(இ -ள்.) (அப்பொழுது துரோணன்சேனையில்), சொன்ன ஆறு குறிஉம் உள்ள - (அசுவநூல்களிற்) கூறியுள்ளபடி எல்லா நல்லிலக்கணங்களையுமுடைய, துரகதம் - குதிரைகள், துணிந்தன - அறுபட்டன; கன்னம்- கபோலங்களினின்று, ஆறு சொரி - ஆறாகப் பெருகுகிற, மதம் - மதநீரையுடைய, களிறு இனங்கள் - யானைக் கூட்டங்கள், வீழ்ந்தன - இறந்துகீழ் விழுந்தன; பிறங்கு தேர்- விளங்குகிறதேர்கள், பின்னம் ஆறு பட்டன - பிளவுத்தன்மையை அடைந்தன; பதாதிகள் - காலாட்கூட்டங்கள், இன்ன ஆறு பட்டன என குறித்து இயம்பு ஓணா-'இவ்விதமாக அழிந்தன' என்ற குறிப்பிட்டுச் சொல்லமுடியாதவையாயின; ( எ -று.) குறி -அடையாளம். 'சொன்னஆறு குறியுமுள்ள' என்பதற்கு (குதிரை நூல்களில் நல்லிலக்கணமாகக்) கூறின (பிறப்பிடம், நிறம், சுழி, குரல், உறுப்பமைதி, நடை என்னும்) ஆறுதன்மைகளையுமுடைய என்றும் உரைக்கலாம். 'பதாதிகள்' என்பது - இங்கே, அஃறிணைப்பன்மைபாற் பட்டதனால், 'பட்டன’,'இயம்பொணா’ என்னும் அஃறிணைப்பன்மைமுற்றைக் கொண்டது. சிலபிரதியில், இந்தப்பாடல் அடுத்தபாடலின்பின் உள்ளது. (79) 35.-யுதிட்டிரன் பக்கத்தவரின் செருக்குமொழியும், துரியோதனன் பக்கத்தவரின் இரக்கமொழியும். உங்கள்சேனைகெட்டதென்றுதிட்டிரன்றளத்துளார் திங்களன்னகும்பயோனிசேனைதன்னையிகழுவார் எங்கள்சேனைகெட்டதுங்களிறைவன்வின்மையாலெனத் தங்கள்சேனையந்தணன்றளர்ந்ததற்கிரங்குவார். |
(இ-ள்.) உதிட்டிரன் தளத்து உளார் - தருமன்பக்கத்தின் சேனையிலுள்ளவர்கள், திங்கள் அன்ன கும்பயோனி சேனை தன்னை- பூர்ணசந்திரனையொத்த துரோணனது சேனையை, உங்கள் சேனை கெட்டது என்று - 'உங்கள்சேனை தோற்றது' என்று, இகழுவார்- நிந்திப்பார்கள்; (அதற்கு அவர்கள்), உங்கள் இறைவன் வின்மையால் எங்கள் சேனை கெட்டது என - 'உங்களரசனான தருமனது வில்லின்திறத்தால் எங்கள் சேனை அழிந்தது' என்று ஒப்புக்கொண்டு, தங்கள் சேனை அந்தணன் தளர்ந்ததற்கு இரங்குவார் - தங்கள் சேனைத்தலைவனான துரோணன் தளர்ச்சியடைந்ததற்கு மனம் வருந்துவார்கள்; (எ-று) அப்பொழுது அவர்கள் தோல்வி அவர்களே ஒத்துக்கொள்ளும் படியிருந்த தென்பது, பின்னிரண்டடிக்குக் கருத்து. திங்களுவமை- கலைநிரம்புதற்கு. பி - ம்: திறத்துளார். (80) 36.- இருதிறத்துசேனையும் ஒத்துப்பொருகையில் கடோத்கசன் பாண்டவசேனைக்குத் துணையாதல். இருதளத்துநின்றமன்னரிருவராகவிகலியே யொருதளத்துமன்னரென்னவொத்துநின்றுடற்றினார் பொருதளத்திலிங்ஙனின்றுபோர்புரிந்தபொழுதிலே வருதளத்தொடுதவினான்மருத்துவீமன்மைந்தனே. |
|