பக்கம் எண் :

82பாரதம்துரோண பருவம்

யும் (தன்பெருமிதத்தால்) கொதிக்கச்செய்தான்; (எ -று.)- முதன்மை-
முதலாந்தன்மை;முன்னிடுதல். ஊட்டி என்றும் பிரிக்கலாம். ஆயோதம் -
வடசொல். பி -ம்:முதன்மையுடன்.                             (122)

78.கொதித்தானரசனெனவரிவிற்குனித்ததாரிளைஞர்குனித்தது
                                கண்டதிர்த்தான்
வீமன்றன்கணையாலறுத்தான்வில்லுமணிநாணும்
விதித்தான்வரினும்வீமனுடன் விற்போர்புரிதலரிதென்று
மதித்தார்தம்முனினைத்ததெல்லாமுடிக்குஞ்சமரவரிவில்லார்.

     (இ -ள்.) அரசன் கொதித்தான் - என துரியோதனன் மிகக் கோபித்தா
னென்று அறிந்து, இளைஞர்- (அவன்) தம்பிமார், வரிவில் குனித்தார்-
(வீமனெதிரில்)கட்டமைந்த வில்லவளைத், தார்கள்; குனித்தது கண்டு- (அவர்)
வளைத்ததைப்பார்த்து, வீமன் அதிர்த்தான்- ஆரவாரித்து, தன் கணையால்- தனது
அம்புகளால்,வில்உம் அணி நாண்உம்- (அவர்கள்) வில்லையும்(அதிற்) பொருந்திய
நாணியையும்,அறுத்தான்-; (அறுக்கவே), தன் முன் நினைத்தது எல்லாம் முடிக்கும்
சமரம் வரிவில்லார் - தங்கள் தமையனான வல்ல போருக்குரிய கட்டமைந்த
வில்லையுடையஅத்தம்பிமார், 'விதி தான் வரின்உம் -(உலகத்தைப்) படைத்தவனான
பிரமதேவன்தானே வந்தாலும், வீமனுடன் வில்போர் புரிதல் அரிது - (அவனுக்கும்)
வீமனோடுவில்யுத்தஞ்செய்தல் முடியாது' என்ற மதித்தார் - என்று எண்ணினார்கள்;
(எ - று.)-விதித்தான் - இன்னபடி நடக்க வேண்டுமென்று நியமித்த முதற்
கடவுளுமாம்.                                                   (123)

79.நின்றார்நின்றபடிகொடித்தேர்நிருபன்றனையுமிளைஞரையும்,
வன்றாள்வரிவிற்குருவினையுமைந்தன்றனையுங்கன்னனையும்,
பொன்றாழ்மார்பிற்பலபடைக்கைப்பூபாலரையுங்
                                   கொல்லாமற்,
கொன்றான் வாயுகுமாரன்றன் கோலாகலவெங்
                              கொடுங்கணையால்.

     (இ-ள்.) வாயு குமரன்-  வீமன், தன் - தனது, கோலாகலம்-
ஆரவாரத்தையுடைய, வெம் கொடு கணையால்- மிகக்கொடிய அம்புகளால்,
கொடிதேர் நிருபன் தனைஉம்- கொடி கட்டிய தேரிலுள்ள துரியோதனராசனையும்,
இளைஞரைஉம்-(அவனது) தம்பிமாரையும், வல் தாள் வரி வில் குருவினைஉம் -
வலிய முயற்சியையும் கட்டமைந்த வில்லையு முடைய துரோணாசாரியனையும்,
மைந்தன்தனைஉம் - (அவன்) மகனான அசுவத்தாமனையும், கன்னனையும்-, பொன்
தாழ் மார்பின் - பொன்னாரந் தொங்குகிற மார்பையும், பல படை கை- அனேக
ஆயுதங்களை யேந்திய கைகளையுமுடைய, பூபாலரைஉம்- (மற்றை) அரசர்களையும்,
நின்றார் நின்ற படி - அவரவர் (திகைத்து) நின்றவாறே நிற்க, கொல்லாமல்
கொன்றான்-;  (எ - று.)

     வல் தாள் - வலிய கழுந்துமாம். கோலாஹலம் - வடசொல் கொல்லாமல்
கொன்றான்- பிராணாபாயமில்லாமல் மரணவேதனைப் படுத்தினன்:
தன்னையொன்றும் வருத்தாதிருக்கத் தான் வருத்தினான் என்றலும் ஒன்று:
"செய்யாமற்செய்தவுதவி" என்றாற் போல. 'நின்றார்நின்றபடி' என்பதை, (மதித்த
தம்பிமார்) நின்ற வாறே திகைத்துநின்றா ரெனக் கீழ்க்கவியோடு தொடர்ச்சி
யாக்குவாரும் உளர்.                                           (124)