பக்கம் எண் :

74பாரதம்துரோண பருவம்

65.- இதுமுதல் மூன்றுகவிகள்- குளகம்: இதுதான் பகதத்தனுயிரைக்கவர்தற்குச்
சமயமென்று ஸ்ரீகிருஷ்ணன் படைகொடுக்க, விசயன் அது கொண்டு
பகதத்தனைக் களிற்றுச்சேனையொடு வீழ்த்தியமை கூறும்.

இதுநிற்க யமனைநிகர்பகதத்தனுயிர்கவரவிதுபக்வமென
                                 விசயனோடு,
தரத்தின் முழுதுலகுடிவைத்தபுயலுரைசெய்துறுதிக்கண்
                               விடுபகழிதா,
னிதயத்தினுடனருளவுயர்வச்ரன்மதலைதொழுதிருபொற்
                     கைம்மலர்கொடுகொளா,
வதிரத்தனெதிர்களிறு பொரவிட்டநொடியில
                      வனகலதினுருவவிடவே.

     (இ-ள்.) இது நிற்க-; உத்ரத்தில் முழுது உலகு குட வைத்த புயல் - (தனது)
திருவயிற்றிலே உலகமுழுவதையுந் தங்கவைத்த மேகம்போன்ற கண்ணபிரான்,
விசயனோடு - அருச்சுனனுடன், யமனை நிகர் பகதத்தன் உயிர் கவர இது பக்வம்
என உரைசெய்து - யமனை யொத்த பகதத்தனது உயிரை வாங்குதற்கு இது தக்க
பொழுது என்றுசொல்லி, உறுதிக்கண் விடு பகழிதான் - தவறாதவிதத்திலே
பிரயோகிக்கபடுவதான அம்பை, இதயத்தினுடன் அருள- திருவுள்ளத்தோடு
(அவனுக்குக்) கொடுத்தருள,- உயர் வச்ரன் மதலை - சிறந்த இந்திரனது
புத்திரனானஅருச்சுனன், தொழுது- (கண்ணனை) வணங்கி, இரு பொன் கை
மலர் கொடு-அழகிய தாமரைமலர் போன்ற (தனது) இரண்டு கைகளாலும்,
கொளா-(அந்தஅம்பைப்) பெற்றுக் கொண்டு,- அதிர தன் எதிர் களிறு பொர
விட்டநொடியில் - அதிர்ச்சியுண்டாம்படி தன்எதிரிலே யானையைப்
போர்செய்தற்குச்செலுத்தின சமயத்தில், அவன் அகலத்தின் உருவ விட-
அப்பகதத்தனது மார்பில்ஊடுருவிச் செல்லும் படி (அதனைக்) பிரயோகிக்க,-
(எ -று.)-"பகதத்தனும் பட்டுஅவனூர்ந்த பகடும்பட்டு" என் மேல் 67-ஆங்
கவியோடு இயையும்.   

     இங்கே கண்ணன் கொடுத்தது, தனது நாராயணாஸ்திரம்; "விரிகடல்
வண்ணன்றன் வெவ்வாளி யேவப், புரிகடல்சூழ் பூதலத்துப்பொங்கிக்- கரியுண்,
மலைதுமிக்கு மால்யானை மன்னு பகதத்தன், தலைதுமியப் போயிற்றே தான்"
என்றபாரதவெண்பாவை அறிக. யமன் என்ற வடசொல்- (பிராணிகளை)
அடக்குபவனென்று பொருள்படும். யமனுவமை, தவறாமற் கொல்லுதற்கு.
"ஒருகையாற் கொள்ளார் கொடாஅர் குரவர்க்கு" என்ப வாதலால், இருகைகொடு
கொண்டான்; இங்ஙனகொள்ளுதல், உபசாரம். 'இருபொற்கைம்மலர்கொடு'
என்பதை,மத்திமதீபமாக தொழுது என்பதனோடுங் கூட்டலாம். இதயம் - மனதில்
தோன்'றும்அன்புக்கு ஆகுபெயர். பொற்கை- பொன்னாபரணமணிந்த கையுமாம்.
பி - ம்
:பகழியொன்று.                                        (110)

66.பரிதத்த வருமிரத மிசைதத்த வெதிர்முடுகு
                பகதத்தனுடன் முழுதுநீ,
டெரிதத்தி யுகுவதென வுகுவித்த குருதிநதியிடைதத்த
                   வலிகெ ழுவுதோட்,
கிரிதத்த மகுடமொடு தலைதத்த வொருரசத