பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்47

இயையும். இன்று சாலும் என - இன்றைக்கே (போர்) முடியுமென்று எனினுமாம்.
பி -ம்:மிலைச்சினரிந்த்ரசால்மென.                                (67)

23.- தருமன் குருவின்பதாகை முதலியவற்றை ஒழியுமாறு செய்தல்.

சினத்துமுனைந்தபோரில்வருசிலைக்குருவின்பதாகையற
மனத்தினுமுந்துமாதுணியவயத்துடனுந்துபாகன்விழ
வனைத்துருளூஞ்சதாவியிடவடுக்குறநின்றதேரழிய
வினத்தொடையைந்துபூபதியுமிமைப்பொழுதின்கணேவினனே.

     (இ-ள்.) சினத்து - கோபத்தோடு, முனைந்த - முயன்று செய்த, போரில் -
யுத்தத்தில், வரு -(எதிர்த்து) வந்த, சிலை குருவின் - வில்லாசிரியனான
துரோணனது,பதாகை-(வேதக்) கொடி, அற - அறுபடவும், மனத்தின்உம் முந்து -
மனோவேகத்தினும் முற்படச்செல்லுகிற, மா - குதிரைகள், துணிய - துண்டாகவும்,
வயத்துடன் - வலிமையோடு, உந்து -தேர்செலுத்துகின்ற, பாகன் - சாரதி, விழ -
இறந்து கீழே விழவும், அனைத்து உருள்உம் - தேர்ச்சக்கரங்களெல்லாம் சதாவியிட
- சிதைந்து விழவும், அடுக்க உற நின்ற - (அனேக அங்கங்கள்
ஒன்றன்மேலொன்றாக) அடுக்கியிருக்கின்ற, தேர்-, அழிய - அழியவும், இனம்
தொடை ஐந்து - ஒருசாதியான ஐந்து அம்புகளை, பூபதிஉம் - பூமிக்குத்தலைவனான
யுதிட்டிரனும், இமை பொழுதின் கண் - ஒருமாத்திரைப்பொழுதிலே, ஏவினன் -
(அக்கொடி முதலிய ஐந்தன்மேலும் தனித்தனி) செலுத்தினான்; (எ -று.)

     ஒருபொருளை நினைத்த மாத்திரத்தில் மனம் அப்பொருள் எவ்வளவு
தூரத்திலிருப்பினும் அவ்விடத்தே செல்லுதலால், மனம், வேகத்துக்குச் சிறந்த
உவமையாகக் கூறப்படும், 'விழ' என்றது- மங்கலவழக்கு.                (68)

24.- இதுவும் அடுத்த கவியும் குளகம்: படையிழந்த துரோணனைத்
தருமன் ஏகுமாறுசொல்ல அவன் ஏகுதல்.

தனித்துமலைந்தபோரிலெழுதலத்தரசன்கைவாளிகளில்
அனத்தம்விளைந்தநாணொடுவிலறத்துணியுண்டதாகவமுன்
முனிக்குலமென்றுமாதிமறைமுதற்குருவென்றுமேன்மையுற
இனிக்கணையொன்றுமேவுகிலமிளைப்பறவஞ்சலேகெனவே.

     (இ-ள்.) தனித்து மலைந்த போரில்- (வேறு எவருந் துணையில்லாமல்
தருமனும் துரோணனும் தொந்தயுத்தமாகத்) தனித்துச் செய்த போரிலே, எழு
தலத்துஅரசன் - ஏழுதீவுகளாகவுள்ள பூமி முழுவதுக்கும் இராசனான தருமனது,
கைவாளிகளில் - கையினா லெய்யப்பட்ட அம்புகளால், அனத்தம் விளைந்து -
(துரோணனுக்குத்) தீங்கு உண்டாகி, நாணொடு வில் அற துணியுண்டது-
நாணோடுகூடிய வில் இரண்டாம்படி துணிக்கப்பட்டது; (அப்பொழுது), ஆகவம் முன்
- போர்க்களத்திலே, (தருமன் துரோணனை நோக்கி), 'முனிகுலம் என்றும் - (நீ
பிறந்தசாதி) பிராமணசாதி யாதலாலும், ஆதி மறை முதல் குரு என்றும் -
பழமையான வேதம் வல்ல சிறந்த ஆசிரியனாதலாலும், மேன்மை உற - (உன்பக்கல்
எமக்குக்) கௌரவபுத்தியிருத்தலால், இனி கணை ஒன்றுஉம் ஏவுகிலம்-