தப்பறுகோடையில்வெங்கதிரோனெனவாகவநீடளவித் துப்புறுசிந்தைமகீபர்வரூதினிசூழநடந்தனனே. |
(இ-ள்.) ஒப்பு அறு - உவமையில்லாத, போரினில் - (முந்தின நாளை) யுத்தத்தில், வாகை புனைந்த - வெற்றி மாலையைச் சூடிய, உதிட்டிரன்-, அன்று -அன்றைக்கு, அடையார் - பகைவர்கள், தப்பு அற- தவறுதலில்லாதபடி, எண்ணிய -ஆலோசித்த, எண்ணம்- நினைப்பை, உணர்ந்து - (ஒற்றரால்) அறிந்து, தனஞ்சயனுக்குஉம் உரைத்து- (அதனை) அருச்சுனனுக்குங் கூறி, அப்பு அறு கோடையில் வெங்கதிரோன் என - சீர்வற்றிய கோடைக்காலத்துச் சூரியன்போல [மிக உக்கிரமாக], நீடு ஆகவம் அளவி - பெரிய போர்க்களத்தைச் சேர்ந்து, துப்பு உறு சிந்தை மகீபர் வரூதினி சூழ வலிமைமிக்க மனத்தையுடைய அரசர்களும் சேனைகளும் சுற்றிலும் வர, நடந்தனன்- வந்தான்; (எ-று.)- எண்ணம் - இரண்டாங்கவியிற் கூறியது. பி -ம் : ஆகவநீள்வரிவில். (143) 6.- பாண்டவரின் சேனை மிகுதி. ஈரிருதேரினர்மூவகையானையரெண்ணறுமாமிசையோ ரோரிருநாலுடையைபிருபூமியிலுள்ளபதாதருடன் பாரிருநாலுகிசாமுகமும்படையோடுபரந்துவரும் பேரிருமானவரூதினியின்றிரள் பேசுறலாமளவோ. |
(இ -ள்.) ஈர் இரு தேரினர் - நால்வகைத் தேர்வீரர்களும், மூவகை யானையர் - மூன்றுவகை யானையின் மேலேறிய வீரர்களும், எண் அறு மா மிசையோர் - கணக்கற்ற குதிரைகளின்மே லேறிய வீரர்களும், ஓர் இரு நால் உடை ஐ இரு பூமியில் உள்ள பதாதருடன் - பதினெட்டுத் தேசங்களிலுள்ள காலாள்வீரர்களும் ஆகிய இவர்களோடு. பார் இரு நாலு திசாமுகம்உம் - பூமியின் எட்டுத் திக்குக்களினிடத்திலும், படையோடு பரந்து வரும் - ஆயுதங்களோடு பரவிவருகிற, பேர் இரு மானம் வரூதினியின் திரள் - பிரசித்தி பெற்றதும் பெரியதும் மானத்தைக்காப்பதுமான ( பாண்டவ ) சேனையின் கூட்டம், பேசுறல் ஆம் அளவுஓ - சொல்லுதற்கு ஏற்ற அளவுடையதோ? ( எ-று.)- அன்று; சொல்லவொண்ணாதபடி அளவிறந்தது என்பதாம். அதிரதர், மகாரதர், சமரதர், அர்த்தரதர் எனத்தேர்வீரர் நால் வகைப்படுவர். அதிரதர்- முழுத்தேரரசர்; அவராவார் - ஒருதேரில் ஏறிநின்று தம்தேர் குதிரை சாரதிகளுக்கு அழிவுவாராமற் காத்துப் பலவாயிரந் தேர்வீரரோடு எதிர்த்து வேறு துணையில்லாமலே போர் செய்து வெல்லும் வல்லமை யுடையார். அவரிற் சிறிது தாழ்ந்தவர் - மகாரதர்; இவர் பதினோராயிரந் தேர் வீரரோடு பொருபவர். சமரதர்- ஒரு தேர் வீரனோடு தாமும் ஒருவராய் எதிர்க்க வல்லவர். அர்த்தரதர்- அவ்வாறு எதிர்க்குமளவில் தம் தேர்முதலியவற்றை இழந்து போம்படியானர்; இவர் இருவர் சேர்ந்தால், ஒரு சமரதனுக்கு ஒப்பாவார். இனி, இரண்டுசக்கரம் நான்குசக்கரம் ஆறு சக்கரம், எட்டுசக்கரம் என்றார்போலத் தேரில் நான்குவகை கூறவுங் கூடும். |