு) திறந்து உற்றுநோக்கின;
(இவ்வாறு), எதிர் படு மைந்தர்- (ஒருவருக்கொருவர்) எதிர்ப்பட்ட வீரர்கள், போர்
பொர - போர்செய்ய, தங்கள் சேனைகள் உம் - அவர்களது (யானைமுதலிய)
சேனைகளும், எதிர்த்தன - (ஒன்றோடொன்று) எதிரிட்டுப்பொருதன; ( எ -று.)

     காகளம் - எக்காள மென்றும்வழங்கும் ;  ஊதப்படுவ தொரு வாத்திய
விசேஷம்:  இச்சிறப்புப்பெயர், இங்கே , வாத்தியங்களுக்குப் பொதுப்பெயராய்
நின்றது. பி -ம்: போர்செயவே.                                     (62)