புடைக்கும் வாசிவிழவிழ, வரவகயமிட்டுவீழநடை பயிலடிகொடுதுகைக்கும் வீரரணியுமே. |
(இ-ள்.) (அவ்யானை),- கரம் நுதி கொடு - (தன்) துதிக்கையின் நுனியினால், கரிகளை எடுத்து - யானைகளை (உயர) எடுத்து, வானின் இடைஇடை - ஆகாயத்தினிடந்தோறும், எற்றும் - வீசியெறியும்; நீடு- நீண்ட, பிறை நிகர் - இளஞ்சந்திரனை யொத்த, இரு பணை மருப்பினால்உம்- பருத்த தந்தங்களிரண்டினாலும், அவர் அவர் எதிர் எதிர் - அவ்வவ்வீரர்களது எதிரிலே எதிரிலே, நேமி இரதம் உம்- சக்கரங்களையுடைய தேர்களையும், உடைக்கும்-; உரன்உடைய - வலிமையையுடைய, சித்ரம் வால்கொடு - அழகிய வாலினால், வாசி விழவிழ - குதிரைகள் மிகுதியாக விழும்படி, ஒலியொடு-ஓசையுடன், ஒரு படி புடைக்கும்- ஒருவிதமாய் அடிக்கும்; அரவு- (பூமியைத்தாங்குகிற) ஆதிசேஷன், அபயம் இட்டுவீழ- ( பார மிகுதியை ஆற்றாமல்) அபயம் வேண்டிக் கீழ்விழும்படி, நடைபயில்-நடத்தலைச் செய்கிற, அடி கொடு - கால்களால், வீரர் அணிஉம்- காலாள்வீரர்களதுகூட்டத்தையும், துகைக்கும்- மிதித்துத் துவைக்கும்; (எ -று.) இப்பாட்டின் நான்கு வாக்கியங்களால், அந்தப்பகதத்தன்யானை பாண்டவரது நால்வகைச்சேனையையும் தன் உறுப்புகளால் அழித்தலை விளக்கினார். கரநுதி, சித்ரம்-வடமொழிகள். வால்- வால மென்னும் வடசொல்லின் விகாரம். யானைத்தந்தத்துக்குப் பிறையுவமை- வளைவு வெண்மை ஒளிகளாலென்க. ' அவரவர் எதிர் எதிர்' என்பதை முந்தினபிந்தின வாக்கியங்களுக்குங் கூட்டுக; அவ்வவ்வீரர் பார்த்தும் பரிகாரமொன்றுஞ் செய்யமாட்டாமல் நிற்க என்க. அபயமிடுதல் - பயப்படாதேயென்று வாக்குத்தத்தஞ் செய்யவேண்டுமென்று பிரார்த்தித்தல், அடைக்கலங்கொள்ளல். 'உரனுடைய சித்திரவாலதிகொடொருபடிபுடைக்கும் வாசிவிழ விழ' என்ற பாடம், சந்தத்துக்குப்பொருந்தாது. பி -ம்: அணியையே. (98) 54.- பகதத்தனாலும் அவன்யானையினாலும் தம்சேனை இளைத்ததுகண்டு தருமன் ஸ்ரீகிருஷ்ணனை நினைத்தல். அமர்செய்பக தத்த னாலு மவன்விடு மருவிமத வெற்பி னாலு மணிகெழு, தமபடையி ளைத்த தாக விரகொடு தருமனுணர் வுற்று வேறொர் திசையினி, லிமிழ்முரச ரற்று பூசல் புரிதரு மிளையவனடத்து தேரின் வலவனை, நிமலனைய னைத்து மான வொருவனை நினையினன்ம னத்தி னோடு பரவியே. |
(இ -ள்.) (இப்படி), அமர்செய்- போர்செய்கிற, பகதத்தனாலும்-, அவன் விடும்- அவன் ஏவின, அருவி மதம் வெற்பினால்உம்- மதநீரருவியையுடைய மலைபோன்ற யானையினாலும், அணி கெழு தம படை - அழகுமிக்க தம்முடைய சேனை, இளைத்தது ஆக - சோர் வடைய,- (அப்பொழுது), தருமன்-, விரகொடு உணர்வு உற்று- |