பக்கம் எண் :

50பாரதம்துரோண பருவம்

28.-முந்திமுந்திமச்சராசனோடுசேனைமுதல்வனுங்
குந்திபோசனாதியானகுலமகீபர்யாவரும்
வந்துசூழவேழமீதுவயமடங்கல்செல்வபோல்
அந்தவேதமுனியையோடியக்கணத்தில்வளையவே

     (இ-ள்.) மச்ச ராசனோடு - மத்ஸ்யதேசத்தரசனான விராடனுடன், சேனை
முதல்வன்உம் - சேனைத்தலைவனான திட்டத்துய்மனும், குந்திபோசன் ஆதி ஆன
- குந்திபோஜதேசத்தரசன் முதலான, குலம் மகீபர் யாவர்உம் - உயர்குலத்தில்
தோன்றிய அரசர்களெல்லோரும் , முந்தி முந்தி- ஒருவருக்கொருவர் முற்பட்டு, சூழ
வந்து- சுற்றிலும் வந்து, வேழம்மீது- ஒரு யானையின்மேல், வய மடங்கல்-
வலிமையையுடைய பலசிங்கங்கள், செல்வ போல்- (எதிர்த்துச்) செல்வனபோல, ஓடி-
விரைந்து, அந்த வேதம் முனியை - வேதம் வல்ல அத்துரோணனை, அ கணத்தில்-
அந்தக்ஷணத்தில், வளைய - வளைந்துகொள்ள,- ( எ -று.)-"செருச்செய்தார்" என
மேல் முப்பதாங்கவியில் முடியும்.

     மச்சம்- வடசொற்சிதைவு; நீர்வளமிகுதியால் எங்கும் மீன்கள்
மலிந்திருத்தல்பற்றி, மத்ஸ்யதேசமெனப் பெயர்போலும். குந்தி போசன் - பாண்டவர்
தாயாகிய குந்தியின் உடன்பிறந்த முறையாகுபவன்; இவன்பெயர் 'புரஜித்' என்பதை
முதனூலால் அறிக.                                              (73)

29.கன்னனாதிசகுனியாதிகலிங்கதேசனாதியா
மன்னனாதியாகவங்குமறையவன்பெரும்படை
தென்னனாதிநகுலனாதிதிட்டத்துய்மனோடபி
மன்னனாதியாகவிங்குதிட்டிரன்வரூதினி

     (இ-ள்.) கன்னன் ஆதி - கர்ணன் முதலாகவும், சகுனி ஆதி- சகுனி
முதலாகவும், கலிங்கதேசன் ஆதி ஆ - கலிங்கநாட்டரசனான சோமதத்தன்
முதலாகவும், மன்னன் ஆதி ஆக-(யாவருக்கும்) அரசனான துரியோதனன்
முதலாகவும் அங்கு- அப்பக்கத்தில், மறையவன் பெரு படை- வேதியனான
துரோணனது பெரியசேனையிலும், - தென்னன் ஆதி- பாண்டியன் முதலாகவும்,
நகுலன் ஆதி- நகுலன் முதலாகவும், திட்டத்துய்மனோடு அபிமன்னன் ஆதி
ஆக -திட்டத்துய்மனும் அபிமந்யுவும் முதலாகவும், இங்கு - இப்பக்கத்தில்,
உதிட்டிரன்வரூதினி- தருமனது சேனையிலும்,-(எ-று.)-" மன்னர்தாமும் மன்னர்
தாமும் செருச்செய்தார்" எனவருங்கவியோடுமுடியும். 'திட்டதுய்மனாதிமால்,
பின்னனாதியாகவிங் குதிட்டிரன்பெரும்படை' என்ற பாடத்தில், மால்பின்னன் -
சாத்தகி யென்க.                                                (74)

30.நின்றசேனைமன்னர்தாமுநின்றவந்நிலத்திடைச்
சென்றசேனைமன்னர்தாமுமெங்கணுஞ்செருச்செய்தார்
என்றுகூறியெதிருரைத்தல்யாவருக்குமுடிவுறா
தொன்றுநூறுசின்னமாவுடைந்ததோரொருடலமே.

     (இ-ள்) நின்ற- (அப்பக்கத்தில்) நின்ற, சேனை மன்னர்தாம் உம் -
சேனைகளோடுகூடிய அரசர்களில் இன்னாரின்னாரும், நின்ற அ நிலத்திடை -
அங்ஙனம் நிற்கப்பெற்ற  அக்குருக்ஷேத்திரத்தி