பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்63

அடித்து-, மீள - பின்பு, விசையொடு -வேகத்துடனே, புரவி இரதத்தின்மீது -
குதிரைகள்பூண்ட தேரின்மேல், குதி கொள- பாய்ந்து ஏறிக்கொள்ள,- (அதனால்),
இவன்-பகதத்தன், இதயம் மலர் செற்றம் மூள - இதயகமலத்தில் கோபம் மிக,
அவன் எதிர் - அவ்வீமனெதிரில், சிலை வளைத்து - வில்லை வளைத்து, வாளி -
அம்புகளை, நிரைபட - கூட்டமாக, உதைய - செலுத்த,- உதைப்பட வாளி -
(அங்ஙனம்) செலுத்தப்பட்டுவந்த அம்புகள், தனமு கை உயர்கதை புடைத்து வீழ-
தன்னுடைய [வீமனுடைய] கையிலுள்ள சிறந்தகதாயுதத்தில் தாக்கிவிழ, முனிய -
(அதனால் வீமன்) கோபங்கொள்ள, (எ -று.)-" வாளிநெடுமழை *** விலகின" என
அடுத்த கவியோடு குளகமாய் முடியும்.

     பனைமரம்- துதிக்கைக்கு, திரண்டு உருண்டு நீண்ட வடிவத்தால் உவமம்.
ஓடையணி-பன்மையீறுபெறாத அஃறிணையும்மைத்தொகை. இதயம், தாமரை
மலர்வடிவமானதொரு மாம்ஸாகாரமாகவுள்ளதனால், ' இதயமலர்' எனப்பட்டது.
பி - ம்:பணைக்கை, முனைய.

51.ஒருவரையொருத்தர்வேறலரிதரிதொருபடிசெருச்செய்தாலு
                                     மினியென,
விருவருமெடுத்தசாபமொலிபடவெதிரெதிர்தொடுத்தவாளி
                                     நெடுமழை,
யொருவருடலத்தின்மூழ்கிமுனையுறவுருவுதொழிலற்றுநூலின்
                                   முறைமையி,
னிவரும்விலக்கவோடிவிலகினவெதிரெதிர்கடித்துவான
                                    மறையவே.

     (இ-ள்.) ஒருபடி- ஒரேவிதமாக, செரு செய்தால்உம் - போர் செய்தாலும்,
இனி- இனிமேல், (இவர்கள்), ஒருவரை ஒருத்தர் வேறல் அரிது அரிது என -
ஒருத்தரையொருத்தர் வெல்லுதலில்லை யென்னும்படி, இருவர்உம் - அந்த
இரண்டுபேரும்,எடுத்தசாபம் - பிடித்த விற்களினின்று, ஒலிபட - ஓசையுண்டாக, 
எதிர் எதிர்தொடுத்த- எதிரிலேஎதிரிலேசெலுத்தின, வாளி நெடு மழை- பெரிய
அம்புமழைகள்,-ஒருவர் உடலத்தில் மூழ்கி முனைஉறஉருவு தொழில்- அற்று -
ஒருவருடம்பில்தைத்துக்கூர்நுனி பொருந்த(அவவுடம்பை) ஊடுருவிச்செல்லுஞ்
செயலில்லாமல், நூலின் முறைமையின் இருவர்உம் விலக்க- ஆயுதசாஸ்திரத்தின்
முறைமைப்படி அவ்விரண்டுபேரும் விலக்குதலால், எதிர் எதிர் கடித்து -
(இடைவழியிலே ஒன்றையொன்று) எதிரிலே எதிரிலே பற்றிக்கொண்டு, வானம்
மறைய - ஆகாயத்தினிடம் மறையும்படி, ஓடி விலகின - விரைந்துமீண்டன; 
(எ -று.)

     பகதத்தன் வீமன் என்ற இரண்டுபேரும் ஒருவரெய்த அம்பு மற்றொருவர்
மேற்படாதபடி ஊக்கத்தோடு எதிரம்புகோத்துப் பொருதல் பற்றி, இருவ ரம்புகளும்
இடையிலே ஒன்றையொன்று கௌவிக்கொண்டு கீழ்விழுந்திடுதலால், அப்போர்
வெற்றிதோல்விகளாகிய பயனைப் பெறாதாயிற்றென்க. பி-ம்: அரிதென.      (96)

52.- இரண்டுகவிகள்- பகதத்தன் ஏறிவந்த யானையின் சிறப்பு.

மகரிகைமருப்புநாலுமுளவெனில்வலியகுணதிக்கில்வாரணமுமெதிர்.
நிகரலவிதற்குநாமமுலைசெயினிலையுடையசுப்ரதீகமிதன்