(இ-ள்.) நஞ்சம்- விஷத்தையுடைய, வியாளம்- பாம்பின் வடிவத்தை, உயர்த்த- உயரத்திலெழுதியுள்ள, பதாகை- கொடியையுடைய, நர அதிபன் - துரியோதனராசனது, ஏவலினால் - கட்டளையினால், வரூதினி மன்னர்- சேனைகளையுடைய அரசர்கள்(பலர்), விசயனை மேலிடுவான்- அருச்சுனனை வெல்லும்பொருட்டு, விஞ்ச திரண்டனர்- மிகுதியாக ஒருங்குகூடினார்கள்; அவரால்- அவ்வரசர்களால், நெஞ்சு அழிவுண்ட - மனம்வருந்திய, தபோதனன்- துரோணன், நெருநலின்உம் கடுகி - நேற்றையப்பொழுதினும் விரைந்து, பஞ்சவர் கோ முதல்வன்தனை- பாண்டவரைவருள் முந்தினவனான தருமராசனை, வன்பொடு - வலிமையோடு, படை பொர - ஆயுதங்களாற் போர்செய்ய, எண்ணினன் - கருதினான்; (எ -று.) துரியோதனன்கட்டளையால் அநேக அரசர்கள் அருச்சுனனை வெல்லத் திரண்டது, 'நாங்கள், அருச்சுனன் தருமனுக்கு உதவியாகாதபடி தடுத்திடுகிறோம்; நீமுன் சொன்னபடி தருமனைப் பிடித்திடு, பார்ப்போம்' என்னுங் கருத்தை வெளியிட்டுத் துரோணனுக்கு வருத்தத்தை மூட்டுதலால், ' நெஞ்சு அவராலழிவுண்டதபோதனன்' என்றார். அவரால் - கர்ணன் முதலியோரால் எனினுமாம். பாண்டவரால் எனக்கொண்டு, முந்தினநாட் போரிற் பட்ட பரிபவத்தைக்குறித்தாகவும் உரைக்கலாம். நஞ்ச என எடுத்தால், குறிப்புப் பெயரெச்சமாம்.வ்யாளம்-வடசொல். கோமுதல்வனை - முதல்வனாகிய கோவையென்க. (140) 3,-இலக்கணமைந்தன்முதலோர் படைவகுப்பில் வந்து நிற்றல். இலக்கணமைந்தனுமைந்துடைமன்னவனிளைஞருமெம்முனையுங் கலக்குறவென்றகலிங்கருமுட்படுகாவலர்பற்பலருஞ் சிலைக்கைவயம்பெறுசிந்துநராதிசெயத்திரதன்சிரமா நிலக்கணெழுந்துகள்வானிடைசென்றிடநின்றனர்பேரணியே. |
(இ-ள்.) இலக்கண் மைந்தன்உம் - லக்ஷணகுமாரனும், மைந்து உடை மன்னவன் இளைஞர்உம்- வலிமையையுடைய துரியோதனன் தம்பிமாரும், எ முனைஉம் - எல்லாப்போர்களிலும், கலக்கு உற- (பகைவர்க்குக்) கலக்க முண்டாம்படி,வென்ற - (முன்பு) சயித்துள்ள, கலிங்கர்உம்- கலிங்கநாட்டு வீரரும், உள் படு -(என்னும் இவர்கள்) உள்ளிட்ட [இவர்கள்முதலான], காவலர் பல்பலர்உம்- மிகப்பலஅரசர்களும், சிலை கை வயம் பெறு- வில்லையேந்திய கையின் வலிமை பெற்ற,சிந்து நர ஆதி - சிந்துதேசத்துச் சனங்களுக்குத் தலைவனாகிய, செயத்திரதன்-ஜயத்ரதனை, சிரம் ஆ - (தங்களுக்குத்) தலைமையாகக் கொண்டு, நிலக்கண் எழும்துகள் வானிடை சென்றிட - (சேனைகளால்) பூமியிலே மேலெழுந்த தூளிஆகாயத்திற் செல்லும்படி, பேர் அணி நின்றனர் - பெரிய படைவகுப்பில் ஒருங்குநின்றார்கள்; (எ - று.) (141) 4.- துரோணன் தன்சேனைகளைச் சக்கரவியூகமாக வகுத்தல். அக்கரம்யாவுமுணர்ந்தசிலைக்குருவாசுரர்சேனைநடுச் சுக்கிரனார்நிகரென்னவகைப்படுதூசியின்மாமுறையே |
|