கொடிஉம்- குரங்கின் வடிவமெழுதின துவசத்தையும், நடுவண் அற- நடுவிலே அறும்படி, வெட்டி - துணித்து, - அதி தவளம்- மிக வெண்மையானவையும், மா கவனத்தின் முடுகி அடு- மிக்க நடையில் விசைகொண்டு பொருந்துபவையுமான, பரி- குதிரைகளை, கொத்தி- பேதித்து,- உடலில் இடு கவசத்தை- உடம்பில் தரித்த கவசத்தை, மறைய- (முழுவதும்) மறையும்படி, நுழையூ- நுழைந்து, சிவனுக்குஉம்-, மலரில் உறை- தாமரை மலரில் வாழ்கிற, பிரமற்கு உம்- பிரமனுக்கும், உணர்வு அரிய - அறிதற்கு முடியாத, திகிரிகை வலவனைஉம்- சக்கரத்தையேந்துங் கையையுடைய (பார்த்த) சாரதியான கண்ணனையும், இ சவனத்தில்- இப்போரில், மிகு துயரம் உறுவிக்க- மிக்க துன்பமடையச்செய்ய,- அவசம் மிகு தளர்வு உற்ற- தன்வசந் தப்புந்தன்மை மிகும்படியான தளர்ச்சியை யடைந்த, தனு விசயன்- விற்போரில்வல்ல அருச்சுனன்,- (எ-று.)-, 'தனதுசிலைகுனிவித்து' என அடுத்த கவியோடு தொடரும். மூன்றாம் அடியால், "பத்துடையடியவர்க்கெளியவன் பிறர்களுக்கரிய வித்தகன்" என்ற இரண்டுதன்மைகளும் நன்குவிளக்கப்பட்டன. வலவனையும், உம்- உயர்வுசிறப்போடு இறந்ததுதழுவிய எச்சம். சவனம் என்பதை ஸவநம் என்ற வடசொல்லின்திரிபு என்க; வேள்வியென்று பொருளாம்: பொருதல் 'களவேள்வி' எனப்படுதல் காண்க. 'ஜவநம்' என்ற வடசொற்றிரிபு என்றால், வேகத்தால்மிக்க தென்று காரணப்பொருள்படும். மர்க்கடம், அதிதவளம், கவசம், அவசம் - வடசொற்கள். தநு - உடம்பையுடைய எனினுமாம். பி - ம்:- தவளவெங். சிவமுற்ற.வலவனையுமே. (104) 60.- மூன்றுகவிகள்-அருச்சுனன் தன் பராக்கிரமத்தைக் காட்டியமைகூறும். உரமிக்க தனதுசிலைகுனிவித்துமதியின்வகிருவமிக்குமடு பகழியால், வரமிக்கதவளநிறமதவெற்பையெதிர்கடவிவருவெற்றிய வனிபதிநீள், கரமுற்றசிலைகவசமறவெட்டிவிடுகணைகள்கணைவிட்டு விலகவவனும், சரம்விட்டொரயில்விசயனிரதத்தின்வலவன்மிசைத மரத்தினுடனெறியவே. |
(இ-ள்.) உரம் மிக்க - வலிமை மிகுந்த, தனது சிலை - தன் வில்லை, குனிவித்து - வளைத்து, மதியின் வகிர் உவமிக்கும்- சந்திரனது பிளப்போடு ஒப்புமைகூறப்படுகிற, அடு பகழியால் - அழிக்க வல்ல அர்த்தசந்திரபாணங்களால்-, வரம் மிக்க- மேன்மை.மிகுந்த, தவளம் நிறம்- வெண்ணிறத்தையுடைய, மதம் வெற்பை- மதத்தையுடைய மலைபோன்ற யானையை, எதிர் கடவி வரு- எதிரிற் செலுத்தி வருகிற, வெற்றி அவனிபதி - சயத்தையுடைய அரசனான பகதத்தனது, நீள் கரம் உற்ற - நீண்ட கையிற் பொருந்தின, சிலை- வில்லும், கவசம்- உடற்கவசமும், அற- துணிபடும்படி, வெட்டி- பிளந்து, விடு கணைகள்- (அவன் தன்மேல்) விடும் ஆயுதங்களை, கணை விட்டு- எதிரம்பு கோத்து, விலக- (அருச்சுனன்) விலக்க,- அவன்உன்- அப்பகதத்தனும், சரம் விட்டு- அம்பையொழித்து, ஓர் அயில்உம்- ஒரு வேலாயுதத்தை, விசயன் இரதத்தின் வலவன்மிசை- அருச்சுனனது தேர்ப்பாகனான கண்ணபிரான்மேல், தமரத்தினுடன்- ஆரவாரத் |