உறழ்தல் - எண்கூட்டிப்பெருக்கல். பத்தோடு பெருக்கிய பத்து- நூறு, அதனோடு பெருக்கிய பத்து - ஆயிரம், அதனோடு பெருக்கிய பத்து - பதினாயிரம்:அதனையுடைய எட்டு - எண்பதினாயிரம். தெரிவித்த பகழி- (கிருபனும்துரோணனும் பரமசிவனும் கண்ணபிரானும்) கற்றக்கொடுத்த அஸ்திரசஸ்திரங்கள்.எக்காலத்தும் ஒருபடிப்பட நித்தியமாய் அழிவில்லாததான உயிருக்குமடிதல்-உடம்பினின்று நீங்குதல். விருது- வலிமை, வீரம், வெற்றி; அவற்றையுடையவர்-விருதர். பி -ம் : நிருபர். (101) 57.- ஸ்ரீ க்ருஷ்ணன் அருச்சுனனோடு பகதத்தனை யணுகுதல். அரியொத்த பரிகடவிமனமொத்த விரதமிசையமரர்க்கு முதல்வன்மகனோ, டெரிபற்றிவருமனில மெனவெற்றி வரிவளையு மிதழ்வைத்தவ் வொருநொடியிலே, கிரிமுற்று மரிவதொரு கிளர்வச்ர னெனவுதய கிரியுற்ற பரிதியெனவே, கரிசுற்றும் வரவிகட கரடக் கைம்மலையில்வருகணை விக்ரமனையணுகினான். |
(இ-ள்.) அரி ஒத்த (வேகத்தில்) வாயுவைப்போன்ற, பரி - குதிரைகளை, கடவி-செலுத்திக்கொண்டு, மனம் ஒத்த இரதமிசை மனத்தையொத்த தேரின் மீது, அமரர்க்கு முதல்வன் மகனோடு- தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுக்குப் புத்திரனாகிய அருச்சுனனுடன், எரி பற்றி வரும் அனிலம் என - நெருப்போடு தொடர்ந்து வருங் காற்றுப்போல, வெற்றி வரி வளைஉம் இதழ் வைத்து- சயத்துக்கு (அடையாளமாக)க் கோடுகளையுடைய தன் சங்கத்தையும் வாயில்வைத்து ஊதிக்கொண்டு, அ ஒரு நொடியிலே - அந்த ஒரு மாத்திரைப் பொழுதிலே, (கண்ணன்),- கிரி முற்றுஉம் அரிவது ஒரு கிளர் வச்ரன் என - மலைகளெல்லாவற்றையும் இறகறுப்பதொரு விளங்குகிற வச்சிராயுதத்தையுடைய இந்திரன் போலவும், உதயகிரி உற்ற பரிதிஎன - உதய பருவதத்தின் மேற் பொருந்தின சூரியன் போலவும்,- கரி சுற்றும் வர - யானைகள் (தன்னைச்) சுற்றிலும்வர, விகடம் கரடம் கை மலையில் வரு - களிமயக்கத்தையும் மதசலத்தையும்துதிக்கையையுமுடைய மலைபோன்ற யானையின் மீது வருகிற, கணை விக்ரமனை -அம்புதொழிலிற் பராக்கிரமத்தையுடைய பகதத்தனை, அணுகினான்- சமீபித்தான்; (எ- று.) அரி - ஹரி; வடசொல்: (அகப்பட்டபொருள்களை) அடித்துக் கொண்டு வருவது என்று பொருள். ஏறியவீரரது உள்ளக்கருத்தை யொத்துச் செல்லுவ தென்பார், 'மனமொத்த இரதம்' என்றார்; மனோவேகம்போலச் செல்லுந் தேர் என்றலும் ஒன்று. ( திருமால் வீற்றிருக்கும் இடமாதல்பற்றி) இதய கமலத்தை யொத்த தேரென்றலும் அமையும். நெருப்பு- பகையழிக்கும் அருச்சுனனுக்கும், காற்று- அவனைத் தூண்டித் தொழில் செய்விக்குங் கண்ணனுக்கும் வினையுவமை. வடமொழி மகாபாரதத்திலும் இவ்வுவமை விவரித்துக் கூறப்பட்டுள்ளமை காண்க. அவ்வொருநொடியிலே - தருமன் நினைத்தவுடன் மிகவிரைவிலே என்றபடி. முன்றாமடி - யானை மீது வரும் பகதத்தனுக்கு உவமை. இந்திரன், ஐராவதயானையின்மேல் |