பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்79

(வீரவாதங்), கூறி, போர்வில் வாங்கி - போருக்குரிய வில்லைவளைத்து, எய்தான்-
(பல அம்புகளைப்) பிரயோகித்தான்; ( உடனே சகுனி), அவற்றுக்கு எட்டாமல் -
அவ்வம்புகளுக்கு இலக்காகாதபடி, பேர பேர தேர் தடவி - பிற்படப் பிற்படத்
(தன்)தேரை விசையோடு செலுத்திக் கொண்டு, பின் இட்டவர்க்கு முன் இட்டான்
- புறங்கொடுத்தவர்களுள் முந்திச்சென்றவனானான்; (எ - று.)

     'இது சூது போரன்று, மோதுபோர்: என் கையிலிருப்பவை பாசிகையல்ல,
பகழிகள்' என்றது - விலக்கணி ; இதனை வடநூலார் ப்ரதிஷேதாலங்காரம்
என்பர்;பிரசித்தமானதாகியும் அபிப்பிராயத்தோடு கூடியு மிருக்கின்ற விலக்கைச்
சொல்லுதல்,இதன் இலக்கணம். இதில், அம்பிற் சூதின்தன்மையில்லாமை
பிரசித்தமாக விருக்கவும்,' அன்று' என்னும் விலக்கு, நீ சூதாட்டத்தன்றி அம்பிற்
சமர்த்தனல்லை யென்றும்இகழ்ச்சியை உட்கொண்டிருக்கின்றது. 'அவற்றிற்கு
எட்டாமல்' என்றும்,'பின்னிட்டவர்க்கு முன்னிட்டான்' என்றுங் கூறினது-
சமத்காரம். தருமனம்புகளுக்குஎட்டாமலிருக்கவும், முன்னிடவும்- இவையல்லது
வேறு உபாயமில்லையென்றவாறு.                                  (117)

73.- சகுனியுடனேவந்து தருமனுடன்பொருத அரசருள்
அழிந்தவர்போக மற்றையோர் ஊர்புகுதல்.

உடனேவந்துபொருநிருபரொருவர்க்கொருவருதிட்டிரன்கை
விடநேர்கணையாலேவுண்டுவிளிந்தாரொழிந்தார்வெஞ்சமத்திற்
கடனேதமக்கென்றுார்புகுந்தார்காலைச்செந்தாமரைமலர்ந்த
தடநேரென்னநிறம்பெற்றதப்போதந்தச்சமபூமி.

      (இ-ள்.) உடனே- அச்சகுனியுடனே, வந்து-, பொரு- போர்செய்த நிருபர் -
அரசருள், ஒருவர்க்கு ஒருவர்- ஒருவரினும் ஒருவர், உதிட்டிரன் கை விடம் நேர்
கணையால் - தருமன் கையிலுள்ள விஷத்தையொத்த அம்புகளால், ஏவுண்டு -
(மிகுதியாக) எய்யப்பட்டு, விளிந்தார் ஒழிந்தார் - இறந்தவர்கள் போக
மிச்சமானவர்கள். வெம் சமத்தில்- கொடியபோரில், தமக்கு கடன் ஏ என்று-
(புறங்கொடுத்தல்) தமக்கு முறைமையே யென்று கருதி, ஊர் புகுந்தார் -(தம்)
ஊரையடைந்தார்கள்;  அ போது - அப்பொழுது, அந்த சம பூமி - அந்த
யுத்தகளம்,காலை செம் தாமரை மலர்ந்த தடம் நேர் என்ன - உதய காலத்திற்
செந்தாமரைமலர் மலரப்பெற்ற தடாகம் ஒப்பென்னும்படி, நிறம் பெற்றது -
விளக்கமடைந்தது; (எ - று.)

     பலமுறை தோற்று ஓடிப் பழகிவிட்டதனால், நிருபர்புதுமை கருதி நாணாமல்
தமக்குக் கடனேயென்று ஊர்புகுந்தன ரென்க. செந்தாமரைமலர்ந்த தடம்,
இரத்தத்தால் செந்நிறம் பெறுதற்கு உவமையாதலுமாம். இறந்த அரசர்களது
இரத்தத்தோடு கீழ் விழுந்த முகங்களைச் செந்ததாமரைமலர்க ளென்னலாம்.
ஸமபூமி- (போர்செய்தற்கு ஏற்ப) மேடுபள்ளமில்லாமல் எங்குஞ் சமமாகவுள்ள
குருக்ஷேத்திரமென்றலுமாம். பி -ம்: எய்வுண்டு.                     (118)

74.- மற்றொருபக்கத்தில் துரோணன்முதலியோர் வீமனுடன் எதிரிடுதல்

ஆசாரியனுந்திருமகனுமடல்வேலங்கர்பெருமானுந்
தூசாருரகக்கொடிநெடுந்தேர்த்துரியோதனனுந்தம்பியரும்