பக்கம் எண் :

64பாரதம்துரோண பருவம்

                                          வலி,
பகரிலிபமெட்டுநாணுமெதிரெறிபடைகளுணர்வுற்ற
                                   போரிலெரிவரு,
புகர்முககரக்கபோலமதகரிபொருதொழிலுரைக்கலாகுமளவதோ.

     (இ-ள்.) மகரிகை- பூணையணிந்த, மருப்பு நால்உம்- நான்கு தந்தங்களும்,
இதற்கு -இவ்யானைக்கு, உள எனில்- உள்ளனவானால், வலிய குணதிக்கில்
வாரணம்உம் -வலிமையையுடைய கீழ்திசை யானையான ஐராவதமும், எதிர் நிகர்
அல - (இதற்கு)ஏற்றஒப்பாகாது; நாமம் உரை செயின் - (இதற்குப்) பெயர்
இன்னதென்றுசொன்னால், நிலை உடைய சுப்ரதீகம் - உறுதி நிலைமையையுடைய
சுப்பிரதீகம்(என்பதாம்); இதன் வலி பகரில் - இதன் வலிமையைக் கூறலுற்றால்,
இபம் எட்டுஉம்நாணும்- அஷ்டதிக்கஜங்களும் (தமக்கு இப்படிப்பட்ட
வலிமையில்லையே யென்று)வெட்கப்படும்; எதிர் எறி - எதிரிலே வீசுதற்குரிய,
படைகள் - ஆயுதங்களை,உணர்வு உற்ற - (யாவரும்) அறிந்துபிரயோகிக்கிற,
போரில் - யுத்தகளத்தில், எரிவரு - தீ எழுகிற, புகர்முகம் -
செம்புள்ளிகளையுடைய முகத்தையும், கரம் -துதிக்கையையும், கபோலம் மதம்-
கன்னங்களினின்று பெருகுகிறமதசலத்தையுமுடைய, கரி - (இப்பகதத்தன்) யானை,
பொரு - போர்செய்கிற,தொழில்-, உரைக்கல் ஆகும் அளவதுஓ- (எவராலேனுஞ்)
சொல்லுதற்குத்தக்கஅளவுள்ளதோ?   (எ -று.)

    மகரிகை - யானைக்கொம்பிற்பூண்; சுறாமீனின்திறந்தவாயின்
வடிவமாகச்செய்யப்படுவது: மகரமென்பதனடியாப்பிறந்த காரணப்பெயர்; மகரம் -
சுறாமீன். இனி, துதிக்கைமேல் எழுதப்படும் மகரிகாபத்திரமுமாம்; அது -
சுறாமீன்வடிவமாக எழுதப்படுஞ் சித்திரரேகை; "மகரிகை தரித்த மதமா" என்றார்,
முதற்போர்ச்சருக்கத்தும். நான்குதந்தங்களையுடைய அந்த ஐராவதத்தினும்
இரண்டுதந்தமுடைய இந்தச்சுப்பிரதீகத்துக்குக் குறைவு இரண்டு தந்தம் மாத்திரமே:
வலிமைஅழகு உத்தமவிலக்கணம் அறிவு வெண்மை பாரந்தாங்குதல் உயர்ந்த
வேந்தனையேந்தல் முதலிய சிறப்புக்களில் ஐராவதத்தினும்  சுப்பிரதீகம்
மேம்பட்டதுஎன்பது- முதல்வாக்கியத்துக்குக் கருத்து. உபமானத்தோடு
உபமேயத்துக்கு உள்ளவித்தியாசத்தை விளக்கியதனால், வேற்றுமையணி. 'இதற்கு'
என்பதை மத்திமதீபமாகஇரண்டு வாக்கியத்துக்குங் கூட்டுக. ஸுப்ரதீகம்என்ற
வடசொல் - ஸு -நல்ல,ப்ரதீகம்- அவயவங்களையுடையது எனப் பொருள்படும்.
எரிவருபுகர். -அனற்பொறியை யொத்த செம்புள்ளிகளுமாம்; யானைமுகத்தில்
செம்புள்ளிகளிருத்தல், உத்தமவிலக்கணம்: "தீயுமிழ் சிறுகணுஞ் செம்புகரு
முடைத்தாய்" என்றது காண்க. முன்னே கரம் என வந்ததனால், பின்னே 'கரி'
என்றது- துதிக்கையுடையதென்னுங் காரணப் பொருள் குறியாது, யானை
யென்னுமாத்திரமாய் நின்றது. கபோல மதகரி - வடசொல்தொடர். பி-ம்:-
வாரணமுமினி. நாமுமுரை செயின். படைகளுலவுற்ற.                (97)

53.கரிகளையெடுத்துவானினிடையிடைகரநுதிகொடெற்று
                               நீடுபிறைநிக,
ரிருபணைமருப்பினாலுமவரவரெதிரெதிருடைக்கு
                              நேமியிரதமு,
முரனுடையசித்ரவால்கொடெருபடியொலியொடு.