பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்57

     (இ-ள்.) முந்த வந்த- (இங்ஙனம்) முற்பட வந்த, மன்னன் உம்-
துரியோதனனும், முரண் கொள்- வலிமையைக்கொண்ட, வாகை- வெற்றிக்கு உரிய,
அரசர்உம்- (அவன்பக்கத்து) அரசர்களும், வந்த வந்த- (அவர்களுடன்)
மிகுதியாய்வந்த, சேனைஉம்-, வகுத்து அணிந்து - ஒழுங்காக
அணிவகுக்கப்பட்டுநின்று, முனையஏ- போர்செய்யவே,- அந்த அந்த வீரர் மெய்
சிந்த - அவ்வவ்வீரரது உடம்பு அழிந்து கீழ்ச்சிந்தும்படி, சிலை தட கை அபிமன்-
வில்லைப்பிடித்த பெரியகையையுடைய அபிமந்யு, வந்து உடற்றினன்- எதிர்த்துவந்து
போர்செய்தான்; (எ-று.)                                             (86)

42.சிந்திவாளிமழைகளோடுசிலைவளைத்துமுடுகுதே
ருந்திவாரிமேகமென்னவமர்செய்தானுமொருவனே
யந்திவானமொத்ததக்குருதிநீர்கொளடுகளந்
தந்திவாசிதேர்களோடுடைந்ததெண்ணிறானையே.

     (இ-ள்.) முடுகு தேர்- விரைந்துசெல்லுந்தன்மையதான தேரை, உந்தி -
(எங்கும்) செலுத்தி, ஓடு சிலை - விரைவாகத் தொழில்செய்கிற வில்லை, வளைத்து -
வணக்கி, வாளி மழைகள் - அம்புமழைகளை, சிந்தி - சொரிந்துகொண்டு, வாரி
மேகம் என்ன - நீர்கொண்ட மேகம்போல, அமர்செய்தான்உம் - (எதிரில்) போர்
செய்தவனும், ஒருவன்ஏ- (அபிமன்) ஒருத்தனே; (அவனால்), எண் இல் தானை -
அளவிறந்த (பகைவர்) சேனை, தந்திவாசி தேர்களோடு- யானைகள் குதிரைகள்
தேர்கள் என்பவற்றோடு, உடைந்தது- அழிந்தது; அ குருதி நீர் கொள் - அப்படி
(அழிந்தபிராணிகள்) இரத்தப்பெருக்கைக்கொண்ட, அடு களம் - போர்க்களம்,
அந்திவானம் ஒத்தது- மாலைப்பொழுதிற் காணப்படுஞ் செவ்வானத்தை யொத்தது;
(எ -று.)

     அபிமனுக்கு நீர்கொண்டமேகம்  நிறத்துக்கும், விசையோடு வருதற்கும்,
வில்ஏந்துதற்கும், அம்புமழைசொரிதற்கும் உவமை. செவ்வானம்- நிறத்திற்கு
உவமை.மழைகளோடு - மழைகளையெனினுமாம். பி-ம்: உற்றகுருதி நீரிலக்களம்
                                                             (87)

43.-துரோணன் தருமனுக்குத் தோற்று, பலவீரர்காக்க முனையினின்று
விலகுதல்.

ஏறுதேரழிந்துசாபமிற்றுமுற்றுமின்றியே
வேறுதேருமின்றிநின்றுவில்லெடுத்தவேதியன்
கூறுதேருதிட்டிரன்குனித்தவிற்குடைந்துபன்
னூறுதேர்தனைப்புரக்கநொய்தினிற்கழற்றினான்.

     (இ-ள்.) நின்று - (தருமநெறியில்) நின்று, வில்எடுத்த - வில்லையேந்திப்
போர்செய்த, வேதியன் - துரோணாசாரியன், (அவன்எய்த அம்புகளால்), ஏறு தேர்
அழிந்து (தான்) ஏறிய தேர் சிதைந்து, சாபம் இற்று- கைவில்லுந்துணிந்து, முற்றுஉம்
இன்றி- (மற்றையாயுதங்கள்) அனைத்தும் இல்லாமலே, கூறு தேர் உதிட்டிரன்
குனித்த விற்கு உடைந்து- சிறப்பித்துச் சொல்லப்படுகிற தேர்வீரனான தருமன்
வளைத்த வில்லுக்குத் தோற்று, வேறு தேர்உம்