அரிய அமர் உற்றது- பொறுத்தற்கரிய போர் நேர்ந்தது,' என - என்று, உரை செய்தான்- சொல்லியருளினான்; ( எ -று.) கீழ் ஏழாம்பாட்டில் " கோத்தருமன் பணித்ததற்பின்" என்றதற்கு ஏற்ப, 'நிருபன் நியமித்தபடி' என்றார், அருச்சுனனுக்க நியமித்தது, அவன் சாரதியான கண்ணனுக்கும் அமையும், 'நியமித்தபடி பொருது' என்றதனால், கண்ணனது அடியார்க்கெளிமை பெறப்படும். அர்ச்சுனனது வடிவத்தில் ஆவேசித்துத் தொழில் செய்பவன் திருமாலே யாதலால், 'அமர்பொருது செயமுற்றி' எனப் போரும் வெற்றியும் கண்ணன்மேலும் ஏற்றிக் கூறப்பட்டன. பி-ம்: பகழிமழை, இதுமுதல் பன்னிரண்டு கவிகள்- பெரும்பாலும் ஒன்ற மூன்று ஐந்தாஞ் சீர்கள்புளிமாங்காய்ச்சீர்களும், இரண்டு நான்காஞ் சீர்கள் கருவிளங்காய்ச்சீர்களும், ஆறுஏழாஞ் சீர்கள் புளிமாச்சீர்களுமாகிய எழுசீராசிரியச் சந்தவிருத்தங்கள். இவற்றிற்கு'தனதத்த தனதனன தனதத்த தனதனன தனதத்த தனன தனனா' என்பதுசந்தக்குழிப்பு (100) 56.- பகதத்தனைக்கொல்லவருகஎன்று ஸ்ரீக்ருஷ்ணன் அருச்சுனனிடங் கூறுதல். ஒருபத்தொடுறழொருபதுறழ்பத்தொடுறழொருபதுடையெட்டு விருதருயிர்நீ, தெரிவித்தபகழிகொடுமடிவித்துவலிமையொடுசிலை வெற்றியுற வமர்செய்தாய், முரணற்றதிவணினியுன் னுயிரொத்த தமையனொடு முனைபுக்கு விரைவினணுகா, வரையொத்த களிறுடையபகதத்தனுயிர்கவரவருகிற்றி நொடியிலெனவே. |
இதுவும், மேற்கவியும் - குளகம். (இ -ள்.) (கண்ணன் அருச்சுனனை நோக்கி), 'ஒருபத்தொடு உறழ் ஒருபது உறழ் பத்தொடு உறழ் ஒருபது உடை எட்டு விருதர்- எண்பதினாயிரம் வீரர்களது, உயிர்- உயிரை, நீ-, தெரிவித்த பகழி கொடு- (பெரியோரால்) அறிவிக்கப்பட்ட அம்புகளால், மடிவித்து - (இப்பொழுது) அழித்து, வலிமையொடு பலத்துடனே, சிலை- வில்வித்தையில், வெற்றிஉற- சயமுண்டாம்படி, அமர் செய்தாய்- போரைச்செய்தாய்; (ஆதலால்), இவண் - இவ்விடத்தில், முரன் அற்றது- (உனக்குப்) பகை ஒழிந்தது; இனி - இனிமேல், (நீ), விரைவின் - துரிதமாக, முனை புக்கு - போர்க்களத்தினுட் பிரவேசித்து, உன் உயிர் ஒத்த தமையனொடு அணுகா - உனது உயிரைப் போன்ற தமையனான தருமனுடனே சேர்ந்து, வரை ஒத்த களிறு உடைய பகதத்தன் உயிர் கவர - மலையைப்போன்ற யானையையுடைய பகதத்தனது உயிரை (அவனுடம்பினின்றும்) பறிக்கும் பொருட்டு, நொடியில் - இந்நொடிப்பொழுதிலே, வருகிற்றி - ( உடன்) வருவாய்,' என - என்று சொல்லி,- (எ -று.)-' அணுகினான்' என அடுத்தகவியில் முடியும். அன்று சஞ்சத்தகரில் மடிவித்தவர் எண்பதினாயிர வீரரென்க. |