தோன்றிப் பார்வதியென்று பெயர்பெற்றாள், தன்மைக்கு நிலை ஆன - குணத்திற்குஇடமான எனினுமாம். பி -ம்: வடவிந்தகிரி கன்னி. (135) 91. | அதிர்வார்களதிர்மின்களதிரப்பொரும்போரிலறன் மைந்தனோ டெதிர்வார்களுண்டாகிலிக்கங்குல்சென்றாலினிக் காணலாம் முதிர்வாய்மையாலென்ன பயனென்று வெஞ்சாப முனியேகினான கதிர்வார்முடிக்கோவுமரசர்க்குவிடைதந்துகண்டுஞ்சினான். |
(இ-ள்.) அதிர்வார்கள் அதிர்மின்கள்- வீணாரவாரஞ்செய்பவர்கள் செய்யுங்கள்;அதிர பொரும் போரில்- நடுக்கமுண்டாம்படி செய்யும் யுத்தத்தில், அறன்மைந்தனோடு எதிர்வார்கள் - தரும புத்திரனோடு எதிர்க்கவல்லவர்கள், உண்டுஆகில் - உள்ளாரானால் இ கங்குல் சென்றால்- இவ்விராத்திரி கழிந்தால், இனி -பின்பு [நாளைமுதல்], காணல் ஆம்- (அவர்திறத்தைப்) பார்க்கலாம்: முதிர் வாய்மையால்- வரம்புகடந்த வாய்ப்பேச்சுமாத்திரத்தால், என்ன பயன்-? என்று - என்றுசொல்லிவிட்டு, வெம் சாபம் முனி- கொடிய வில்லில்வல்ல துரோணன், ஏகினான் - (தன்இடத்துக்குச்) சென்றான்; கதிர் வார் முடி கோஉம்- ஒளியையுடைய நீண்ட கிரீடத்தையுடைய துரியோதனனும், அரசர்க்கு - (கர்ணன் முதலிய) அரசர்களுக்கெல்லாம், விடை தந்து - (செல்ல) அனுமதிகொடுத்து, கண்துஞ்சினான் - தூங்கினான்; (எ - று.) முன்னிரண்டடிகளோடு துரோணன் மறுமொழி முற்றுகின்றது. பின்னிரண்டடிகள் - அவ்வாறுகூறிய துரோணன் ஏக, யாவர்க்கும் விடை கொடுத்துத்துரியோதனன் துயின்றமையைத் தெரிவிக்கும். அதிர்வார்கள் அதிர்மின்கள் -வழுவமைதி. கதிர் - சூரியன்போன்ற என்றுமாம். பி- ம்: யாவர்க்கும் விடைதந்து. (136) 92.- பாண்டவர்கள் கண்துயிலுதல். மகதத்தரிற்சூரசஞ்சத்தகரிலுள்ளமகிபாலரும் பகதத்தனுந்துள்ளியெதிர்வந்தகாந்தாரபதிமைந்தருந் தகதத்தவெனவெங்களத்தூடுவிழவென்றதனுவேதியுஞ் சுகதத்தமுறவோடவென்றோர்களுங்கண்டுயின்றார்களே. |
(இ-ள்.) மகதத்தரில் - மகததேசத்துவீரரிலும், சூர சஞ்சத்தகரில்-வீரர்களான சஞ்சப்தகரிலும், உள்ள - சேர்ந்த, மகிபாலர்உம்- அரசர்களும், பகதத்தனும்-, துள்ளிஎதிர் வந்த காந்தாரபதி மைந்தர்உம்- மகிழ்ச்சியோடு கூத்தாடிக்கொண்டு எதிர்த்துவந்த காந்தாரதேசத்து அரசனான சகுனியின் பிள்ளைகள் இரண்டு பேரும், தகதத்தஎன வெம் களத்தூடு விழ - தகதத்தவென்னும் ஓசையுண்டாகக் கொடியபோர்க்களத்தில் இறந்து கீழ்விழவும்,- வென்ற தனுவேதிஉம்- பகைவெல்லுந்தன்மையுள்ள வில்வித்தை வல்ல துரோணனும், சுக தத்தம் உற ஓட - இன்பத்தையிழத்தலுண்டாகப் புறங்கொடுத்தோடவும்,- வென்றோர்கள்உம்- சயித்த பாண்டவர்களும், கண் துயின்றார்கள் - நித்திரைசெய்தார்கள்; |