பக்கம் எண் :

62பாரதம்துரோண பருவம்

                                       கிரிகளை,
யொசிதரவளைத்துமார்புசுழிதரவொருகைகொடுகுத்திாவயு
                                        குமரனே.

     (இ-ள்.) 'நிசிசரன்- இராக்கதனான இராவனன், எடுத்த - (கைகளால்)
தூக்கின,ஆதி கயிலைஉம் - பழமையான கைலாசகிரியும், இதற்கு நிகர் அல -
இவ்யானைக்கு ஒப்பன்று', எனா - என்று சொல்லப்பட்டு, முன்வரு - சிறப்பாக
வருகிற, கரி- (தனது வெள்ளை) யானையை, விசையுடன்நடத்தி-
வேகமாகச்செலுத்திக் கொண்டு, 'வீமன் எவண் - வீமன் எவ்விடத்தில் (உள்ளான்)?
அவன் விறல் முடி துணித்து - அவனது வலிமையையுடைய தலையைத் துண்டித்து,
இனி மீள்வன்- பின்பு திரும்புவேன்,' என - என்று, வசைபலபிதற்றி -
பலநிந்தைமொழிகளைச் சொல்லிக்கொண்டு, வேகமுடன்வரும் - விரைவாகவருகிற,
வலிய பகதத்தன் - வலிமையையுடைய பகதத்தனது, வாகு கிரிகளை - மலைகள்
போன்ற கைகளை, ஓசிதர - ஒடியும்படி, வாயுகுமாரன் - வீமன், வளைத்து-
(தன்கைகளாற் பிடித்து) மடக்கிவிட்டு, மார்பு சுழிதர - (அவன்) மார்பு குழிபடும் படி,
ஒரு கைகொடு குத்தி-(தனது) ஒருகையாற்குத்தி,- (எ -று.) -"கதைகொடு அடித்து"
என அடுத்த கவியில் தொடரும்.

     இவன் கூறிய வீரவாதம் மேல் பயன்பெறாது முடிதல்பற்றி, 'பிதற்றி' என்றார்.
வாகுகிரிகளை வளைத்தல்- தோள்களைத்தழுவுதலுமாம். வெள்ளிமலையாதலால்,
கைலையை வெள்ளையானைக்கு எடுத்துக்கூறினார். இராவணன்
கைலையெடுத்தது:-
இராவணன்திக்கு விசயஞ் செய்கையில் குபேரனோடு எதிர்த்துப்
பொருது அவனை வென்று அவனது புஷ்பகவிமானத்தைப்பறித்து அதன்மேலேறிக்
கொண்டு கைலாசமலைக்கு மேலாக ஆகாசமார்க்கத்திலே விரைந்து
மீண்டுவருகையில், அம்மலையின் மகிமையால் விமானந்தடைப்பட்டு நிற்க,
அதற்குக்காரணம் இன்னதென்று அறியாது திகைக்கையில், நந்தி எதிரில்வந்து
'சிவபிரானுக்குத் தங்குமிடமான திருக்கைலாயத்தின் பெருமை இது' என்று
சொல்லவும் கேளாமல் தசமுகன் தனது பிரயாணத்துக்குத் தடையாகிய இம்மலையை
இப்பொழுதே வேரொடுபறித்து எடுத்து அப்பால் எறிந்துவிட்டுத் தடையின்றி
மேற்செல்வேனென்று கூறி விமானத்தினின்றும் இறங்கித் தனது இருபதுகைகளையும்
அம்மலையின்கீழ்க்கொடுத்து அதனைப்பெயர்த்து அசைத்தனனென்பது கதை.
ஒசிதர- துவளஎன்பாருமுளர். பி -ம்:  குழிதர, சுளிதர.                  (94)

50.கதைகொடுபனைக்கைவீசியெதிர்வருகடகரியினெற்றி
                         யோடையணியொடு,
புதைபடவடித்துமீளவிசையொடுபுரவியிரதத்தின்
                             மீதுகுதிகொள,
விதயமலர்செற்றமூளவிவனவனெதிர்சிலைவளைத்து
                            வாளிநிரைபட,
வுதையவுதைபட்டவாளி தனதுகை யுயர்கதை
                     புடைத்துவீழமுனியவே.

     (இ-ள்.) பனை கை வீசி- பனைமரம்போன்ற துதிக்கையை வீசிக்கொண்டு,
எதிர்வரு - எதிர்த்துவருகிற, கட கரியின் - (பகதத்தனது) மதயானையினது, நெற்றி -,
ஓடை அணியொடு - முகப்படாத்தோடும் ( பட்டமாகிய) ஆபரணத்தோடும். புதைபட
- உட்குழியும்படி (வீமசேனன்), கதைகொடு- (தனது) கதாயுதத்தால்.