பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்81

யுடையதும், சிங்கத்தைக்கொல்லவல்லது மான தொரு மிருகவிசேடம்: இதனைப்
பறவையென்பாரும் உளர். வீமனது மிக்கவலிமையை விளக்கும்பொருட்டு, அவனை
'நெடுமேருவின் முக்குவடொடித்தான் நேயப்புதல்வன்' என்றது; கருத்துடையடை
கொளியணி:
நான்காமவடி - உவமையணி. ஓகாரங்கள் - எதிர்மறை.     (120)

76.- நான்குகவிகள் - எதிர்த்தவர்கள் அஞ்சுமாறும் புகழுமாறும்
வீமன் தன்வலிமைகாட்டியதைக் கூறும்.

பொல்லாவவுணர்வைகியமுப்புரநீறெழவன்றரன்வளைத்த
வில்லாமென்னவலியவிறல்வில்லொன்றெடுத்துவிறல்வீமன்
எல்லாமன்னவருமூர்ந்தமெல்லாவிரதங்களுமிமைப்பின்
வல்லானெறிந்தபம்பரம்போற்சுழலும்படிகால்வளைத்தானே.

     (இ -ள்.) (அப்பொழுது), வீறல் வீமன் - வலிமையுடைய வீமசேனன்,
பொல்லாஅவுணர் வைகிய - தீக்குணமுடைய அசுரர்கள் தங்கிய, மு புரம் -
மூன்றுபட்டணங்கள், நீறு எழ - சாம்பலாம் படி, அன்று - அக்காலத்தில், அரன்
வளைத்த - சிவபிரான் வளைத்த, வில் ஆம் என்ன - (மேருமலையாகிற) வில்லாகும்
(இது) என்னும் படி, வலிய - வலிமையையுடைய, விறல் - வெற்றியைத்தருகிற, வில்
ஒன்று -ஒரு வில்லை, எடுத்து-, -எல்லா மன்னவர்உம்ஊர்ந்த- எல்லாவரசர்களும்
ஏறிவந்த, எல்லா இரதங்கள்உம்- தேர்களெல்லாம், இமைப்பின் -கண்ணிமைப்
பொழுதிலே, வல்லான் எறிந்த பம்பரம் போல் சுழலும்படி - வல்லவன்
சுழற்றியெறிந்த பம்பரம் போலச் சுற்றும்படி, கால் வளைத்தான் - (இரண்டு)
கோடியையும் வணக்கினான்; ( எ -று.)

     உவமையணி.பொல்லா - பொல்லாமை என்ற எதிர்மறைப்பண்பின் அடி;
இதற்கு உடன்பாடு - பொற்பு, அல்லது பொலிவு; (பொன் என்னுஞ் சொல்
தொல்காப்பியவிதியால் ஈறுதிரிந்துநின்ற 'பொல்' என்பது- இவற்றில் பகுதியோ
மெனஉய்த்துணர்க.) கால்- வில்லின் தண்டம்.                       (121)

77.ஒன்றுமுதலாப்பலபகழியோரோர்தொடையிற்றொடுத்தேவி
யன்றுமுதன்மையுறமலைந்தவரசருடலந்தொறுமூட்டி
யின்றுமுதலாயோதனத்திலேறோமென்னும்படியாகக்
கொன்றுமுதற்பின்வருமுரகக்கொடியோன்மனமுங்
                              கொதிப்பித்தான்.

     (இ -ள்.) (வீமன்),- முதல்- முதலில் ஒன்று முதல் ஆ பல பகழி - ஒன்று
முதலாக அநேகம்அம்புகளை, ஓர் ஓர் தொடையில் தொடுத்து ஏவி - ஒவ்வொரு
தொடுக்குந்தரத்திலே பிரயோகித்துச் செலுத்தி, (அவற்றை), இன்று முதல்
ஆயோதனத்தில் ஏறோம் என்னும்படி ஆக - இன்றைத்தினம் முதல் [இனி]
போரில்எதிர்த்திடோம்' என்று கருதும்படி, அன்ற முதன்மை உற மலைந்த
அரசர் உடலம்தொறுஉம் மூட்டி -அப்பொழுது சிறப்பு பொருந்தப் போர்செய்த
அரசர்களதுஉடம்பெல்லாம் உட்புகுவித்து, கொன்று- (அவர்களை) அழித்து, -
பின்-பின்பு. வரும்உரகக்கொடியோன் மனம்உம் கொதிப்பித்தான் - வருகிற
துரியோதனனது மனத்தை