குருபதியுந்திருமாலுமதிக்கவணிந்தடுகோளரிபோற் றுருபதன்மைந்தனுநின்றனனந்தரதுந்துபிமீதெழவே. |
(இ-ள்.) துருபதன்மைந்தன்உம் - (பாண்டவசேனாபதியாகிய) துருபத குமாரனான திட்டத்துய்மனும் வரு படைதன்னை- (போருக்கு) வருகின்ற (தன் சேனையை, விதம் பட நிறுத்தி - ஒழுங்குபட நிற்கவைத்து, மகரவியூகம் வகுத்து - மகரவியூகமாக அமைத்து, 'இ பகலுக்கு - இந்நாளைவியூகத்துக்கு, இனி ஒரு பகல் யூகம் உம் - வேறு ஒரு நாளை யூகமும், ஒப்பு அல- ஒப்பாகமாட்டாது', என்றிட- என்று (கண்டவர்) கருதவும், குருபதிஉம் - குரு குலத்தலைவனான தருமனும், திருமால்உம் கண்ணனும், மதிக்க - நன்கு மதிக்கவும், அணிந்து -அணிவகுத்து, அடு கோள் அரி போல்- ( மற்றைவிலங்குகளை) அழிக்கவல்ல வலிய ஆண்சிங்கம்போல, அந்துர துந்துபி மீது எழ- ஆகாயத்தில் (தேவர்கள் கொண்டாடி முழங்குந்) துந்துபிவாத்தியம் மிக்குஒலிக்க, நின்றனன்- (தனது தலைமைதோன்ற) நின்றிட்டான்; (எ - று.) முன்னே பயகாரண முள்ளபொழுது மகரவியூகம் அமைக்கத் தக்கதென்றும், அது நான்குகால்களையும் நீண்டபருத்தமுகத்தையும் இரண்டுவாயையு முடைய தென்றும் சுக்கிரனார் கொள்கை. நிலவுலகத்தில் வியக்கத்தக்க செய்கையைக் கண்டால், தேவர்கள் வானத்தில் துந்துபிமுழக்குதல், இயல்பு. பெருந்தேவனார் பாரதவசனத்தில் மண்டல மென்னும் வியூகமென்று கூறியுள்ளது. (145) 8.- அணிவகுத்துஇருசேனையும்நின்றபின் சஞ்சத்தகர் அருச்சுனனை அறைகூவ அவனேகுதல். இத்தகவாகவணிந்திருசேனையுமெதிர்முனையும்பொழுதின் முத்தகவெண்குடைமன்னவனேவலின்முற்பகலின்படியே மத்தகமாமுதலாகியநான்மைவரூதினிதன்னொடுசஞ் சத்தகர்வந்தறைகூவவெகுண்டுதனஞ்சயனேகினனே. |
(இ -ள்.) இ தகவு ஆக- இவ்விதமான, இரு சேனைஉம் - இருதிறத்துச் சேனைகளும், அணிந்து - அணிவகுக்கப்பட்டு, எதிர் முனையும் பொழுதில்,- முத்துஅகம் வெள்குடை மன்னவன் ஏவலின் - முத்துக்களைத் தன்னிடத்தேயுடைய ஒற்றை, வெண்கொற்றக்குடையையுடைய துரயோதனனது கட்டளைப்படி, முன் பகலின்படி ஏ- முந்தினநாளிற்போலவே, சஞ்சத்தகர்- சம்சப்தகர்கள், மத்தகம் மா முதல் ஆகிய- மஸ்தகத்தையுடைய யானை முதலான, நான்மை வரூதினி தன்னொடு - நால்வகைச்சேனைகளுடனே, வந்து- ( எதிரில்) வந்து, அறை கூவ - வலிவிற் போருக்கு அழைக்க, தனஞ்சயன் - அருச்சுனன், வெகுண்டு - கோபித்து, ஏகினன்- (அவர்களோடு போர்செய்யச்) சென்றான்; ( எ-று.) தன்னைப் போருக்கு அழைப்பாரோடு தவறாமற்பொருதலை விரதமாகப் பூண்டவனாதலால், அருச்சுனன் இங்ஙனஞ் செல்பவனானான். சஞ்சத்தகர் அருச்சுனனைத் தனியே அழைத்துப்போனது |