பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்83

80.-எதிர்த்தவர் புறங்கொடுத் தோடுதல்.

இளைத்தடையப்பெருஞ்சேனையினிநாமொன்றுக்கீடாகோம்,
வளைத்தசிலையோடிவனிற்கமாயன்றன்னோ டவனிற்கத்,
துளைத்த கணையாற்றுரோணன்வலிதொலைத்தோனிற்
                              கமலைத்திவரைத்,
திளைத்தலரிதென்றக்களத்திற்பொன்றாவரசர்சென்றாரே.

     (இ-ள்.) (பின்பு), அ களத்தில்- அப்போர்க்களத்தில், பொன்றா அரசர் -
இறவாது சேடித்த அரசர்கள், 'பெரு சேனை அடைய- பெரிய சேனை முழுவதும்,
இளைத்தது- சோர்வடைந்து விட்டது; இனி - இனிமேல், நாம்-, ஒன்றுக்கு ஈடு
ஆகோம் - ஒரு தொழிற்செய்தற்கும் வலியுடையமல்லோம்; வளைத்த சிலையோடு-
வணக்கிய வில்லுடனே, இவன்- வீமன், நிற்க-, மாயன் தன்னோடு-
கண்ணபிரானோடு, அவன் - அருச்சுனன், நிற்க,- துளைத்த கணையால்
துரோணன்வலி தொலைத்தோன் - துளைசெய்த அம்புகளால், துரோணனது
வலிமையை (முன்)ஒழியச்செய்து தருமன், நிற்க- இவரை மலைத்து திளைத்தல்-
இவர்களை எதிர்த்துநெருங்குதல், அரிது - (எவர்க்கும்) முடியாது,' என்று -
என்றுஎண்ணி, சென்றார்-(புறங்கொடுத்துப் பாசறைக்குப் ) போயினார்; (எ-று.)

    ஒன்றுக்கு ஈடாகோம்- சிறிதும் போர்செய்யவல்லோமல்லோம் என்றபடி;
ஓரம்புக்கேனும் எதிராகோம் எனினும் அமையும். 'வளைத்தசிலையோடு' என்றதற்கு
இனமாக 'மாயன்தன்னோடு என்றதனால், ஆயுதம் வீரனுக்கு உதவுதல்போலக்
கண்ணன் அருச்சுனனுக்கு உதவுந் தன்மை குறிப்பிக்கப்பட்டது. பி-ம்
அக்கணத்தில்.                                                 (125)

81.- பாண்டவர் மகிழ்ச்சியோடு பாசறைசேர்தல்.

பெரும்பே ரறத்தின் றிருமகவைப் பிடிப்பானெண்ணி
                            முடிப்பான்போற்,
பொரும்போ ரரசருடன் வந்தபொற்றேர் முனியும்
                              புறம்போனான்,
பரும்பேருரகக் கொடி வேந்தன் பட்டான் மிகவும்
                                பரிபவமென்,
றரும்போரரசர்களித்தாடவவருந்தம் பாசறையடைந்தார்.

     (இ -ள்.) பெரு - பெருமைக்குணமுடைய, பேர் அறத்தின் திரு மகவை-
சிறந்த தருமராசனது அழகிய குமாரனான யுதிட்டிரனை, பிடிப்பான் எண்ணி-
(உயிரோடு) பிடித்துக்கொள்ளக் கருதி, முடிப்பான் போல் - (அவ்வாறு)
நிறைவேற்றவல்லான்போல், போர் பொரும் அரசருடன் வந்த- போர்செய்யவல்ல
(பல) அரசர்களோடு கூடிவந்த, பொன் தேர் முனிஉம் - அழகிய தேரையுடைய
துரோணனும், புறம் போனான் - புறங்கொடுத்து (ப் பாசறைக்கு)ச்  சென்றான்;
பருபேர் உரகம் கொடி வேந்தன் - பருத்த பெரிய பாம்புக்கொடியையுடைய
துரியோதனன், மிகஉம் பரிபவம் பட்டான்- மிகவும் அவமானமடைந்தான், என்ற -
என்றகாரணத்தால், அருபோர் அரசர் - (செய்தற்கு) அரிய போரில்வல்ல
(தன்பக்கத்து) அரசர்கள், களித்து ஆட - மிகமகிழ்ந்து கூத்தாட, அவர்உம்-
அப்பாண்டவர்களும், தம் பாசறை அடைந்தார் - தமது படை வீட்டைச்
சேர்ந்தார்கள்; (எ- று.)