பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்69

ஏறிவருதல்பற்றி, உவமை கூறப்பட்டான். இந்திரன் செல்வ வாழ்க்கைபற்றியும்,
பரிதிதேககாந்தியும் பகையிருளொழிக்குந்தன்மையும் பற்றியும் உவமையாவர்.
வச்ரன்என்னும் பெயரால் இந்திரனைக் குறித்தலை, மேல் 65- ஆங் கவியிலுங்
காண்க.பி-ம்: வச்ரமென, வச்ரியென, சக்ரனென, கணைவித்தகனை.    (102)

58.- இதுவும் அடுத்த கவியும்- பகதத்தன் பொருது அருச்சுனனைத்
தளர்வுறச் செய்தமை கூறம்.

அனிலத்தின் மதலையொடு வயிரத்து மலையுமுனையமர் விட்டு
                                   முகிழ்நகைசெயாத,
வினியிற்றைய மரிலரிதெளிதொட்டியெதிர் பொருதலென
                             மத்தகரியின் மிசையான்,
மனமுற்று மழல்கதுவ மொழிமுற்றுமடி நிகரவலிபட்ட
                                  சிலையைவளையா,
மினலொத்த கணைபலவும் வசையற்ற புகழுடைய
                           விசயற்குமிசை யுதவினான்.

     (இ-ள்.) (அப்பொழுது), மத்தகரியின் மிசையான்- மதம் பிடித்த
யானையின்மேலுள்ளவனான பகதத்தன், - அனிலத்தின் மதலையெடு - வாயுவின்
புத்திரனான வீமனுடனே, வயிரத்து மலையும் - பகைமையோடு போர்செய்கிற,
முனை அமர் - கொடியபோரை, விட்டு- ஒழித்து,- முகில் நகை செயா- அரும்புகிற
புன்சிரிப்பைச் செய்து,-' இனி-, இற்றை அமரில்- இன்றைப் போரில் எளிது ஒட்டி
எதிர் பொருதல்- சுலபமாகச் சபதஞ்செய்து  (அவ்வாறே) எதிர்த்துப் போர்
செய்தல்,அரிது - அருமையானது, ' என - என்று எண்ணி,- மனம் முற்றுஉம் -
மனம்முழுவதிலும், அழல் கதுவ- கோபத்தீப்பற்றவும், மொழி முற்றுஉம்-
(வீரவாதமான) சொற்களெல்லாம், இடி நிகர- இடிமுழக்கத்தை ஒத்திருக்கவும், வலி
பட்ட சிலையை வளையா - உறுதி மிக்க வில்லை வளைத்த, மினல் ஒத்த கணை
பலஉம் - மின்னலைப்போன்ற[விளங்குகின்ற] அம்புகளநேகங்களை, வசை அற்ற
புகழ் உடைய விசயற்குமிசை- பழிப்பில்லாத கீர்த்தியையுடைய அருச்சுனன் மேலே,
உதவினான் - பிரயோகித்தான்;

     'தேவர்களை இருதிணையாகவுங் கூறலாம்' ஆதலால், இங்கே 'அனிலம்' என
அஃறிணையாகக் கூறப்பட்டது. வைரம் என்னும் வடசொல், போலிபெற்றது. முனை
அமர்- சிறந்த போருமாம்; முந்தின போ ரெனினுமாம். மின்னல்- தொழிலாகுபெயர்.
விசயற்கு மிசை - உருபுமயக்கமாக, அருச்சுனனது மேலே யென்க. பி-ம்: வயிரித்து.
                                                              (103)

59.அவன்விட்டசுடுகணைகள்கொடிமற்கடமு நடுவணற
                       வெட்டியதிதவளமா,
கவனத்தின்முடுகியடுபரிகொத்தியுடலிலிடு
                  கவசத்தைமறையநுழையூச்,
சிவனுக்குமலரிலுறைபிரமற்குமுணர்வரியதிகிரிக்
                         கைவலவனையுமிச்,
சவனத்தின்மிகுதுயரமுறுவிக்கவவசமிகுதளர்வுற்றதனு
                                 விசயனே.

இதுமுதல் மூன்று கவிகள் - குளகம்

     (இ -ள்.) அவன் விட்ட - அப்பகதத்தன் பிரயோகித்த, சுடு கணைகள்-
பகையழிக்கவல்ல அம்புகள்,- (அருச்சுனனது), மற்கடம்