யெக்கரமும்படை கொண்டெழு சேனையையெயில்கள் வளைப்பனபோற் சக்கரயூகம்வகுத்திரதத்திடைச்சயமுறநின்றனனே. |
(இ -ள்) அக்கரம் யாஉம் உணர்ந்த- எல்லாஇலக்கணங்களையும் அறிந்த, சிலை குரு - வில்லாசிரியனான துரோணன், அசுரர் சேனை நடு - அசுரர்களது சேனையின் மத்தியில், சுக்கிரனார்- (அவர்களுக்குச்சேனைத்தலைவராய் நிற்கிற) சுக்கிராசாரியார், நிகர்- (தனக்கு) ஒப்பு, என்ன- என்று சொல்லும்படி, வகை படு தூசியின் மா முறைஏ - பிரிக்கப்படுகிற படைவகுப்பிற்குரிய சிறந்தமுறைமைப்படியே, எ கரம்உம் படை கொண்டு எழு சேனையை - கைகளிலெல்லாம் ஆயுதங்களேந்திக்கொண்டு (போருக்கு) எழுந்த சேனைகளை, எயில்கள் வளைப்பன போல்- மதில்கள் சூழ்வனபோல, (சுற்றிலும் இடைவிடாது சூழ்ந்திருக்கும்படி), சக்கரயூகம் வகுத்து- சக்கரவியூகமாக அணிவகுத்து, இரதத்திடை- தேரின்மீது, சயம்உற நின்றனன்- வெற்றியுண்டாக நின்றான்; ( எ-று.) பதின்மூன்றாநாளில் துரோணன் பதுமவியூகம் வகுத்ததாகவும் அதனுள் அபிமன் அகப்பட்டு இறந்ததாகவுமே பிரசித்தம்; இங்ஙனமே முதனூலாகிய வடமொழி வியாசபாரதத்திலு முள்ளது; பெருந்தேவனாரோ 'காலிங்கராசனையும் கௌசலேசுரனையும் வணிகரையும் சூரசேனரையும் சுற்று முற்றும் அதற்கு விளிம்பாக நிறுத்தி, லக்ஷணகுமாரனையும் எழுபத்தாறாயிரந்தேராட்களையுந் துரியோதனனையும் நடுவண் நிறுத்தி, சயத்திரதனையும் பல பதினாயிரம் யுத்த வீரரையும் தூசிமுகத்தின்கண் நிற்பாராக்கிச் சக்கர மென்னும் யூகம் வகுத்து' என்றார். சக்கரவியூகம் - சக்கரவடிவமாகச் சேனையை ஒழுங்குபட நிறுத்தல். நாற்புறத்தும் பயமுண்டாம்போது சக்கரவியூகம் வகுக்கத்தக்கதென்றும், அது எட்டுச்சுற்றுடன் ஒருவழியையே யுடையதென்றும், சுக்கிரநீதி கூறும்; அம் முறைமையை அறிந்து சமயோசிதமாகச் செய்த வல்லமைக்கு, சுக்கிரனையே உவமைகூறினார்: வடநூலிலும் இவ்வுவமை கூறப்பட்டுள்ளது. அக்கரம்- அக்ஷரம்; எழுத்து: எனவே, அதனோடு ஒற்றுமையுடைய சொல்லும் அடங்கிற்று; இது- ஆகுபெயராய் இலக்கண நூலை யுணர்த்துதலை, "எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டும், கண்ணென்ப வாழுமுயிர்க்கு" என்றவிடத்திலுங் காண்க. இனி, அக்கரமென்பது - எல்லா நூலுக்கும் இலக்கணை யென்றலும் ஒன்று. ஏகாக்ஷரம், பஞ்சாக்ஷரம், ஷடக்ஷரம் அஷ்டாக்ஷரம், துவாதசாக்ஷரம் முதலிய மந்திரங்களுமாம். அக்கரம்- அழியாப் பொருள் என்று கூறினாருமுளர், ஆசுரர்- அசுரர் என்பதன் நீட்டல். சுக்கிரன் - அசுரர்க்குக்குருவும், புரோகிதனும், பிரதான மந்திரியும், படைத்தலைவனுமாவன்; ஆர் என்னும் பலர்பால்விகுதி, சிறப்புப்பொருளது. கரம் - பக்கமுமாம். (142) 5.- தருமன் மாற்றாரெண்ணத்தையுணர்ந்து அருச்சுனனிடம் அதனைத்தெரிவித்துப் போர்க்களத்து உக்கிரமாக நடத்தல். ஒப்பறுபோரினில்வாகைபுனைந்தவுதிட்டிரனன்றடையார் தப்பறவெண்ணியவெண்ணமுணர்ந்துதனஞ்சயனுக்குமுரைத் |
|