ஒத்துவார்களிற்றினின்றுமொருகளிற்றின்முதுகுறத் தத்துவார்துரங்கமங்கடாரையாகவேறுவார். |
(இ-ள்.) (தருமன்பக்கத்து வீரர்கள்), படைக்கலங்கள் கொண்டு - ஆயுதங்களினால், குத்துவார் - (எதிரிகளைக்) குத்துவார்கள்; மல் குறிப்பினால் - (ஆயுதங்களையொழித்து) மற்போர்செய்யுங்கருத்தால், மொத்துவார் - (வெறுங்கைகளால்) அடிப்பார்கள்; தேர் இரண்டுஉம் முட்ட விட்டு - பகைவர் தேர் தம்தேர் என்ற இரண்டும் (ஒன்றையொன்று) தாக்கும்படி செலுத்தி, மொய்ம்பினால் ஒத்துவார் - ( பின்பு) வலிமையோடு விலகுவார்கள்; களிற்றினின்றுஉம்- (ஒரு) யானையினின்றும், ஒரு களிற்றின் முதுகு உற- மற்றொரு யானையின் முதுகிலே பொருந்த, தத்துவார் - பாய்வார்கள்; துரங்கமங்கள் - பலகுதிரைகளை, தாரை ஆகஏறுவார் - ஒழுங்காக ஏறிச்செலுத்துவார்கள் ; (எ - று.) தாரையாக - வரிசையாக எனினும், பலவகைக்கதிகள்பொருந்த எனினும் அமையும். ஒத்துதல் - பொருந்தலுமாம். தாரை - வட சொற்றிரிபு. (77) 33. | கொற்றவாளின்முடியிழந்தகுறையுடம்புவாளுடன் கற்றசாரியோடுமக்கணக்கறிந்துபுகழுவார் அற்றகால்களற்றகைகளாயுதங்களாகவே யெற்றுவார்படைக்கலனிழந்துநின்றவீரரே. |
(இ-ள்.) (தருமன்சேனையார்),- கொற்றம் வாளின் - வெற்றியையுடைய(தங்கள்) வாள்களால், முடி இழந்த - தலையையிழந்த, குறை உடம்பு- (எதிரிகளின்) உடற்குறைகள், வாளுடன்- (கையிற் பிடித்த) வாளாயுதத்துடனே, கற்ற சாரி - (முன்புதாம்) பயின்றுள்ள (வலசாரி இடசாரி முதலிய) நடைவிகற்பங்களில், ஓடும்- (தலைபோனபின்பும் சிறிதுபொழுது) விரைந்து செல்லுகிற, அ கணக்கு -அந்த நிலைமையை, அறிந்த - கண்டுஉணர்ந்து, புகழுவார் - கொண்டாடுவார்கள்; படைக்கலன் இழந்து நின்ற - ஆயுதங்களை ( எதிரிகளாற்) தோற்றுநின்ற, வீரர்- (மற்றும்பல) வீரர்கள், அற்ற கால்கள் அற்ற கைகள் ஆயுதங்கள் ஆக ஏ- (போர்களத்தில்) அறுந்து விழுந்துகிடக்கிற (ஆடவரது) கால்களையும் அப்படிப்பட்டகைகளையுமே படைக்கலமாக எடுத்துக்கொண்டு, ஏற்றுவார்- (அவற்றால்பகைவரைத்) தாக்குவார்கள் ;(எ -று.) அற்றகால்களும் அற்றகைகளுந் தம்முடையனவே யென்றலும் தகுதி ; "இருதுடையற்றிருக்கு மறவர்க ளெதிர்பொரு கைக்களிற்றின்வலிகெட, ஒருதுடையைச்சுழற்றி யெறிவர்களொருதுடை யிட்டுவைப்பரெறியவே" என்ற கலிங்கத்துப்பரணியைக் காண்க. முடியிழந்தகுறையுடம்பு - கபந்தம். (78) 34.- நால்வகைச்சேனையும் பட்டமை. சொன்னவாறுகுறியுமுள்ளதுரகதந்துணிந்தன கன்னவாறுசொரிமதக்களிற்றினங்கள்வீழ்ந்தன பின்னவாறுபட்டனபிறங்குதேர்பதாதிக ளின்னவாறுபட்டனவெனக்குறித்தியம்பொணா. |
|