பக்கம் எண் :

78பாரதம்துரோண பருவம்

இவற்றிற் கூறியவற்றாலும் அறிக. அவனுக்கு இடமான அளகாபுரி கைலாசமலையின்
ஒருசாருள்ள தென்று புராணம் கூறும். சிகரம் என்ற மலையுச்சியின் பெயர்- இங்கே,
மலைக்குச் சினையாகு பெயர். இனி, விஞ்சைக்கடவுள் சிகரம் என்பதற்கு-
வித்யாதரர்களுக்கு இருப்பிடமான வெள்ளிமலை யென்றுங்கொள்ளலாம். ஈற்றடிக்கு-
போர்செய்தது அழிந்த அரசர்மிகப்பலரென்று கருத்துக் கொள்வாருமுளர்.  (115)

71.- இதுஇங்ஙன் நிற்க, மற்றொருபால் சகுனி தருமனுடனே
போர்புரியப்புகுதல்.

இங்கிப்படிபோருடன்றெழுந்தசகுனியிவன்கையெரிகணையாற்
பங்கப்பட்டவரசொழியப்படாதவரசர்பலரோடுஞ்
சிங்கத்தனியேறெனச்செம்பொற்றேர்மேனின்றதருமனுடன்
புங்கப்படையாலமர்புரியப்புகுந்தான்மதுகைப்புலிபோல்வான்.

     (இ-ள்.) இங்கு - இவ்விடத்தில் [அருச்சுனனெதிரில்], (நடந்த செய்தி), இ
படி -இவ்விதமாம்!  (மற்றொருபக்கத்தில்), போர் உடன்று எழுந்த- போர்
செய்தற்குக்கோபித்துப் புறப்பட்ட, மதுகை புலி போல்வான் - (பராக்கிரமத்தில்)
வலிமையுடையபுலியை யொப்பவனான, சகுனி-, இவன் கை எரிகணையால்
பங்கப்பட்ட அரசுஒழிய படாத அரசர் பலரோடுஉம் - இவ்வருச்சுனனது
கையாலெய்யப்பட்டஅழிக்கவல்ல அம்புகளால் அழிவடைந்த அரசர்கள் தவிர
அழிவடையாத பலஅரசர்களுடனே (கூடி), தனி சிங்கம் ஏறு என செம்பொன்
தேர்மேல் நின்றதருமனுடன் - ஒப்பற்ற ஆண்சிங்கம்போலச் சிவந்த
பொன்மயமான தேரின்மீதுநின்ற யுதிட்டிரனுடனே, புங்கம் படையால் அமர்
புரிய - அம்புகளாகியஆயுதங்களால் போர்செய்தற்கு, புகுந்தான் - சென்றான்;
(எ-று.)

     தருமனுக்கும் சகுனிக்கும் வலிமை முதலியவற்றில்உள்ள ஏற்றத்தாழ்வு
தோன்ற,சிங்கத்தையும் புலியையும் உவமை கூறினார். பலரோடும்புகுந்தான் என்க.
தனி நின்றஎன்றும் இயைக்கலாம். புங்கப்படை - அம்புகளின் தொகுதியுமாம்;
தொகுதியாகியஆயுதங்களுமாம்.                             (116)

72.- தருமபுத்திரனை கணை தூவ, சகுனி இலக்காகாமற் பின்னிடுதல்.

சோரத்துடனீபொருதடர்த்தசூதன்றிவைமெய்துளைத்துருவும்
வீரப்பகழியுனையிவற்றால்வெல்வேனெனப்போர்வில்வாங்கி
யீரக்கருணைமுகத்தண்ணலெய்தானவற்றுக்கெட்டாமற்
பேரப்பேரத்தேர்கடவிப்பின்னிட்டவர்க்குமுன்னிட்டான்.

     (இ-ள்.) (அதுகண்டு), ஈரம் கருணை முகத்து அண்ணல் - குளர்ச்சியான
அருள் (வெளித்தோன்றும்) முகத்தையுடைய அரசனான யுதிஷ்டிரன்,
(சகுனியைப்பார்த்து),' நீ சோரத்துடன் பொருது அடர்த்த சூது அன்று - நீ
வஞ்சனையோடு போர்செய்து வென்ற சூது போ ரன்று (இது)! இவை-, மெய்
துளைத்து உருவும் வீரம் பகழி- உடம்பைத் துளைசெய்து ஊடுருவுகிற
வலிமையையுடைய அம்புகள் [சூதாட்டம் ஆடும் பாசிகைகள் அல்ல]! உனை -
(முன்பு என்னைச் சூதுகருவியால் வென்ற) உன்னை, இவற்றால் வெல்வேன் -
(இப்பொழுது) இம்மோது கருவிகளால் சயித்திடுவேன்,' என - என்று