பக்கம் எண் :

8பாரதம்துரோண பருவம்

தொடைஉடை - தொடுக்கப்படுந்தன்மையுள்ள, வாளி - அம்புகளின். மாரி -
மழையை, சோனை அம்புயலின் - விடாப்பெருமழைபொழிகிற அழகிய மேகம்போல.
பெய்தார் -(ஒருவர்மேல் ஒருவர் இடைவிடாமற்) சொரிந்தார்கள்; (எ - று.)

     இனி, 'நாகரும்பனிக்கும்வண்ணம்’என்பதற்கு -(பாரமிகுதியால்
பாதாளலோகத்திலிருந்து பூமியைத்தாங்குகிற ஆதிசேஷன் முதலிய) நாகர்களும்
வருந்தும்படி எனினும் அமையும். தொடையுடைவாளி -ஒன்றையொன்று
தொடர்தலையுடைய அம்புகளெளினுமாம். உவமையணி. வரூதம் - ரதகுப்தி,
தேர்க்காவல்: அதனையுடையது - வரூதிநீஎன ஏதுப்பொருள், நாகரும், உம் -
உயர்வுசிறப்பு.                                               (7)

8.-சகதேவனும் சகுனியும் பொருதல்.

மருத்துவர்மைந்தர்தம்மிலிளவலும்வலியசூது
கருத்துடன்பொருதுவென்றமாமனுங்கலந்துதம்மில்
ஒருத்தரையொருத்தர்வேறலரிதெனவுடன்றுவேக
சரத்தொடுசரங்கள்பாயச்சராசனம்வாங்கினாரே.

     (இ-ள்.) மருத்துவர் - (தேவ) வைத்தியரான அசுவிநீதேவர்களின்,
மைந்தர்தம்மில் - குமாரர்களான நகுலசகதேவர்களுள், இளவல்உம்-
இளையவனானசகதேவனும், வலிய சூது- வலிமையையுடைய சூதுபோரை,
கருத்துடன் -(வஞ்சனை) நினைப்புடனே, பொருது- செய்து, வென்ற-
(பாண்டவரைச்) சயித்த,மாமன் உம் -(துரியோதனாதியரின்) மாமனான சகுனியும்,
தம்மில் கலந்து-தமக்குள்[ஒருவரையொருவர்]நெருங்கி, ஒருத்தரை ஒருத்தர் வேறல்
அரிது என - ஒருவரைமற்றொருவர் வெல்லுதல் முடியாதாம்படி [சமமாய்],
உடன்று - உக்கிரங்கொண்டு,வேகம் சரத்தொடு சரங்கள் பாய - விரைவுள்ள
அம்புகளோடு அம்புகள் பாய்ந்துஎதிர்கோத்து நிற்கும்படி, சராசனம் வாங்கினார்-
வில்லை வளைத்துப்போர்செய்தார்கள் ; ( எ -று.)

     மருந்தின்தன்மையையறிந்து வியாதிக்கு ஏற்றபடி உபயோகித்தலால்,
மருத்துவரென்று வைத்தியர்க்குப் பெயர்; மருத்துவர் - மருந்தையுடையவர்; மருந்து-
பகுதி. பொருது என்ற வினைக்கு ஏற்ப, சூது, போரெனப்பட்டது. போர் முதலிய
செல்வங்களை எளிதிற்பெறுவித்த உறுதியைக் கருதி, 'வலியசூது' என்றார். இனி,
வலிமை - கொடுமையுமாம். வேறல், வெல் -  பகுதி.                  (8)

9.-சகதேவன் சகுனியை வெல்லுதல்.

ஒருகணைதொடுத்துப்பாகனுயிர்கவர்ந்துயர்த்தகேது
விருகணைதொடுத்துவீழ்த்திபிரதமாத்தொலையநான்கு
பொருகணைதொடுத்துவஞ்சன்பொருவருமார்பிலாறு
வருகணைதொடுத்துவாகைமலைந்தனன்வஞ்சமில்லான்.